Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

மேஷ ராசி நேயர்களுக்கு (2014 To 2017)
     

இராசி மண்டலத்தின் முதலாம் ராசியான மேஷராசி, உங்கள் ஜென்மராசி! ஆனாலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் முதல் தரமாகவும் இல்லை. முன்னணியிலும் இருக்கவில்லை – முன்னேற்றம் சொல்லும்படியாகவும் பிரமாதமாக ஏதுவும் நடக்கவில்லை. உள்ளத்தில் கலக்கம் – உடல்நலத்தில் அசௌகரியம் – உழைக்கும் பொறுப்பு எதிலேயும் உபத்திரவம் என்றிருந்த நிலவரம்தான் அதிகம். இந்த நிலைமையில் சனிபகவான் இதுவரை இருக்கிற இடத்திலிருந்து பெயர்ச்சியடையப் போகிறார் என்பது, நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்.

சனிபகவான் வாக்கியப்பஞ்சாங்கப்படி 16-12-2014  ( ஐய வருடம், மார்கழி மாதம், 1 ஆம் நாள் ) செவ்வாய்கிழமை பிற்பகலில் சனிப்பெயர்ச்சியாகும்.

உங்கள் மேஷராசிக்கு 7ம் இடமான துலாராசியில் 2 வருடங்களுக்கும் மேலாக சஞ்சரித்துவரும் சனிபகவான், அங்கிருந்து பெயர்ந்து, 8ம் இடமான விருச்சிகராசியில் பிரவேசித்து விடுகிறார். 8ம் இடத்தில் சனி சஞ்சரிப்பதைதான் அஷ்டமத்துச் சனி என்று சொல்வோம். ஆகவே, இப்போழுது உங்களுக்கு அஷ்டமத்துச் சனியின் காலம் ஆரம்பமாகிவிடுகிறது. இதுவரையில் 7ம் இடத்தில் சனிசஞ்சரித்து வந்திருப்பது கூட கஷ்டமான கண்டச் சனி காலம்தான். அஷ்டமத்துச் சனியின் 2 ½ வருட காலத்திற்கிடையில், இதர கிரகங்கள் சாதகமாகச் சஞ்சரிக்கும் போதெல்லாம், அதனால் உண்டாகக்கூடிய நன்மைகளும் கலந்து நடக்கும். அஷ்டமத்துச் சனி பகவானேகூட சில காரணங்களால் சில சமயங்களில் நன்மைகளையும் தருவது உண்டு என்கிற விவரங்களை உள்ளே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இப்போழுது 7ம் இடத்தை விட்டுச் சனி விலகுவதால் கெடுதல்கள் ஒரள்வு போய்விடுகிறது. இதுவரையில் சனி 7ம் இடத்தில் இயங்குகிறபோது அவருடைய கெட்ட பார்வைகளில் ஒரு நேர்ப்பார்வை உங்கள் ஜென்ம ராசியான மேஷராசியின் மேலேயே பதிந்து கொண்டிருக்கிறது. மந்தமான அந்தப் பார்வைகளால் உங்களிடம் மந்தகுணம், மசமசப்பு, மறதி, அலுப்பு, அசதி, அசௌகரியங்கள் என்றெல்லாம் இருந்தன. உடம்பின்  நிறமே குறைந்தது,தலைமுடி வறண்டது, அல்லது கொட்டியது, சரிவரத் தலையை வாரிச் சீவாமலும், பரட்டையாக முடிவளர்ந்தும், முகத்தில் அடிக்கடி வியர்வையை எண்ணெய்போல வழியவிட்டுக் கொண்டும், அழுக்கான அல்லது பழைய – நிறம் மங்கின பொருந்தாத தொளதொளப்பான ஆடைகளை உடுத்திக் கொண்டும், எப்படியோ மலர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஊக்கம் இல்லாமல், தளர்ச்சியாகவே அவ்வப்போது காட்டியளித்துக் கொண்டிருந்தீர்கள். இனிமேல் இவற்றில் எல்லாம் ஓரளவு நல்ல மாறுதல்கள் தெரியும் திருத்தமாகத் தென்படுவீர்கள்.

சனிப்பெயர்ச்சியோடு, சுக சௌகரிய – போஜன – ஸ்திரசொத்து – பந்து மித்ர – மாத்ரு ஸ்தானம் எனப்படுகிற 4ம் இடத்தை விட்டும் சனிப்பார்வை விலகிவிடுகிறது. இதனால் நேரா நேரத்துக்குச் சரியாகக் சாப்பிடக்கூடத் தடங்கலாகித் கொண்டிருந்த நிலவரம் மாறும். அடிக்கடி ஏதாவது அசௌகரியம் என்று உடல்நலம் அதிருப்திப்பட வைத்துக் கொண்டிருந்ததும் இனிச் சரியாகும். வீடு, மனை, கடை, தோட்டம், துரவு, பயிர்நிலம், பண்ணை இப்படியான ஸ்திர சொத்துகளை முன்னிட்ட வில்லங்கம், விவகாரம், முட்டுகட்டைகள், வசதிக் குறைவால் சிரமங்கள் என்றிருப்பதும் நீங்கும். அல்லல்களும் அலைக்கழிப்புகளும் ஒருபக்கம் இருந்தாலும் அடிப்படையான வசதிகளை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும்.

உங்களுடைய தாயாருக்கிருந்த பிணி பீடைகளும் நீங்கும். ஆரோக்கியம் தெளியும். அவர்களுடன் உங்களுக்கிருந்த கருத்துவேறுபாடு, மனஸ்தாபம், அடிக்கடிபார்த்துக் கொள்ள முடியாத இடைவெளி, அம்மாவழிச் சொத்துபத்துகளில் அபிவிருத்தி முடக்கம் என்றிருப்பவையெல்லாமும் விலகும். உற்றார், உறவினர்களுடனிருந்த விகல்பங்களும் வேறுபாடுகளும் கூட மாறிவிடும். நட்பு வட்டாரங்களில் இருந்த விரிசல்கள் சரி செய்யபடும். வெளிச்சுற்றுப் பழக்க வழக்கங்களில் இருந்த தயக்கம், விலக்கம் இவையெல்லாமும் விலகி, தொடர்புவட்டம் பெரியதாகும். சகாயமான சந்திப்புகளுக்கும் சந்தர்ப்பம் அதிகப்படும். வாகனப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, போக்குவரத்து சம்பந்தமான தொந்தரவுகளும் சரிசெய்யப்படும்.

ஆடு, மாடு, கன்று, குதிரை என்று, கால்நடைகள் சம்பந்தமாக இருக்கும் கஷ்டங்களையும் நிவர்த்தி செய்துகொள்ள முடியும். மேலும், இந்த சனிப்பெயர்ச்சியுடன் இதுவரையில் பித்ரு பாக்கிய ஸ்தானமான 9ம் இடத்துக்கிருந்த சனிப்பார்வையும் அங்கிருந்து அகன்றுவிடுகிறது. இதனால் தகப்பனாருடைய உடல்நலம் சீர்திருந்தும். அப்பாவிடைய உதவியும் ஆதரவும் கிடைப்பதற்கிருந்த தடங்கல்கள் நீங்கும். அவருடைய சொத்துபத்துகளில் அபிவிருத்தி முடக்கமும் மாறும். இதுவரை தகுந்த வயதுக்கு உங்களுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்றால், அதற்கு இதுவரையில் களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில் பாப கிரகமான சனி நடமாடிக்கொண்டிருப்பதுதான் முக்கியக் காரணமாகும். இனிமேல் களத்திர ஸ்தானத்தைவிட்டு சனி விலகிவிடுவதால், திருமண சுபகாரியங்களுக்கிருந்த முட்டுக்கட்டைகளும் தட்டுத்தடங்கல்களும் நீங்கிவிடும்.

இப்போழுது களத்திர ஸ்தானத்தைவிட்டு சனி விலகுவதால், கணவன் மனைவிக்கிடையிலே இருந்த மேலே குறிப்பிட்ட குறைபாடுகள் ஓரளவாவது குறையும். கூட்டுறவு முயற்சிகள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றிலிருந்த குறை, குதர்க்கம், விவகாரம் ஆகியவை குறையலாம், மாறலாம், சீர்திருத்தலாம், சரியான தீர்வுக்கு வரலாம். ஆக, சனி 7ம் இடத்தில் இருந்து விலகுவதால், சுக ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றிலிருந்து நீங்கிவிடுவதாலும் மேலே சொல்லப்பட்ட விதமாக சில கெடுதல்களும் விலகி, அதன் காரணமாக நல்ல திருப்பங்கள் தெரியக்கூடும். மற்றப்படி, இனிமேல் அஷ்டமராசிக்கு வந்து சஞ்சரிக்கும் சனியால் பல விதங்களிலும் சங்கடங்களும் சஞ்சலங்களும் இருக்கத்தான் செய்யும்.

உழைப்புக் கிரமான சனி அட்டம் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் என்பது மட்டுமில்லாமல், அங்கே இருந்தப்படியே அவர் பார்க்கும் பாதிப்பான பார்வைகளில் ஒரு பார்வை ஜீவன காரிய ஸ்தானமான 10ம் இடத்திலேயே பதிவதுதான் இந்த இடைஞ்சல்களுக்கெல்லாம் காரணம். உங்களிடைய பிழைப்புக்கு ஆதாரமான எதிலேயும் கடினமான உழைப்போ, கஷ்டமான பிரச்சனையோ அடிக்கடி கசக்கிப் பிழியத்தான் செய்யும். பொதுவாகவே கடமையை எதிலேயும் முடக்கம், தேக்கம், தாமதம் என்றூண்டு. பொறுப்பு எதிலேயுமே இழுபறி, இடைஞ்சல் என்று இருக்கத்தான் செய்யும்.

இந்தனை கெடுபலன்களை பார்த்து பயப்பட வேண்ட்டாம் நமக்கு தேவையாக

கஷ்டங்களை சனி பகவான் கொடுத்து நம்மை நல்வழிபடுத்துவார் அவரிடம் வணங்கி இத்தனை கஷ்டங்களை  ஏற்கும் மனநிலையை கொடு என்று வேண்டுகள் கண்டிப்பாக கொடுப்பார் துணிந்து நின்று எதையும் சமாளித்து விடலாம் .  

மொத்ததில் 50 % நன்றாக இருக்கும் .

பரிகாரம்  :

சஷ்டி திதிகளில் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பாலாபிஷோகம் , சந்தனகாப்பு மற்றும் உடல்ஊனமுற்றவருக்கு வஸ்த்திர தானம் ,அன்னதானம் செய்யவும். அருள்மிகு அகத்தீஸ்வரர் சிவபெருமானை வாலாஜா வன்னிவேடு திருக்கோவில் சென்று வந்தால் நன்மை கிடைக்கும் .

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter