Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

மகரம்

குருப்பெயர்ச்சி பலன்கள்

(உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதங்கள்)    

குரு  நீச்சமடையும் ராசி   மகரம் குருவால் அதிக நன்மை   நடைபெறாத ராசி மகரம்.    பெரும்பாலான இடங்களுக்கு  வரும்பொழுது  மகர ராசிக்கு  குரு நன்மை  செய்வதில்லை.   ஆனால்  இப்பொழுது  10-ஆம் இடத்தில் இருந்து  11- ஆம்  இடத்திற்கு குரு வருவதால் இந்த குருப்   பெயா்ச்சிமகர ராசிக்கும் நன்றாகத்தான்  இருக்கும்,   10-ஆம் இடத்தில் இருந்து 11-ஆம் இடத்திற்கு குரு வருகிறது,.  11-ஆம் இடத்திற்கு எந்தக் கிரகம் வந்தாலும்  நன்மையைத்தான்   செய்யும்  என்பது  ஜோதிட     விதி.  10-ஆம்   இடத்திலே குரு  இருந்தபோது   தொழிலில்    சில   பாதிப்புகள் இருந்திருக்கலாம் .   உத்திலோகததில்  சில  இடையூறுகள்   ஏற்பட்டிருக்கலாம்,  ஒரு சிலருக்கு  தற்காலிகமாக வேலை  போயிருக்கலாம்.   பல்வேறு விதங்களிலே   ஜீவனஸ்தானம்  பாதிக்கப்ப்டடிருக்கும்.  வியாபாரத்தில்   உள்ளவர்களுக்கு வர வேண்டிய  பணம்  வராமல் அலைக்கழிப்பு  ஏற்பட்டிருக்கும்.     கைக்கு எட்டியது  வாய்க்கு   எட்டவில்லை  என்பதுபோல வரவேண்டிய பணம் இதோ அதோ  என  தண்ணிகாட்டி  இருக்கும். இனி  அந்த நிலை மாறி  லாபஸ்தானமாகிய 11-ஆம் இடத்திற்கு  வருகின்ற குரு  தொழிலை  விறுவிறுப்பாக நடைபெறச் செய்யும்.   தொழிலில்  தடுத்து நிறுத்தப்படும்   விரய ஸ்தானத்திற்கு

   அமதிபதியான குரு   விரய ஸ்தானத்திற்கு  12-ஆம்  இடமாகும், வாபஸ்தானத்திற்கு செல்வதால் இனி விரயம் அதிகம் இருக்காது. விருச்சிக ராசியில்    ஒரு   வருடம்  காலம்    சஞ்சரிக்க  போகும் குரு  இடையில் இரண்டு  மாத காலத்திற்கு  அதிசார கதியிலே 12-ஆம்  இடமான கனுசுக்கு  வருகிறது. 13.03.2019  முதல்    19.05.2019  வரை  விரய ஸ்தானததில் குரு வலுப்பெறவதால் அப்போது செலவுகள்  மிகக் கடுமையாக இருக்கும்.   மற்ற 10 மாதங்களும் 11-ஆம் இடமாகிய விருச்சிகத்தில் இருக்கப்போகும் குருவால் நன்மைகள்தான் அதிக அளவில்  நடைபெறும்.

  

    விருச்சிக ராசிக்குள்  வரும் குரு 5-ஆம் பார்வையால்  மீனத்தையும் 7-ஆம் பார்வையாக  ரிஷபத்தையும், 9--ஆம் பார்வையாக கடகத்தையும் வீடு பார்க்க இருக்கிறது. மகர ராசிக்கு  மீனம்    மூன்றாம் வீடு  ரிஷபம்    5-ஆம்   இடம் கடகம் 7ஆம் இடத்திற்கு குரு பார்வை   கிடைக்கிறது  என்பதால்   களத்திர   ஸ்தானம்   வலுப்பெற்று   திருமணம்    ஆகாதவர்களுக்கு   இப்போது திருமணம் முடிந்துவிடும்.  திருமண ஆன தம்பதியரில்  யாருக்காவது கருத்து  வேறுபாடு  ஏற்பட்டு  கணவன் மனைவி பிரிவு  ஏற்பட்டிருந்தால்  அது இப்போது  சரியாகி   விடும்.  வாழ்க்கைகத் துணையின்    ஆரோக்கியமும்   சிறப்பாக இருக்கும்.  உங்கள் கணவா் அல்லது மனைவியின் உத்தியோகத்தில்    உள்ள பிரச்சினைகள் எல்லாம்    முடிவுக்கு வரும்.   அவா்  வியாபாரம் செய்து கொண்டிருந்தால் அது இப்பொகுது மிகச் சிறப்பாக நடைபெறும்.    கணவன்   அல்லது மனைவி வீட்டாருடன் ஏற்ப்டட கருத்து  வேறுபாடுகள் மறையும் .  வேலை நிமிர்த்தமாக வெவ்வேறு  ஊா்களிலே  தனித்தனியே   வாழ்ந்துகொண்டிருந்தால் இப்போது தம்பதியா் ஒன்றாக   சோ்ந்து  மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தும்   நேரம் வந்துவிட்டது,

 

         மேலதிகாரிகள்  ஆதரவுக்கரம் நீட்டுவார்கள்.  தள்ளிப்போன பதவி உயர்வு  வந்து சேரும்.விரும்பிய  இடத்துக்கு மாறுதலும் கிட்டும். உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் செய்யும் முயற்சிப்படி  அரசாங்க வேலை வந்து  சேரும்.புதிதாக  வீடு கட்டபோட்டதிட்டம் நிறைவேறும் அதற்கு வேண்டிய கடனும் வந்து சேரும்.  வேலைபார்க்கும் இடத்திலுள்ள பெண்களிடம் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்படவேண்டும்.  பெண்களின் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இல்லை.  உபரி வருமானங்கள் வந்து சேரும்.  திருமணமாகாத ஆண், பெண்  ஊழியர்கள்  திருமணம்  தாமதமின்றி  நடக்கும்.

      கணவன் மனைவி உறவில் விரிசல் வராது. உங்கள் மனக்குறைகள் அனைத்தும் தீரும். பொன்,  பொருள் சேர்க்கை  விருப்பப்படி நடக்கும். பொருளாதார கஷ்டம் இருக்காது. குரு  பகவான் அருளால் நினைத்த குழந்தை கிடைக்கும். தந்தை வழியில் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும். தாய்வழி சொத்துக்கள் கிடைக்கும். இப்பொழுது இருந்த நிலை மாறி  இப்பொழுது நீங்கள் நினைத்த வீட்டை கட்டி முடிப்பீர்கள். பெண்களுக்கு இந்த குருபெயர்ச்சி பொற்காலம்.

       நீங்கள்  கொள்முதல்  செய்த  சரக்குகள்  அனைத்தும்   விற்பனையாகும்.  உங்களுக்கு  போட்டியாக இருந்த வியாபாரிகள் விலகிச் செல்வாரகள்.  வாடிக்கையாளர்களின்   எண்ணிக்கை  கூடுதலாகும்.  வெளியூர்களின் கிளைகள் துவங்கிட போட்ட திட்டம் நிறைவேறும்.  இப்போது நல்ல வேலையாட்களை நீங்கள்  அடைவீர்கள். வீட்டில்இருந்து வந்த குழப்பம் நீங்கள்  புதிய  சொத்துக்கள் வாங்க போட்ட திட்டம்   நிறைவேறும்.  சுபகாரியப்  பேச்சுகள்  கைகூடும். சேமிப்பு  உயரும்.

      தொழிலாளர் தொழிலதிபர்கள்  ஒற்றுமை கூடும்.  தொழிலதிபர்கள்  புதிதாக தொழிற் சாலைகள்  அமைப்பார்கள்.  கூட்டாளிகள்  நல்லவர்களாக சேர்வார்கள்.  கதவடைப்பு  போன்ற  நிலை எதுவும்  இல்லாமல்  தொழிலாளர்கள்  வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். PF  நிலுவைத் தொகைகள் வந்து  சேரும். கூடுதலான சம்பள உயர்வும் கிடைக்கும்.

       வாய்ப்புகளைத்  தேடி நீங்கள்  செல்லவேண்யதில்லை . பட  வாய்ப்புகள்  உங்களைத் தேடி வரும். பொருளாதார நிலை உயரும்.  பெற்றோர் பார்த்த பெண்களை மணந்தவர்கள் சிரமமில்லாத வாழ்க்கையை வாழ்வார்கள். மாணவர்கள்  புதிய  கருவிகளைக் கண்டுபிடிப்பார்கள். ஒரு சிலர்  நீதிமன்றம்  செல்ல வேண்டியிருக்கும். போட்டியாக இருந்தவர்கள்  விலகிச் செல்வார்கள்..

  பரிகாரம்: 

குருபகவானுக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபட நல்லது நடக்கும் , எல்லாம் வெற்றியாகும்.

தேய்பிறை அஷ்டமிக்கு பைரவரை வழிபட நல்லது நடக்கும்.

சனிக்கிழமை தோறும் பெருமாளுக்கு துளசி மாலை சாற்ற வேண்டும்.

வாழ்க வளமுடன் 

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter