Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

கடகம்

         2019    புத்தாண்டு  பலன்கள்   

கடகராசி   அன்பர்களே   

     உங்களுக்கு  சனிபகவான்   பகை  கிரகமாக  இருந்தாலும்  நன்மை  தரும்   இடத்தில்  இருக்கிறார்.    அவரின்  கருணையோடு    இந்த புத்தாண்டு  தொடங்குகிறது.      இது  மிகவும் சிறப்பான நிலை.     குடும்பத்தில்   மகிழ்ச்சியைத்   தருவார்.   திருமணம்  போன்ற  சுப   நிகழ்ச்சிகளை   நடத்தி  வைப்பார்.  

    பொருளாதார  வளத்தை  அதிகரிக்க   செய்வார்.    பெண்களால்  மேன்மை  கிடைக்கும்.    குழந்தை  பாக்கியம்   கிடைக்கும்.     மேலும்  அவரது 5,7-ம்  இடத்துப்  பார்வையால்  சாதகமாக  அமையும்.   இதனால்   மேலும்  நன்மைகள்  அதிகரிக்கும்.   ஆனால்   குருபகவான் மார்ச் 13-ந்   தேதியில்  இருந்து  மே 19-ந்   தேதி வரை  அதிசாரம்  பெற்று  தனுசு ராசியில்  இருக்கிறார்.  இது சிறப்பான இடம்  என்று   சொல்லமுடியாது.    அவர்    மன    உளைச்சல் தரலாம்.   உடல்நலம்  பாதிக்கப்படும்.  மனதில்    தளர்ச்சி  ஏற்படும்.    அக்கம்  பக்கத்தினர்கள்   வகையில்  வீண் விரோதம்    வரலாம்.   எனவே  சற்று ஒதுங்கி   இருப்பது நல்லது.

    தற்போது  சனிபகவான்  6-ம்  இடமான  தனுசு  ராசியில்  நின்று பல்வேறு  நன்மைகளை  தருவார்.    அவர்  உங்கள்    முயற்சிகள் அனைத்தையும்   வெற்றி  அடைய  செய்வார்..    நல்ல பண  புழக்கத்தை கொடுப்பார்.    மேலும்,   சனியின்  10-ம்  இடத்துப்பார்வையும் சிறப்பாக அமைந்துள்ளது.  அதன் மூலம்  அவர் பொருளாதார வளத்தையும்,  காரிய  அணு கூலத்தையும்  தருவார்.  தொழில்  நல்ல முன்னேற்றத்தை  கொடுப்பார். 

      இந்த   ஆண்டு  தொடக்கத்தில்  கூடுதல்  பலனை பெறலாம்.  அதற்காக   பிற்பகுதியில்    பிற்போக்கான பலன்களே  நடக்குமா என்று  கவலை கொள்ள  வேண்டாம்.   எடுத்த  எல்லா காரியங்களையும்  சிறப்பாக செய்து   முடிக்கலாம்.   சிற்சில  தடைகள் வந்தாலும் அதை    தூசிபோல் துடைத்தெறிவீர்கள்.   பொருளாதார வளம் இருந்துகொன்டே இருக்கும்.      தேவைகள்  பூர்த்தி ஆகும்.  அவ்வப்போது   செலவுகள்  வந்தாலும் அதை ஈடுகட்டும் அளவுக்கு வருமானம் இருக்கத்தான் செய்யும்.    

       குடும்பத்தில் மகிழ்ச்சி  அதிகரிக்கும்.   ஆடம்பர பொருட்களை வாங்கி  குவிக்கலாம்.  தம்பதியினரிடையே  ஒற்றுமை  ஏற்படும்.   புதிய  சொத்து,  வீடு  மனை  வாங்க யோகம் உண்டு.   கார்   போன்ற   வாகனங்களும்,   வாங்கலாம் . சிலர்    வசதியான  வீட்டிற்கு  குடிபுகுவர்.   திருமணம் போன்ற  சுப  நிகழ்ச்சிகள்   கைகூடும். அதுவும்   மார்ச் 13-ன் தேதிக்குள்  நல்ல  வரனாக அமையும்.   

    உத்தியோகம்    பார்ப்பவர்கள்   வேலையில்  முன்னேற்றம்  காண்பர்.   உங்களை  புரிந்து   கொள்ளாதவர்கள் தங்கள் தவறை  உணர்வார்கள்.  உங்கள்  திறமை பளிச்சிடும்.  பாதை உண்ண உயர்வு,  சம்பள உயர்வு  தானாக வரும். மேல்  அதிகாரிகளின்   ஆதரவு  கிடைக்கும்.  கோரிக்கைகள்   நிறைவேறும்.  விரும்பிய  இடத்துக்கு  மாற்றம்  பெறலாம்.    வேலை இன்றி  இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.   சக ஊழியர்களின்  ஒத்துழைப்பு  இருக்கும். ஆனால்  மார்ச்  13-ந்  தேதி முதல்  மே 19-ந்  தேதி வரை  வேலைப்பளு   அதிகரிக்கும்.  ஆனாலும்   உழைப்புக்கு  ஏற்ற  வருமானம்   கிடைக்கும்.   

    வியாபாரிகள்  தற்போது உள்ளது போல சிறப்பான நிலையில்  இருப்பீர்கள்.  புதிய  வியாபாரம்  அனுகூலத்தை  தரும்.     இவ்வியாபாரத்தை  மேலும் விரிவுப்படித்தலாம் .  லாபம்  அதிகரிக்கும்.   கூட்டாளிகள் இடையே   ஒற்றுமை  ஏற்படும்.. வாடிக்கையாளர்களிடம்  நன்மதிப்பு  பெறலாம். அரசிடம்  இருந்து  உதவிகள்  கிடைக்கும்.   வேலை இன்றி இருப்பவர்கள்  இந்த காலத்தை  பயன்படுத்தி  சுயதொழில் தொடங்கலாம்.  அதுவும்   மார்ச்  மாதத்துக்குள்   ஆரம்பிப்பது  நல்லது.  மார்ச்  13-ந்   தேதி  முதல்  மே  19- ந்   தேதி  வரை  சிரமத்தை  எடுத்து உழைக்க  வேண்டியதிருக்கும்.   சிலர்  தொழிலில் விஷயமாக  குடும்பத்தை  விட்டு  பிரிய  நேரிடலாம்.   சனிபகவானால்  பகைவர்களின்  சாதியை  முறியடிக்கும்  வல்லமையை  பெற்று    இருக்கிறீர்கள்.   உங்கள்  ஆற்றல்   மேம்படும்  அரசு  வகையில்  எந்த உதவியும்    கிடைக்காது.    வரவு- செலவு    கணக்கை சரியாக  வைத்துக்   கொள்ளவும்..

     கலைஞர்கள்    பொருளாதாரத்தை  சிறந்து   விளங்குவர்.   அதேபோல்    புதிய  ஒப்பந்தங்களும்  தங்குதடையின்றி   கிடைக்கும்.    அரசிடமிருந்து  விருது   வாங்க  வாய்ப்பு வரும்.   சிலர்  வெளிநாடு  விருது  வாங்க  வாய்ப்பு  வரும்.   புதிய  ஒப்பந்தம்  பெற  சற்று  முயற்சி  எடுக்க   வேண்டியது     இருக்கும்.   அப்போது  எதிர்பார்த்த புகழ்,  பாராட்டுகள்  கிடைக்காமல்  போயிருக்கலாம்.  பணப்புழக்கத்தில்    கிடைக்காமல்   போயிருக்கலாம்.   பணப்புழக்கத்தில்   எந்த குறையும்  இருக்காது.  பொது   நல    சேவகர்கள்   அனைத்து  வகையிலும்  முன்னேறி பதவி,  பாராட்டு கிடைக்க பெறுவார்.

       மாணவர்களுக்கு  இந்த  கல்வி ஆண்டு  சிறப்பாக இருக்கும்.    தேர்வில்  வெற்றி    கிட்டுவதோடு   நல்ல  மதிப்பெண்களும்  பெறலாம்.       உழைப்புக்கு  ஏற்ற பலன்  ஓரளவு கிடைக்கும்.  தசாபுத்தி  நன்றாக  இருப்பவர்களுக்கு வெற்றி  வாய்ப்பு  பாதிக்காது.

    ஆனால்  ஆண்டு  முழுவதும்   எள் , கொள்ளு,  பயறு, வகைகளில்  நல்ல மகசூலை   பெறுவீர்கள். மண்ணில் எதை  போட்டாலும் அது பொன்னாக  மாறும் காலம்  புதிய  சொத்துகள்  வாங்கலாம்.  சிலர்   நவீன  விவசாயத்தை   பயன்படுத்தி  அதிக   வருமானத்தை   காண்பீர்கள்.   கூலி  வேலை  செய்ப்பவர்கள்  மன  நிம்மதியும், பொருள்   சேர்க்கையும்  பெறுவார்கள்..  சிறு  தொழில்   செய்ப்பவர்கள்    மேலும்   முன்னேற்றம்  காணலாம்.

       பெண்கள்    குதூகலமாக  காணப்படுவர்.    குடும்பத்தில்  உங்களது  காய் ஓங்கி  நிற்கும்.  உங்களை  சார்ந்தே   குடும்பம்  இருக்கும்.  கணவனின்  அன்பு  கிடைக்கும்.   பிள்ளைகளால்  பெருமை  சேரும்.    புத்தாடை  அணிகலன்கள்  கிடைக்கும். பெண்  காவலர்கள்    சிறப்பான பலனை  பெறுவார்.   19/05/2019  முதல்  26/10/2019 வரை  குடும்பத்தில் வீட்டுக் கொடுத்து போவது நல்லது.   நவம்பர் ,  டிசம்பர்  மாதங்களில்  அக்கம் பக்கத்தாரிடம்  வளவள பேச்சு   வேண்டாம்.   அக்கம்  பக்கத்தினர்களின்  தொல்லை ஏற்படும்.   சிலரது  வீட்டில் பொருட்கள்  களவு போக வாய்ப்பு  உள்ளது.  

 

பரிகாரம்   

     நவக்கிரகங்களின்   ராகுவுக்கும்  கேதுவுக்கும்  அர்ச்சனை  செய்யுங்கள்.    ராகு    காலத்தில்  துர்க்கை மற்றும்     பைரவருக்கு  பூஜை  செய்யலாம்.   ஆதரவற்ற  மூதாட்டிகளுக்கும், சந்நியாசிகளுக்கும்  இயன்ற உதவி  செய்யுங்கள்.    வியாழக்கிழமை தோறும்  தட்சிணாமூர்த்திக்கு  அர்ச்சனை செய்யுங்கள்.    அப்போது  கடலை  படைத்து  தானம்  செய்யுங்கள்..  வசதி  படைத்தவர்கள்  ஏழைகளுக்கு  மஞ்சள்  நிற  ஆடை  தானம்  செய்யலாம். 

   வாழ்க  வளமுடன் .

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter