Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

கும்ப ராசி நேயர்களுக்கு(2014 TO 2017)


  

கடமையிலேயே கவனமாக இருப்பதும், காரியங்களை உடனுக்குடனே செயல்படுத்துவதும், உங்களுடைய இயற்கையான சுபாவம். நடைமுறையில் என்னதான் இடையூறுதல் வந்தாலும், அவற்றையெல்லாம் சகித்துக் கொண்டும் சமாளித்துக் கொண்டும், முடிகிறவரையில் உங்களுடைய பொறுப்புகளை மும்முரமாகத்தானே நடத்திக்கொண்டு வருகிறீர்கள். இப்போழுது குருபகவான் 6ம் இடத்தில் சஞ்சரித்தாலும், உச்ச, பலத்துடன் ஜீவன காரிய ஸ்தானத்தையும் தன குடும்ப ஸ்தானத்தையும் பார்வையிட்டுக் கொண்டிருப்பதால், அடிப்படையான பாதிப்பு ஏதுவுமில்லை. ஆகவேண்டிய வேலைகள் ஆகும். வரவேண்டிய பணம் வரும். குடும்ப சுபிட்சத்துக்கு ஒன்றும் குறைவு கிடையாது. சாயாகிரகங்களில், ராகு 8ம் இடத்திலும் கேது 2ம் இடத்திலும் இப்பொழுது சஞ்சரிப்பது சாதகமான நிலவரம் அல்ல. இவர்கள் குறைகளையும் குதர்க்கங்களையும் குறுக்கிட வைத்துக் கொண்டிருப்பார்கள்.

சனிபகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி 16-12-2014 ( ஐய வருவம் மார்கழி மாதம், 1ஆம் நாள்) செவ்வாய்க் கிழமை, பிற்பகலில் சனிப்பெயர்ச்சியாகும்.

2வருடங்களுக்கும் மேலாக உங்கள் கும்ப ராசிக்கு 9 ம் இடமான துலாராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சனிபகவான், இப்போழுது 10ம் இடமான விருச்சிகராசியில் பிரவேசம் செய்கிறார்.

முயற்சி ஏதுவும் சுலபமாக இருக்காது. படிப்பையும், பயிற்சியையும், முடித்துவிட்டு இப்போழுது வேலை தேடுகிற படலத்தில் இருக்கிறீர்கள். என்றால், சட்டுப்புட்டென்று சரியான வேலை கிடைப்பது கடினம்தான். சுற்றலும் சுணக்கமும் சகஜம்தான். அப்படியே வேலை கிடைத்தது என்றாலும் 10ம் இடத்து சனியால், அது உங்களுடைய படிப்புக்கும் தகுதிக்கும் பொருத்தமான வேலையாக இருக்கும் என்றோ, சமர்த்தியத்தைப் பயன்படுத்திச் சடசடவென்று முன்னேறுவதற்கு ஏற்றதாக இருக்கும் என்றோ, சுலபமாகப் பொறுப்புகளைச் செய்து முடித்துக் கொண்டு சுக சௌகரிய வசதிகளைப் பெருக்குவதற்கு ஆதாரமாக அமையும் என்றோ சொல்வதற்கில்லை.

சுயமாகத் தொழில் செய்ய முயற்சிப்பது, சொந்தமாக வியாபாரம் செய்ய இறங்குவது ஆகியவற்றிலும், ஒவ்வோர் அடியை எடுத்து வைக்கும்போதும் உபத்திரவங்களைத்தான் சந்திக்க வேண்டிருக்கும். ஏற்கனவே உத்தியோகம், வியாபாரம், தொழில்துறை, கலைஈடுபாடு என்று ஜீவனத்தை அமைத்து நெடுங்காலம் நடத்திக்கொண்டு வருபவர்களை மட்டும் சனிபகவான் சும்மா விட்டிருக்க மாட்டார். பொதுவாக எந்த வேலையிலேயுமே தொந்தரவுகளைத் தருவதுதான் சனிபகவானின் குணம் என்பதை, அவரவர்களுடைய அனுபவமே அப்பட்டமாகத் தெரிந்து கொள்ள வைத்துவிடும்.

எதை செய்ய ஆரம்பித்தாலும், எடுத்தோம்முடிதோம் என்றில்லாமல் இழுபறியாகும். ஆனாலும், பொறுப்புகள் மேன்மேலும் சேர்ந்து கொண்டேயிருக்கும். ஒரு வேலையை முடிப்பதற்குள்ளாகவே அடுத்தடுத்த வேலைகள் வந்து நெருக்கும். அதைக் கவனிப்பதா, இதை செய்வதா, எதை முடிப்பது என்று, அதற்கும் இதற்குமாக அல்லாடும்படியாகும். அதைச் செய்தால் இதுவும், இதைச் செய்தால் அதுவும், தொட்டது பாதிவிட்டது மீதியாக நிற்கும். தடைதாமதங்கள் அடிக்கடி குறுக்கிடும். இன்ன நேரத்தில், இன்ன சமயத்தில், இன்னின்ன வேலைகளைச் செய்துவிடலாம். முடித்துவிடலாம் என்கிற அவசரத் திட்டங்கள் எதுவும் சனிபகவானிடம் பலிக்காது. உடனடியாக முடியக்கூடியதைக் கூட இழுஇழுஎன்று இழுத்துவிடுவார். சுலபமாக முடியக்கூடியதைக்கூட கடினமாக்கிக் கஷ்டப்படுத்திவிடுவார். உருப்படியில்லாத விஷயங்களுக்குக்கூட ஊசியை உலக்கையில் குத்தித் தூக்கிக் கொண்டு வந்த கதையாக உபத்திரவப்படுத்துவார். மலையைப் புரட்டி எலியைப் பிடித்தது மாதிரியும், அற்ப சொற்பமான காரியங்களுக்காக அதிகப்படியாகப் பிரயத்தனப்படும்படி ஆட்டி அலட்டி எடுத்துவிடுவார்.

10ம் இடத்தில் சஞ்சரித்துவரும் சனியின் கெடுதலான பார்வைகளில் ஒரு பார்வை விரய ஸ்தானத்தின் மீது பதிகிறது. இதனால் தண்டச் செலவுகள் அதிகப்படும். அதே சமயத்தில் வசதி வாய்ப்புகளை முன்னிட்டுத் தாராளமாகச் செலவு செய்துகொள்கிற சக்தியும் முடங்கும். நீண்ட தூரப்பயணம், வெளிநாட்டுப் பிராயாணம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், சட்டுபுட்டென்று ஏற்பாடுகள் கைகூடி வராமல் தட்டிப்போகும். சனிபகவானின் இன்னொரு பார்வை, வித்யாபோஜன சுக சௌகரிய சொத்து மாத்ருபந்து ஸ்தானமான 4ம் இடத்தின் மீது பதிக்கிறது. இதனால் படிப்புகளும் பயிற்சிகளும் கூட சுலபமாக இல்லாமல் சிரமப்படுத்தும்.

நீங்கள் நேரா நேரத்திற்கு சுவையாகவும், சரியாகவும் சாப்பிடக்கூட முடியாமல் தட்டிப் போவதும் தாமதமாவதும் அடிக்கடி உண்டு. அதிகப்படியான உழைப்பு, அலைகழிப்பு, ஆகியவற்றாலும் உடம்பைச் சரிவரக் கவனித்து கொள்ள முடியாமலும், அவ்வப்போது அஜீரணம், பித்த உபாதைகள், மூட்டுப் பிடிப்புகள், வாத நலிகள், கைகால்குடைச்சல்கள் என்றெல்லாம் அசௌகரியங்கள் உறவாடும்.

தாயாருக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுவது சகஜம். முன்னைவிட ஊக்கமும் தெம்பும் குறைந்து ஏதாவது, சீக்கு சவாப்பு என்று அசௌகரியப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு மனக்குறையும் அதிகப்படும். சொந்தம் பந்தங்களிடமும் போதுமான நல்லிணக்கம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நெருங்கிய சிநேகிதர்களிடமும் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களிலும் சனிப்பார்வை விகல்பத்தை ஏற்படுத்தலாம்.

வாகனப் பராமரிப்பு, போக்குவரத்துகள், மாடு, கன்று, ஆடு, குதிரை என்று கால்நடை வளர்ப்பு ஆகியவற்றிலும், சனியின் கெட்டபார்வை சங்கடங்களைப் புகுத்தும். அதிலும், எருமை மாடுகளென்றால் ரொம்பவும் படுத்தும். சனீஸ்வரனே எருமைமாடு உருவத்தில் வந்து படுத்திவைக்கிறது மாதிரிதான்.  சரி, சனிபகவானின் இன்னொரு பார்வை மீதமிருக்கிறது. 10ம் இடத்தில் சனிபார்க்கும் அந்த நீண்ட பார்வை, உங்கள் ராசிக்குக் களத்திர கூட்டுறவு ஒப்பந்த ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் கல்யாண சுபகாரியங்களும் இழுபறியாகிக் கொண்டிருக்கும்.

ஏற்கனவே கல்யாணம் ஆனவர்களின் பாடே பெருத்திண்டாட்டத்தில் இருக்கிறதே. கணவன் மனைவி இரண்டு பேர்களில் யாருக்காவது மாற்றி மாற்றி உடம்பு அசௌகரியப்படும். அதிகப்படியான பொறுப்பும் கடுமையான அலைக்கழிப்புமாவது, அலுக்கவும் சலிக்கவும் வைக்கும். ஒருவரை குறை சொல்வதற்கும் குதர்க்கம் பண்ணுவதற்கும் குறைச்சலே இருக்காது. விகல்பமான இடைவெளியோ, வேலைகாரணமான பிரிவோ இருந்தாலும் கூட ஆச்சரியப்படுதற்கில்லை. எல்லாம் சனிபார்வை பண்ணுகிற விஷம வேலைகள்தான்.

2 ½ வருடங்கள் சனி இப்படிப் படுத்தினாலும், 2015 ஜூலை முதல், 2015 ஆகஸ்ட் வரை குரு பலத்தால் திருமணம் நடைபெறுவதற்கும், பணவருமானப் பெருக்கம், பொன், பொருள் சேர்க்கை, வீடு, வாகன வசதிகள், புத்திர பாக்கிய சந்தோஷம் என்றெல்லாம் உண்டாவதற்ம் பல நல்ல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

மற்றபடி சனியின் இந்தக் கெட்ட பார்வை, கூட்டுறவு முயற்சிகள், ஒப்பந்த விஷயங்கள் ஆகியவற்றையும் இணக்கம் கெடும்படியாகச் செய்யலாம்.

ஆக, 10ம் இடத்துச் சனியின் சஞ்சாரமும் சரி, அவருடைய பார்வைகளும் சரி, உங்களுடைய உடல்நலம், செயல்பாடுகள், கடமைகள், வசதி வாய்ப்புகள், இல்லற ஈடுபாடுகள், சுக சௌகரியங்கள் ஆகிய அனைத்திலும் அதிருப்தியையும் அல்லல்களையும் கொடுக்கும் என்ற முடிவுக்குதான் வரவேண்டிருக்கிறது.

மொத்ததில் 55 % நன்றாக இருக்கும் .

 

பரிகாரம்

பிரதி தினம் விநாயகரை வழிபடவும் அவருக்கு மாதுளை பழத்தை நைவேத்தியம் செய்து வரவும் . காக்கைக்கு சனிக்கிழமைகளில் எள்ளு சாதம் வைக்கவும்.வீட்டில் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றவும் நல்லது நடக்கும்

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter