Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

மகர ராசி நேயர்களுக்கு(2014 TO 2017)


அவசரப் பதற்றத்தோடு கூடிய எதிர்பார்ப்பு உங்களிடம் இருப்பதும் உறுத்துவதும் தூண்டுவதும் மிகவும் அதிகம். எப்போழுது யாரால், எங்கே, எப்படி நல்லது நடக்கும் என்று ஏக்கத்தோடும் கலக்கத்தோடும் அல்லவா காத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால், கடந்த பல வருடங்களாகவே பாபகிரகமான சனிபகவானும் அவருடன் 1 ½ வருடகாலமாக மற்றொரு பாபகிரகமான ராகுவும் சேர்ந்து கொண்டு படுத்தி வைத்திருக்கிற பாடுகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. பிழைப்புக்கும் பொறுப்புக்கும் உழைப்புக்கும் பெரும் போராட்டமாக அல்லவா அவதிப்படுத்திவிட்டது.

சில மாதங்களுக்கு முன் குரு கிரகம் பெயர்ந்ததும், அடுத்ததாக ராகு – கேது ராசி மாறியதும், ஆறுதலான மாறுதல்கள்தான்.

வாக்கியப் பஞ்சாங்கப்படி 16-12-2014 ( ஐய வருவம் மார்கழி மாதம், 1ஆம் நாள்) செவ்வாய்க் கிழமை, பிற்பகலில் சனிப்பெயர்ச்சியாகும்.

உங்களைப் பொறுத்தவரையில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக உங்கள் மகர ராசிக்குப் 10ம் இடத்தில் துலாராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சனிபகவான், லாபஸ்தான 11ம் இடத்தில் விருச்சிகராசிக்குச் சிறப்பு வருகைதருகிறார். இது அருமையான மாற்றம் தருவதில் சந்தேகமில்லை. முதலில் ஜீவன அருமையான மாற்றம் 10ம் இடத்தை விட்டு சனி விலகிவிடுவதால், ஜீவன் சம்பந்தமான எல்லா வேலைகளிலுமே இருந்தபின்னடைவு, சரிவு, சங்கடம், சோதனை, வேதனை எல்லாமே இனிமேல் மாறும் விலகும்.

பாதிப்பாக 10ம் இடத்தை விட்டு இனிமேல் சனி நீங்கிவிடுவதன் காரணமாக, உங்களுடைய  ஜீவனம், பிழைப்பு, உழைப்பு, கடமை, காரியம் இவற்றில் இருந்துவரும் இக்கட்டுகளும் இழுபறிகளும் இடைஞ்சல்களும் நீங்கிவிடும். தாமதமான தடுமாற்றமான தடம்புரள வைக்கக்கூடியதான தாறுமாறான போக்கு மாறிவிடும். கழுத்துப் பிடியாகப் பிடித்து நெருங்கித் தவியாய்த் தவிக்கவைத்த கடுமையான காலக்கட்டம் அகன்று போய்விடும்.

சமீபத்தில் சனிராசி மாறுவதோடு, பாதிப்பான அவருடைய பார்வைகள் விலகிச் செல்வதாலும் பல நன்மைகளுக்கிருக்கும் முட்டுகட்டைகள் விலகும். 10மிடத்துச் சனியின் 3 கெட்ட பார்வைகளில் ஒரு பார்வை விரய ஸ்தானத்தின் மீது பதிந்திருந்தது. இதனால் விரய பலன் கெட்டுவிட்டதாகச் சொல்ல முடியாது. தண்டச் செலவுகள் ஏற்படத்தான் செய்தன. விரயங்கள் பல வகையிலும் தொடர்ந்தன. இனிமேல் விரய ஸ்தானத்தைவிட்டுச் சனியின் தீய பார்வை விலகிவிடுவதால், செலவு செய்து கொள்ளும் சக்தி அதிகரிக்கும். சுபச் செலவுகளைச் செய்து கொள்ளவும் சூழ்நிலைகள் தூண்டும்.

12ம் இடத்தில் நீண்ட தூரப் பயணத்தையும், வெளிதேக வாசத்தையும்கூட குறிக்கும். அங்கிருந்து சனிப்பார்வை விலகிவிடுவதால், நீண்ட தூரப்பிரயாணத்துக்காகத் திட்டமிட்டும் செயல்படுத்த முடியாமலிருந்த நிலைமை மாறும். தூரத்து மாநிலங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ சென்று வருவதற்கான அவசியம் இருந்தால் அதற்கான வாய்ப்புகள் கைகூடும்.

சொந்தம் பந்தங்களுடன் விகல்பம், கருத்து வேறுபாடு என்றிருப்பதும் நீங்கி, உறவினர்களுடன் மனங்கலந்து பழகும்படியாக நல்லிணக்கம் ஏற்படும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் இருந்த அதிருப்திகரமான நிலைமையும் மாறும். பலருடன் நன்றாக அறிமுகமாகி நட்புறவு கொண்டு நேசமும் பாசமுமான தொடர்புகளை விரிவுப்படுத்திக் கொள்ள நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

வீடு, மனை, வாகனம், கால்நடைகள் ஆகியவற்றையும் குறிப்பிடும் 4ம் இடத்தை விட்டு சனிப்பார்வை விலகிவிடுவதால், வீட்டு வசதி அதிகரிக்கும். மோசமான வாடகை வீட்டை விட்டு, வசதி கூடுதலான வீட்டுக்குக் குடிபோகலாம். மனை வாங்கலாம். காலி மனையில் வீடு கட்ட ஆரம்பிக்கலாம். ஏற்கனவே வீடு கட்ட ஆரம்பித்து அரையும் குறையுமாகத் தேங்கிக்கிடக்கும் கட்டுமான வேலைகளைத் தொடர்ந்து செய்து முடிக்கலாம். சொந்தமாக வாங்கியோ கட்டி முடித்தோ தயாராக இருக்கும் வீட்டில் புதுமனை புகுவிழாவும் நடத்தலாம். ஆக, வீட்டு வசதிக்குக் குறுக்கீடாக இருந்த கெடுதலான சனிப்பார்வை விலகிவிடுகிறது.

படிக்கும் மாணவ – மாணவிகளுக்குக் கல்வியிலிருந்த கடினமான போக்கு மாறும். இந்த சனிப்பெயர்ச்சியோடு களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில் சனியின் கெட்ட பார்வையும் விட்டு விலகிவிடுகிறது. இதனால் திருமண சுபகாரியங்களுக்கிருந்த தங்குதடைகள் நீங்கும். தகுந்த வயதுக்கு வந்தவர்களுக்கு உகந்த விதமாக மணமகளோ, மணமகனோ கிடைத்து, கல்யாணம் நடக்கும்.

ஏற்கனவே திருமணமாகியுள்ள தம்பதிகளுக்கு அசௌகரியம் அபிப்பிராயபேதம், அதிகப்படியான வேலை, அலுப்பும் சலிப்புமான மனநிலை ஆகியவற்றால் சந்தோஷம் குறைவாகத்தான் இருக்கிறது. மேலேசொன்னப்படி களத்திர ஸ்தானத்தைவிட்டு சனிபார்வை விலகிவிடுவதன் காரணமாக கணவருகோ, மனைவிக்கோ, யாருக்கு நோய் நோடி உபத்திரங்கள் இருந்தாலும் விலகும். கசப்பான அபிப்பிராயங்களும் கருத்து வேறுபாடுகளும் நீங்கும். இணக்கமும் நெருக்கமும் அதிகரிக்கும். வெளியூரில் வேலை பார்ப்பதன் காரணமாகப் பிரிந்திருத்த தம்பதிகளும், இனி ஒன்று சேர்ந்து கொள்வதற்கு வாய்ப்பு உண்டாகும். கூட்டுறவு ஒப்பந்தங்கள் ஆகியவற்றிலிருந்து குதர்க்கமும் விவகாரமுமான நிலவரமும் மாறும்.

எந்த வயதுக்காரரானாலும் உடம்பைப் படுத்தி கொண்டிருந்த நோய் நொடிகள் நீங்கும். சதாஅலுப்பு, சலிப்பு, களைப்பு, அலைச்சல் உளைச்சல் சௌகரியக் குறைச்சல் என்றிருப்பவையெல்லாம் விலகும். ஊக்கத்துடன் செயல்பட தொடங்குவீர்கள். 9 கிரகங்களில் சனிதான் உழைப்பு கிரகம். ஆகவே, உழைப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்படிச் செய்வார். உழைப்பை கொண்டு ஆதாயம் அடையும்படியும் செய்வார்.

படிப்பயோ பயிற்சிகளயோ அரசாங்க உத்தியோகமோ, சுயமாகத் தொழில் வாய்ப்போ, சொந்தமாக வியாபாரமோ, தனித்திறமையைக் கொண்டு கலைத்துறையில் ஈடுபாடும் சந்தர்ப்பமோ, அவரவர்களுடைய ஜென்ம ஜாதகத்தையும் அடைப்படியாகக் கொண்டு, பிழைப்பதற்கும் உழைப்பதற்கும் ஏதாவது வழி பிறந்துவிடும்.  சொந்தத்தில் மனை, நிலம், தோட்டம், துரவு, வீடு, கடை, தொழில்நிலையம் என்று சொத்துபத்துகள் சேரும். அல்லது இருக்கிற சொத்துபத்துக்களில் உள்ள வில்லங்கம், சங்கடம், ஆதாயப் பாதிப்பு, அபிவிருத்தித் தடங்கல் இவையெல்லாம் விலகி, சொத்துபத்துக்களின் வசதி வாய்ப்புகள் பெருகும்.

முக்கியமான மனிதர்கள், பெரிய புள்ளிகள், பிரமுகர்களுடைய தொடர்பும் ஆதரவும் கைகூடும். வேலையாட்கள், தொழிலாளிகள், பாமரமக்கள், பாட்டாளி வர்க்கத்தினரின் ஆதரவும் நீடித்துக் கொண்டிருக்காமல் கூடிய விரைவில் தீர்வுக்கு வரும். வழக்கின் தீர்ப்புகள் சாதகமாக அமையும். எதிலும் மடங்கியும் தயங்கியும் பின்னடைந்தும் இருந்த நிலைமை மாறி, முன்னேற்றம் ஏற்படும். வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். மதிப்பும் மரியாதையும் தரமும் வசதியும் உயரும் என்பதை, இனிமேல் வரும் அனுபவங்களிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.  

மொத்ததில் 65 % நன்றாக இருக்கும் .

 

பரிகாரம்

பிரதி தினம் காலை விஷ்ணு சகஸ்ரநாமம். லலிதா சகஸ்ரநாமம் ஜபம் செய்துவந்தால் மனநிம்மதி கிடைக்கும். ஸ்ரீ சக்கர யந்திரம் வெள்ளிகிழமைகளில் பூஜை செய்யலாம். நற்பலன் கிடைக்கும்.

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter