Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

கடகராசி  நேயர்களுக்கு(2014 TO 2017)

இரண்டு வருடங்களுக்கு மேலாகக் கடுமையான அர்த்தாஷ்டமச் சனியும், அவருடன் அதே இடத்தில் ஒன்றரை வருடங்களாக உக்கிரமாகக் கூட்டுசேர்ந்திருந்த பாப கிரகமான ராகுவும் பாடாய் படுத்திருப்பார்.

 சுபகிரமான குருபகவானும் விரய ஸ்தானத்திலிருந்து, அதன்படி உங்கள் ஜென்மராசிக்கே வந்து, உச்ச பலத்தால் கொடிய குணத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறார். சாயா கிரகங்களான ராகுகேதுவும் சமீபத்தில் ராசி மாறியதுதான், தாக்குப்பிடிக்கவும் சமாளிக்கவும் பக்கபலத்தை அதிகபடுத்தியிருக்கிறது. இந்த நிலைமையில் சனிபகவானும் ராசி மாற இருக்கிறார் என்பதை ஓரளவு ஆறுதலை ஏற்படுத்தலாம். அர்த்தாஷ்டமச் சனியாய் இருந்து கொடுத்த கஷ்டங்களை விடவுமா இனிமேல் கூடுதலாகக் கொடுத்துவிடப் போகிறார்.

வாக்கியப்பஞ்சாங்கப்படி 16-12-2014  ( ஐய வருடம், மார்கழி மாதம், 1 ஆம் நாள் ) செவ்வாய்கிழமை பிற்பகலில் சனிப்பெயர்ச்சியாகும்.

நான்காமிடத்தை விட்டு விலகுவதன் காரணமாகப் பல கெடுதல்களும் நீங்கும். அதேசமயம் இனிமேல் சனி 5ம் இடத்தில் நடமாட இருப்பதை முன்னிட்டு சில அதிருப்திகரமான பலன்களையும்தான் சந்திக்க வேண்டியிருக்கும். இப்பொழுது சனி 5ஆம் இடத்தில் இயங்கி கொண்டிருக்கிறார். 4ம் இடத்தை விட்டு சனியும், சில முக்கியமான இடங்களைவிட்டுச் சனியின் கெட்ட பார்வைகளும் விலகுவதால் கெடுதல்கள் ஓரளவு நீங்கிப் போகும்.

இந்த சனிப்பெயர்ச்சிக்குப் பின் உங்களுடைய ஆரோக்கியத்தில் ஓரளவு அபிவிருத்தி ஏற்படும். ரோக காரகனாகிய சனி இதுவரை சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சனியின் தீய பார்வை உங்களுடைய ஜென்ம ராசியின் மீதே பதித்து வருகிறார். இதனால் உள்ளூர உள்ள நோய் நொடிக் குறைகள், வெளியே அலுப்பும் அசதியும் ஊடுருவி அசௌகரியங்கள் உங்களிடம் அடிக்கடி உறவாடி இருந்தன. என்னதான் வசதி வாய்ப்புகள் இருந்தால் சரியாக சாப்பிடக்கூட முடியாது. இனிமேல் சுக ஸ்தானத்தைவிட்டு பாபகிரகமும் ரோககாரகனுமான சனி விலகிவிடுவதால்தான், ஆரோக்கியத்தில் அபிவிருத்தி ஏற்படும். சனியினுடைய சங்கடப்பார்வை உங்களிடைய ஜென்ம ராசியைவிட்டு நீங்கி விடுவதால்தான், உடல் சோர்வும் உபாதைகளும் கூடுமானவரையில் விலகி, ஓரளவாவது உடல்நலம் தேறும் என்று சொல்கிறேன். 4ம் இடம்தான் மாத்ரு ஸ்தானம் என்பதால், அங்கிருந்து சனி பெயர்ந்துவிடுவது தாயாருக்கும் பிணி பீடைகள் என்றிருந்த நிலைமை மாறி, அவருடைய ஆரோக்கியத்தில் நல்ல திருப்பம் தென்படும்படிச் செய்யும்.

 உங்கள் கடகராசிக்கு 4ம் இடமான துலாராசி பித்ரு ஸ்தானத்துக்கு 8ம் இடம் என்பதால் அங்கிருந்து சனி விலகி விடுவது தகப்பனாருக்கும் நோய்நொடிகளைக் குணப்படுத்தும். அவருடைய பொறுப்புகளில் இருந்த கடுமையான சிரமங்களைக் குறைக்கும். அப்பாவுடைய முன்னேற்றத்துக்கிருந்த முட்டுக்கட்டைகளையும் விலக்கி, அவரை அபிவிருத்தியடையச் செய்யும்.

தந்தை வழியிலோ தாயார் வகையிலோ சொத்துபத்துகள் வரவேண்டியிருந்தாலும் வந்து சேரும். ஏற்கனவே அப்படி சொத்துகள் இருந்தால், அவற்றில் உள்ள வில்லங்கம், விவகாரம், அனுபவ பாத்தியதைக்குத் தடங்கள், பராமரிப்புச் சிரமம், பழுதுபார்ப்புத் தொந்தரவு இப்படியான இடைஞ்சல்கள் எந்த விதத்திருந்தாலும் நீங்கும். உங்களுடைய சம்பாத்தியத்திற்கு சொந்தமான இடம், மனை, வீடு வாங்கிக் கொள்வதற்கும் வழிவகைகள் பிறக்கும்.

ஏற்கனவே மனை இருந்தால் வீடு கட்டவும், கட்ட ஆரம்பத்திருந்தால் இழுபறியான வேலைகளை எடுத்து முடிக்கவும், படுத்திக் கொண்டிருக்கும் பழுதுபார்ப்புச் சீரமைப்பு வேலைகளை நிறைவுசெய்து வசிப்பிடத்து வசதியை அதிகப்படுத்திக் கொள்ளவும் முடியும். பொதுவாக சொத்துபத்துகளை அடைவதற்கும், அபிவிருத்தி செய்து கொள்வதற்கும் இருந்த முடக்கமும், முட்டுகட்டைகளும் நீங்கும்.

முக்கியமாக இதுவரையில் 4ம் இடத்துச் சனியின் மோசமான ஒரு பார்வை ஜீவன காரியஸ்தானத்தின் மேல் பதிந்து கொண்டிருப்பதால், ஜீவனத்துக்கு ஆதாரமான உத்தியோகம், வியாபாரம், தொழில்துறை, கலை ஈடுபாடு இப்படியான எல்லாவற்றிலுமே கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் உங்களைக் கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு 10ம் இடத்தில் பதியும் சனிப் பார்வையே காரணம். சமீபத்திய சனிபெயர்ச்சியோடு ஜீவன காரியஸ்தானத்தில் பதிந்து கொண்டிருக்கும் இந்த பாதிப்பான சனிப்பார்வையில் இருந்து விலகிப் போய்விடுகிறது. இது ஆதாரமான அவசியமான பல நல்ல திருப்பங்களுக்கு அடைப்பாக இருந்த பல வழிகளையும் திறந்துவிடும். குறைந்தபட்சம் கடமைகளிலும் காரியங்களிலும் இருந்த கடுமையான உபத்திரவங்களும் காலதாமதப் பிரச்சனைகளுமாவது குறையும் என்கிற அளவில் நல்ல மாறுதல்தானே.

ஆகவே, 2வருடங்களுக்கும் மேலாக அர்த்தாஷ்டமச் சனியாக 4ம் இடத்தில் நடமாடுகிற சனிபகவான், உங்களுடைய ஆரோக்கியத்தையும் சுகசௌகரியகளையும் அடிப்படையான ஜீவனக் காரியங்களையும் பாதித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் விலகிவிடுவது என்கிற அளவில் இது நல்ல மாற்றம்தாம்.

சனி ஒரு பாபகிரகம் என்று உங்களுக்குத் தெரியும். 5ம் இடம் புத்தி ஸ்தானமாகும். ஆகவே, அங்கு சஞ்சரிக்கும் சனி முதலில் உங்கள் மூளைக்குள்ளே தன்னுடைய குதர்க்கக் குணத்தைப் புகுத்துவார். இதனால் மந்தத்தனம் உண்டாகும், அடிக்கடி மறதி ஏற்படும், கவனம் ஒரே இடத்தில் செல்லாமல் தடுமாறும், ஆற்றோரச் சருகு போல மனம் அங்கேயும் இங்கேயுமாய் அலைமோதும், எதிலும் உடனடியாகவும் உறுதிப்படவும் முடிவெடுக்கத் தயக்கம் தோன்றும், முக்கியமான விஷயங்கள் தெளிவாகாமலும் தீர்மானத்துக்கு வராமலும், திரிசங்கு சொர்க்கத்தில் தொங்குவதைப் போலத் தொங்கும். சந்தேகமும் சஞ்சலமும் சலனப்படுத்தும். அவநம்பிக்கை அடிக்கடி வந்து தொற்றிக்கொள்ளும். சரியானதும் சாதகமானதும் சட்டென்று புலப்படாததால், சில சமயங்களில் தவறான பாதைகளில்கூட புத்தி தடம்புரண்டு போய்த் தடுமாறும்.

இப்படியெல்லம் 5ம் இடத்தின் ஸ்தான பலனாக அதிருப்தியைத் தருகிற சனிபகவான், தன்னுடைய பார்வைகளின் பலனாகவும் சில பாதிப்புகளைத் தருவார். அதாவது 5ம் இடத்துச் சனியின் கெடுதலான 3பார்வைகளில் ஒரு பார்வை 7ம் இடத்தின் மீது பதிகிறது. அது களத்திர ஸ்தானம் என்பதால், இளவட்டங்களுக்குக் கல்யான சுபகாரியங்கள் இழுபறியாகலாம் அல்லது இடைஞ்சல்படுத்தலாம்.( ஆனால் 2015 ஜூலை முதல், 2016 ஆகஸ்ட் வரையில் குருபகவான் 2ம் இடத்தில் இயங்குவதால், தோஷம் நீங்கும். ஜாதக பலமும் சரியாக இருந்தால் திருமணமும் ஆகும்.)

சனியின் மற்றுமொரு சங்கடப்பார்வை தன குடும்ப வாக்கு ஸ்தானத்தின் மீது படுவதும் பணவரவுகளில் பாதிப்புகளைக் கொடுக்கக்கூடியதுதான். இதனால் போதுமான பணம் வருவதில்லை. அதுவும் மொத்தமாகவோ சரியான சமயத்துக்கோ கிடைப்பதில்லை. வந்து சேர்வதும் வசதியை அதிகப்படுத்திகிற மாதிரி தங்குவதில்லை. அவசியத் தேவைகளைச் செய்துகொள்வதற்கே பற்றுவதில்லை. தட்டுபாடுகள் தவிக்கவைக்காமல் விடுவதில்லை. கொடுக்கல், வாங்கல்களில் உள்ள குளறுபடுகளுக்கும் தடை தாமதங்களுக்கும் குறைச்சலே இல்லை. என்னதான் நீங்கள் நல்லவராக இருந்தாலும், அசந்தர்ப்பவசமான இக்கட்டுகளினாலாவது அடிக்கடி நாணயத்தைக் காப்பாற்ற முடியாமல் தடுமாறும்படியாகலாம்.

குடும்பத்துக்குள்ளே குறைபாடுகள், குதர்க்கங்கள், கோபதாபங்கள் என்றெல்லாம் ஏற்படுவதும் வழக்கமாகிவிடலாம். இடக்கு முடக்கான பேச்சுவார்த்தைகளால் இடைஞ்சல் உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம். வாக்கு ஸ்தானத்தில் சனிப்பார்வை பதிவதால், கெடுவைப்பது, தவணை சொல்வது, வாக்கு கொடுப்பது, உறுதிமொழி சொல்வது, சத்தியம் பண்ணுவது, சவடால் பேசுவது, வாக்குவாதம் பண்ணுவது, வாய்க்கு வந்தபடி திட்டுவது, சிபாரிசு செய்வது, ஜாமீன் கொடுப்பது, வக்காலத்து வாங்குவது, செல்லாத இடத்தில் செல்வாக்கைப் பயன்படுத்துவது ஆகியவையெல்லாம் இடறும். இக்கட்டில் மாட்டிவிடும் என்பதால், நாக்கையும் வாக்கையும் கட்டுபடுத்தி எச்சரிக்கையாக இருந்து கொள்வதுதான் நல்லது.

ஆக, 5ம் இடத்துச் சனியாலும் அவருடைய பார்வைகளாலும் அதிருப்திகரமான பலன்கள்தான் என்று தெரிந்துஇருக்கும். ஆனாலும், 4ம் இடத்தைவிட 5ம் இடத்துக்குச் சனியால் அவ்வளவு மோசமான கஷ்டம் கிடையாது என்பதையும் நினைத்து மனத்தைத் தேற்றிக்கொள்ளுங்கள்.

மொத்ததில் 60 % நன்றாக இருக்கும் .

பரிகாரம்

தேய்பிறை அஷ்டமி திதிகளில் ஸ்ரீ காலபைரவருக்கு வெண் பூசணிக்காயில் நல்ல எண்ணெய் தீபம் ஏற்றி வரவும். தினமும் லலிதா சகஸ்நாமம் சொல்லி வரவும்

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter