ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்
Phone : 9500326541 
Email : info@yourastrology.co.in

  • Welcome Guest
வாக்கிய பஞ்சாங்கம் ,திருக்கணித பஞ்சாங்கம் சாப்ட்வேர் எங்களிடம் கிடைக்கும். இதை பற்றி முழு விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
மேஷம் சனிப்பெயர்ச்சி பலன்கள்

2011-aries-sanipeyarchi 2011-taurus-sanipeyarchi 2011-gemini-sanipeyarchi 2011-cancer-sanipeyarchi 2011-leo-sanipeyarchi 2011-virgo-sanipeyarchi
2011-libra-sanipeyarchi 2011-scorpio-sanipeyarchi 2011-sagittarius-sanipeyarchi 2011-capricorn-sanipeyarchi 2011-aquarius-sanipeyarchi 2011-pisces-sanipeyarchi

மேஷ ராசி நேயர்களுக்கு,



      மேஷம் என்பது இராசி மண்டலத்தில் முதல் இராசி ஆகும். இது காண்பதற்கு ஆடு போல                    தோற்றமளிப்பதால் ஆடு  போல தோற்றமளிப்பதால் ஆடு எனும்பொருள் தரும் "மேஷம்" எனும் பெயர் வந்தது. இது பூஜ்யம் பாகை முதல் முப்பது பாகை வரையில் காணப்படும். . இந்த இராசிக்குரிய கோள் செவ்வாய் ஆகும். சூரியன் இந்த ராசியில் இருக்கும்பொழுது அந்த மாதத்தை மேஷம் மாதம் என்பர். தமிழில் இந்த மாதத்தினை சித்திரை என்று கூறுவர்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்:

   *பொறுமையான நடவடிக்கைகள் தற்போது வேண்டும். சனிக் கிரகமானவர் தற்போது 'ராசிக்கு 7ல் உச்சமாக சஞ்சரிக்க போகிறார். இதன் காரணமாக பொதுவாக பண வருமானம் மட்டும் மிக அதிக அளவில் வரக்கூடும். ஆயினும் செலவுகள் மட்டும் மிக அதிக அளவில் உண்டாகக் கூடும். ஆகவே செலவை கட்டுப்படுத்த வேண்டும்.' அதுவே இப்போது அவசியம்.

* உங்கள் ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும். குடும்பத்தில் புத்திர வழியில் உண்டாகிய மருத்துவச் செலவுகள் குறையும். வளமும் கூடும் காலமாகும்.

   * புதிய முயற்சிகள் வெற்றி உண்டாக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். பண விஷயத்தில் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும்.

    * மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும். பொருளாதார முன்னேற்றம் மிகவும் சாதகமாக அமையும். அரசாங்க வழியில் உதவிகள் நெருங்கிய உறவினரகள் பெரியோர்களது ஆலோசனைகள் நற்பலன் ஏற்படுத்தும். கமிஷன் ஏஜென்சி போன்றவை யோகம் கொடுக்கும்.

       * ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். அதிகாரிகளிடமிருந்து  அன்பான அழைப்பும் பரிசும், பாராட்டும், சம்பள  உயர்வும் அலுவலர்களிடமிருந்து மதிப்பும் மரியாதையும் எளிதில்  கிடைக்கும்.

      * பொருட்களை விற்பதில் சாமார்த்தியம் உண்டாகும். புதிய கொள்முதல் மூலம் லாபம் உண்டு. வெளிவட்டார பொருளாதார வகையில் தன்னிறைவை உண்டாக்கித் தரும். கூட்டுத் தொழிலில்  யோகம் தராது.

        * நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கணவனின் அன்பு நன்றாக இருக்கும். பிள்ளைகளால் பெருமையும். பூரிப்பும், உண்டாகும். சிலர் புதிதாக வாழ்க்கையை தொடங்குவர். சிலர் வீட்டில் குழந்தை பாக்கியம்  உண்டாகும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.  

          *எதிர்ப்பார்த்த மதிப்பெண்கள் எளிதில் வரும். சிலருக்கு தலைமை ஆசிரியரின் பாராட்டும் சான்றிதழும் கிடைக்கும். சிலர் விளையாட்டுத் துறையில் சாதனை செய்வார். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும்.

        * அரசியல்வாதிகளுக்கு,  உங்கள் கெளரவம், புகழ், பதவி பெருமை யாவும் கூடும் காலமாகும்.

         * எதிர்பார்த்த விளைச்சல் ஏற்றத்தை உண்டாக்கும். புதிய கருவிகள் வாங்குவீர்கள். கரும்பால் பெருத்த யோகம் உண்டாகும். உங்களின் விளை பொருளுக்கு ஏற்படும் பற்றாக்குறையால் சாதகமான  லாபங்களை  அடைந்து தன்னிறைவை   அடைவீர்கள்.

        * விருதுகள் கிடைக்கும். பலரின் ஏகோபித்த பாராட்டும் வந்து சேரும். அரசால் ஆதரவு கூடும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். திடீர் தனவரவு உண்டாகும்.


  நட்சத்திர பலன்கள் :

   * அசுவினி  :   உங்கள்  குடும்ப வாழ்வு சீராக இருக்கும். குடும்பத்தில்; சுபகாரிய முயற்சியால் பொருள் செலவு உண்டாகும். கொடுக்கல்  -  வாங்கல் திருப்தியைக் கொடுக்கும்.

      * பரணி: கணவன் - மனைவி ஒற்றுமை சுமாராக இருக்கும். புதிய முதலீடு செய்து புதிய   தொழில்      தொடங்குவதைத்   தவிர்க்க வேண்டும்.

       * கிருத்திகை 1 ஆம் பாதம்:
                        திருமணம் நடை பெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.புதிய செலவுகள் ஏற்படும். வீண் அலைச்சல் வெளியூர், பயணம் உண்டாக்கும்.

தெய்வ வழிபாடு
:
  * முருகப் பெருமான் வழிபாடு சிறப்பான பலனைத் தரும் .  அறுபடை வீடுகள், வயலூர், குன்றக்குடி, விராலிமலை, திருத்துறைப் பூண்டி, வடபழனி, எட்டுக்குடி போன்ற முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களை வழிபட்டு வரலாம். கார்த்திகை விரதம், கந்தசஷ்டி  விரதம் மேற்கொள்ளலாம்.  வைகாசி விசாகத் தன்று முருகனை தரிசனம் செய்யலாம். முருகனைப் போன்றே வீரியமுள்ள வீரபுத்திரர், கருப்பசாமி, மாடசாமி, வனக்காளி, பத்ரகாளி போன்ற  தெய்வங்களை வழிபட்டு வருவதும்; நன்மை தரும்.



jathaga kattam,aayul,thirumanam,tholil,kadal,150









Name :
Email :

Phone :

+

Question:

If You Enter Tamil , visit TamilEditor.org