Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

கடகராசி 

 ( புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் )

   

        குரு  பகவான் உச்சம் பெறும் ராசி கடகம் இந்த ராசியில்  பிறந்தவர்கள் அதிக  நன்மை செய்யும்   கிரகம்   குரு  தற்போது நான்காமிடமான   துலாமிலிருந்து  ஐந்தாம்  இடமான    விருச்சிகத்திற்க்கு   குரு பெயர்ச்சியாகிறது .   அஞ்சிலே  குரு கெஞ்சினாலும்  கிடைக்காது  என்று பேச்சு வழக்கிலே ஒரு ஜோதிட பழமொழி  சொல்கிறது. குருவின் சஞ்சாரத்தில் மிக சிறப்பான இடங்கள் 5, 9, 11 ஆகிய இடங்கள் மட்டுமே. அதிலும் கடக ராசிக்கு  5ஆம் இடத்தில் குரு  வருவதால் கேட்டது கிடைக்கும். கல்வி கற்கும் வயதில் இருந்தால்  மிகப்பெரிய கல்விமானாக உருவெடுக்க முடியும். கல்வியில் அபார தேர்ச்சி பெற்று புகழ் பெற்ற  அனைவருக்கும்  5ல் குரு  இருக்கும். கோட்சாரத்தில் தற்போது 5ஆம் இடத்திற்கு குரு  வந்திருப்பதால் கடக ராசியில்  உள்ள மாணவ மாணவியர் வியக்கத்தக்க சாதனைகளை கல்வியில் புரிவார்கள்.

        திருமண வயதில் உள்ள கடகராசிக்காரர்களுக்கு எல்லாம் இப்பொழுது திருமணம் நடைபெறும். 5ஆம் இடத்திற்கு வரும் குரு  ராசியை பார்க்கிறது. 11ஆம் இடத்தையும் பார்க்கிறது. 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறது. எனவே அனைத்து விதமான பாக்கியங்களும் நல்ல விஷயங்களும் கடகத்திற்கு இப்பொழுது கிடைக்கும். திருமண தடை நீங்குவது உறுதி. ஆயில்யம் நட்சத்திரத்திரத்தில் பிறந்து விட்டதால் பல வருடங்களால் முயற்சி செய்தும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை என்று கவலை பட்டுக்கொண்டிருக்கும் கடகராசியினர்களுக்கெல்லாம்  இப்பொழுது திருமணம் நடைபெறும். குருவிற்கு புத்திரக்காரர்ககள்  என்று ஒரு பெயர் உண்டு. ஒருவருக்கு ஆண்வாரிசு உண்டா? இல்லையா? என்பதை அவரது ஜனனகால ஜாதகத்தில் குரு  எங்கே உள்ள என்பதை வைத்துதான் சொல்வார்கள். குடும்பத்தில் வம்ச விருத்தி ஏற்பட்டு  மகிழ்ச்சி அலை வீசும்.    

  நீங்கள்   பட்ட  சிரமத்திற்கு  இந்த குருப்பெயா்ச்சி   ஒரு பொற்காலம் .  எதிர்பார்த்த பதவி  உயா்வு,  ஊதிய  உயா்வு பணியாற்றம் அனைத்தும் வந்து  சேரும்.  ஒருசிலஅரசு   ஊழியாகள்   வீடு   கட்ட  போட்ட திட்டம் நிறைவேறும்   அதிகாரிகளின்  ஒத்துழைளப்பு  உங்களுக்கு  உற்சாகத்தைத்  தரும்.  தொல்லை   கொடுத்து  வந்த   சக  ஊழியா்கள்விலகிச்  செல்வார்கள்.  கையூட்டுப் பெறவதை    நிறத்திக்   கொள்வார்கள்.

சில  அரசு ஊழியா்களுகு  எதிர்காலம்   சிறப்பாக  உள்ளது.   உங்களைவிட்டு விலகிச்  சென்ற  சொந்தங்கள் வந்து  சேரும்.  கூட்டுத்  தொழில் செய்வது சிறப்பு  இல்லை.  கூட்டளிகளுக்குள் சண்டை வரும்.

  தனியாக தொழில் செய்வது  உத்தமம்.   நல்ல  பணியாளா்கள்  கிடைப்பார்கள்  புதிதாகக்   கிளைகளைத்  துவங்குவீா்கள்.   விலகிச் சென்ற  வாடிக்கையாளா்கள்  மீண்டும்     வந்து   சேர்வார்கள்.  கொள்முதல்    பொருட்கள்  அனைத்தும்  விற்பனையாகும்.  அரசங்கக் கெடுப்படிகளை   சந்திக்க வேண்டி  வரும். எனவே  கணக்குகளை   சரியாக  வைத்துக்  கொ்ளவது  உத்தமம்.    போட்டி வியாபாரிகள்  விலகிச்  செல்வார்கள்.   கிடைக்கும்    லாபத்திற்கு  ஆபரணங்கள் வாங்கச்   சோ்ப்பீா்கள். குடும்ப மகிழ்ச்சிக்கு  குறைவு  இல்லை.

           தொழில் அதிபா்கள்    எதிர்பார்த்தபடி  வெளிநாட்டு  ஆா்டா்கள் வந்து சேரும்  அந்த ஆா்டா் படி சப்ளை   செய்வதில்   தொழிலாளிகள்   உங்களுக்கு மிகவும் உதவியாக   இருப்பார்கள். தொழிலாளிகள்  அடைய வேண்டிய  போனஸ்  ஊதிய உயா்வு ,பதவி  உயா்வு  தடையின்றி   கிடைக்கும்.  தொழில்  அபிவிருத்திக்காக  அரசாங்கத்தில்  எதிர்ப்பார்த்த கடன்  வந்து சேரும்.  மான்யமும்  கிடைக்கும். வெளி மாநிலத்தில் தங்கள் தொழிலை  விரிவுப்படுத்துவார்கள்.   ஏற்கெனவே  ஸ்டாக் இருந்த  உற்பத்திப்   பொருட்கள் முழுவதும் கூடுதல்   விலைக்கு   விற்கும்.  பங்குதாரா்கள்   அதிகம்  போ்  வந்து சேர்வார்கள்.    

            மனதில்  இதற்கு முன்னா்  குடிகொண்ட பயம் அகலும்.  தங்களது பிள்ளைகளுக்கு  நல்ல வரன்  அமையும்.  வீட்டில்   சுபகாரிய   நிகழ்ச்சிகள் இனிதே  நடைபெறும். உடல்நிலையில் இருந்த  பின்னடைவுகள் நீங்கி  உற்சாகத்தோடு   செயல்படுவீா்கள்.  வீட்டிற்கும்,    பிள்ளைகளுக்கும் தேவையான    பொன், பொருள் சோ்க்கை  நடைபெறும்.   உறவினா்கள் வந்து  செல்வார்கள். பிரிந்து வாழ்ந்த  மகன் இப்போது  உங்களைத் தேடுவார்கள். நீங்கள்  எதிர்பார்த்த உதவிகள்  வந்து  சேரும்.

    வெறுத்து   ஒதுக்கியவா்களும்  வலிய  வந்து   சேர்வார்கள். நீண்ட   காலத்துக்குப் பிறகு  இப்போது  நீங்கள்  பரபரப்பாக  செயல்படுவீா்கள்.  கணவன் மனைவி ஒற்றுமைக்கு  குறைவு  இல்லை .   குழந்தை  பாக்கியம் இல்லாத தம்பதியா்  குழந்தை  பாக்கியத்தை  அடைவார்கள். ஒருசிலருக்கு  தாய்  வீட்டில் இருந்து  வரவேண்டிய சொத்துகள்  வந்து சேரும். உடன் பிறந்தவா்கள் இப்போது  உங்களக்கு  அனுசரணையாகவே இருப்பார்கள்.

              இந்த  ஆண்டில்  படவாய்ப்புகள்   கூடுதலாகும்.  நீங்கள் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட உகந்த நேரம். தாய்   மொழியைவிட  வேற்று  மொழிப்  படங்களில்  உங்களுக்கு  வாய்ப்புகள்  கூடும்.  முன்பு  இருந்து  வந்த  பணமுடை   நீங்கும். கடன்  தொல்லைகளில்   இருந்து  விடுபடுவீா்கள்,    திருமணம்   கைகுகூடும். முன்பு மறுத்து   பேசியவா்களே  உங்களுக்கு  பெண் கொடுக்க  முன் வருவார்கள்.

           கடந்த  இரண்டு  ஆண்டுகளாக அரசியலில்  நீங்கள்  எதிர்பார்த்த படிபலன்களை  அடைய முடியவில்லை.   தற்போது  குரு  பகவான் உங்கள்  ராசிக்கு  5-ல் வருவதால் உங்கள்   குலதெய்வம்  அருளோடு  தொட்ட காரியம் அனைத்திலும்    நல்ல  பலன்களை அடைவீா்கள்.   கெடுதல்  செய்து வந்த கட்சிக்காரா்கள் உங்களைவிட்டு விலகிச்  செல்வார்கள்.  நல்லவா்களின்  ஆலோசனை உங்களுக்கு  கிட்டும்.  தோ்தலில் போட்டியிடுபவா்கள்     குலதெய்வத்தின் அருள்பெற  வேண்டும்.  குலதெய்வ ஆசியுடன்    வெற்றியை  பெறுவார்கள்.             

   பரிகாரம் 

     தட்சிணாமூர்த்தீக்கு வியாழக்கிழமை தோறும் வில்வ அர்ச்சனை செய்ய வேண்டும்.

     அஷ்டமிக்கு பைரவருக்கு நெய்விளக்கு ஏற்ற வேண்டும் .

     குலதெய்வ வழிபாடு அவசியம் .

வாழ்க வளமுடன்  

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter