Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

மேஷம்

தின பலன் | வார பலன் | மாத பலன்

2018 வருட பலன்

மேஷம்   (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் முடிய) 

                வாக்கு சத்துர்யமும், வசீகரப் பேச்சுத்திறனும் கொண்ட மேஷராசி நேயர்களே உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2018 ஆம் ஆண்டுமுழுவதும் சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ம் ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் அமைப்பாகும். மேலும் படிக்க...

குருப்பெயர்ச்சி பலன்கள்:

      உங்கள் ராசிக்கு தற்பொழுது 6ம் இடத்தில் உள்ள குரு 2.9.2017 7ம் அன்று 7ம் இடமாகிய துலாமிற்கு   வருகிறது.  இது மிகப் பெரிய நன்மையை செய்யும் அமைப்பு. அஷ்டமச் சனியால் ஏற்படக் கூடிய அனைத்துவிதமான இன்னல்களிலிருந்து எழில் உள்ள குரு மிகப் பெரிய விடுதலை வழங்கப் போகிறது. நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நல்ல நேரம் வந்துவிட்டது. அஷ்டமச்சனியால் 3 வருடங்களும்,6ல் குருவால் 1 வருடமும் சொல்லொன்னா துன்பங்களுக்கு நீங்கள் ஆளாகி இருக்கக்கூடும். இனி வருவதெல்லாம் நல்ல காலம்தான். 7 இடத்துக்கு வரப்போகும் குரு மிகப்பெரிய நன்மையை செய்ய இருக்கிறது.பல வருடங்களாக முயற்சி செய்து முடியாத விஷயங்கள் இப்பொழுது வெற்றிகரமாகமுடிந்துவிடும். குடும்பத்திற்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். உங்களோடு  பகைமை உணர்வு கொண்டவர்கள் எல்லாம் இப்பொழுது மீண்டும் நட்புக்கரம்  நீட்டுவார்கள்.இந்த மாற்றத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டு அனைவரோடும் இன்முகத்துடன் மகிழ்ச்சியாகப்  பேசிப் பழகுங்கள். எல்லோரிடமும் ஏதேனும் குறைகள் இருக்கத்தான் செய்யும். அதற்காக தனிமையில் உட்கார்ந்து கொண்டிருக்க முடியுமா குற்றம் காணில் சுற்றம் இல்லை. எனவே நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களிடம் நட்புறவுடன் பேசிவரும் உறவினர்களையும் நண்பர்களையும் பகைத்துக் கொள்ளாமல் அரவணைத்து செல்லுங்கள்.மேலும் படிக்க

சனிப்பெயர்ச்சி பலன்கள்

இராசி மண்டலத்தின் முதலாம் ராசியான மேஷராசி, உங்கள் ஜென்மராசி! ஆனாலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் முதல் தரமாகவும் இல்லை. முன்னணியிலும் இருக்கவில்லை – முன்னேற்றம் சொல்லும்படியாகவும் பிரமாதமாக ஏதுவும் நடக்கவில்லை. உள்ளத்தில் கலக்கம் – உடல்நலத்தில் அசௌகரியம் – உழைக்கும் பொறுப்பு எதிலேயும் உபத்திரவம் என்றிருந்த நிலவரம்தான் அதிகம். இந்த நிலைமையில் சனிபகவான் இதுவரை இருக்கிற இடத்திலிருந்து பெயர்ச்சியடையப் போகிறார் என்பது, நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்.. மேலும் படிக்க

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

      ராகு கேது பெயர்ச்சி ஜூலை மாதம் 27ம் தேதியன்று ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்கு நன்மைகளை அதிகமாக செய்யும் என்று உறுதியாக நம்பலாம். 2.9.2017 அன்று நிகழவுள்ள குருப்பெயர்ச்சியும், மேஷராசிக்கு சாதகமாகத்தான் உள்ளது. 19.12.2017 அன்று நிகழவுள்ள சனிப்பெயர்ச்சி மிகப்பெரிய நன்மையை செய்யும். அன்றுதான் அஷ்டமச்சனி முடிவடைகிறது. 5ம் இடமாகிய சிம்மத்தில் இருக்கும் ராகு ஆடி 11, அதாவது 27, ஜூலை அன்று 4ம் இடமாகிய கும்பத்தில் இருக்கும் கேது 10ம் இடமாகிய நகரத்திற்கு வருகிறது. இவ்வாண்டில் நிகழவிருக்கும் மூன்று முக்கியமான கிரகப்பெயர்ச்சிகளான ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி ஆகியவை மேஷராசிக்கு நல்ல இடங்களுக்கு வருவதால் இதுவரை ஏற்பட்ட தடைகள் எல்லாம் நீங்கி திட்டமிட்ட பணிகள் அனைத்தும் வெகு சிறப்பாக நடைபெறும். 4,10 ஆகிய இடங்களுக்கு ராகு கேது வரப்போகும் இந்த நேரத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பார்ப்போம். 

.மேலும் படிக்க

 

 

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter