Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

மிதுனம்

   ராகு கேது பெயர்ச்சி  பலன்கள்  2019

         மிதுனம்   ராசி  அன்பர்களுக்கு

 (  மிருக  சீரிஷம் ,3,4ம்  பாதம்,  திருவாதிரை  புனர்பூசம் 1,2,3-ம்  பாதம் முடிய )

 

   மிதுனம்   ராசி  அன்பர்களே!      இந்த  ஆண்டில்   ராகு  உங்கள்  ராசிக்கு 2-ம்  இடமான கடகத்தில்  இருக்கிறார்.  இது  சிறப்பான இடம் இல்லை.  இங்கு அவர் குடும்பத்தின் சிற்சில பிரச்சினையையும்  தூரதேச பயணத்தையும்  ஏற்படுத்திருப்பார். பொருட்களை  களவு கொடுக்க நேரிட்டிருக்கும்.  பொருளாதார  இழப்பு ஏற்பட்டிருக்கும்  ராகு 13-2-2019  அன்று உங்கள் ராசிக்கு  மாறுகிறார்.  இதுவும்  சுமாரான  நிலைதான்.  அங்கு அவரால் வீண்  அலைச்சல் ஏற்படலாம்.  உங்கள்  முயற்சிக்கு பலன்  இல்லாமல் போகலாம்.

 ராகுவுக்கு  இணையான இன்னொரு கிரகம்  கேது 8-ம்  இருப்பதால்  உஷ்ண பித்தம், மயக்கம்,  சளி போன்ற உபாதைகள் தந்திருப்பார்.  விபத்து பயம்,  செயல்  முடக்கம்,  உடல் நாளாக  குறைவு  முதலியன வந்திருக்கலாம். 

 அவர் 13-2-2019  அன்று 7-ம்  இடத்திற்கு மாறுகிறார்..  இதுவும் உகந்த உடம் என்று சொல்ல முடியாது.  ஆனாலும்  எட்டாமிடத்தில்  இருந்தது.  போல்  கெடு   பலன்கள்  நடக்காது.   7-ல்  கேது இருக்கும்.  போது  மனைவி வகையில்  பிரச்சினையையும் அலைச்சலையும்,  தரலாம்.  வீண்  மனவேதனை   உருவாகலாம்.  எதிரிகளால்  பிரச்சினை  வரலாம்.

குரு   மார்ச் 13-ந்  தேதி  முதல்  சுப நிகழ்ச்சியை  தருவார்.  தேவைகள்  பூர்த்தியாகும்.   எண்ணற்ற பல வசதிகள்  கிடைக்கும்.  மேலும்  9-ம் இடத்துப் பார்வை  மூலம் மந்த நிலை மாறும்.  துணிச்சல் பிறகும்.

 உத்தியோகம் சக  ஊழியர்கள்  உதவி கரமாக  இருப்பர்.  தடைகள்,  திருப்தியின்மை,  போன்றவை  மறையும்,  பதவி உயர்வு,  சம்பள உயர்வு போன்றவை  கிடைக்கும்.  உங்கள்  செல்வாக்கு  அதிகரிக்கும்.  வேலை  நிமித்தமாக  குடும்பத்தை   விட்டு பிரிந்து சென்றவர்கள்  ஒன்று சேருவர்.   மேல்   அதிகாரிகள்   ஆதரவுடன்  இருப்பர்.  கோரிக்கைகள் நிறைவேறும். 

உத்தியோகத்தில்  மதிப்பு அதிகரிக்கும். குருவின் வக்கிர காலத்தில்  சுதந்திரமற்ற  நிலையில் இருப்பீர்கள். ஒருவித பயம்  ஆட்கொள்ளும் .  அதிக சிரத்தை  எடுத்தே பணியாற்ற  வேண்டியது இருக்கும் வேலையில்  பொறுமையும்  நிதானமும் தேவை. உங்கள்  பொறுப்புகளை  நீங்களே கவனிக்க வேண்டும். 

வியாபாரிகள்  திருட்டு களவு பயம்  இனி இருக்காது. அலைச்சல் அதிகரிக்கும்.  அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  பணவிஷயத்தில்  யாரையும்  நம்பி விட வேண்டாம்.   தொழில் ரீதியாக வெளியூர் பயணம்  சென்றவர்கள்.  வீடு திரும்புவார்.  எதிரிகளின்  இடையூறு  அவ்வப்போது  தலைதூக்கும். ஆனால்,  குருவின்  பார்வையால்  தவிடுபொடியாகி  விடும்.  தொழில்  முன்னேற்ற பாதையில்  இருக்கும்.  புதிய  தொழில் ஓரளவு அனுகூலத்தை  கொடுக்கும்.  குரு,  பக்க பலமாக  இருப்பதால்  எந்த தொழிலையும்    தைரியமாக நின்று  நடத்தி  இறுதியில்    வெற்றி கொள்ளலாம்.  உங்களது  ஆற்றல்  மேம்படும்.  துணிச்சல்  பிறகும். பண வரவு கூடும்.  பகைவர்களின்  சதி உங்களிடம்  எடுபடாது.  குருவின்  வக்கிர காலத்தில்  அதிக முயற்சி எடுத்தல்  வாடிக்கையாளர்களை  தக்க வைக்க   வேண்டியதிருக்கும். சனி, ராகுவால்  பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம்  ஏற்படும்.   அலைச்சல் அதிகரிக்கும்.  வெளியூர் வாசம்  நிகழும்.   சிலர்  தீயோர் சேர்க்கையால் பணத்தை  விரயமாக்கலாம்.

கலைஞர்கள்  புதிய  ஒப்பந்தங்கள்  கிடைக்கப் பெறுவார்.  பாராட்டு  வந்து  சேரும்.  குருவின்  வக்கிரகாலத்தில்  புதிய  ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர்.   புகழ்,  பாராட்டு வந்து சேரும்.  குருவின்      சீரான நிலையில் இருப்பர்.   ஆனால்  எதிர்பார்த்த  பதவி கிடைப்பதில்  சற்று  தாமதம்  ஆகலாம்.  மனக்குழப்பம் ஏற்படலாம்.

விவசாயிகள்  அதிக  முதலீடு காணலாம்.  சிலர் வெளிநாடு சென்று படிக்கும் யோகத்தைப்  பெறுவார்.  குருவின்  வக்கிர காலத்தில்  சிரத்தை  எடுத்து  படிப்பது நல்லது. 

 விவசாயிகள்  அதிக  முதலீடு பிடிக்கும். விவசாயம்  எதையும்  செய்ய வேண்டாம்.   

மஞ்சள்  கேழ்வரகு சோளம்,  போன்றவை  மூலம்  நல்ல வருமானத்தை  காணலாம்.  கால்நடை  வகையில் எதிர்பார்த்த  பலன் கிடைக்கும்.  புதிய சொத்து  வாங்க சில காலம்  பொறுத்திருக்க வேண்டும்.  வழக்கு  விவகாரங்களில்    மெத்தனமாக   இருக்க வேண்டாம். பெண்கள்  மகிழ்ச்சியுடன்  காணப்படுவர்.  கணவரிடம்  அன்பையும்  ஆதரவையும்,  கிடைக்கப்பெறலாம்.  பிள்ளைகளால்  பெருமை கிடைக்கும்.

புத்தாடை  அணிகலன்கள்  வாங்கலாம்.  பெற்றோர் வீட்டில்  இருந்து  பொருட்கள்  வரப்பெறலாம்.  குருவின்  வக்கிர காலத்தில்  சிற்சில விஷயங்களில் பொறுமையாகவும்,  விட்டுக்கொடுத்து  போகவும்,  அக்கம்  பக்கத்தினர்  வகையில்  மனக்கிலேசம்    வரலாம்.   பொருள்  இழப்பு  ஏற்படலாம்.

 பரிகாரம்:   திருநாகேஸ்சுவரம்,  காளஹஸ்தி     போன்ற  ஏதாவது  ஒரு  தளத்திற்கு சென்று  வாருங்கள்.  அல்லது  அருகில்  இருக்கும்,  புற்றுள்ள  கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வது   நல்லது.   அஞ்ச நேயர   வழிபட்டால்   அச்சம்  நீங்கி  கூடுதல்  பலனை  பெறலாம்..   முடிந்தால்    ஊன முற்ற   ஏழைகளுக்கு  இயன்ற உதவியை  செய்யலாம்.  சனிக்கிழமை  காக்கைக்கு  அன்னம்  படைத்து  உணவு உண்ணுங்கள். 

 

             வாழ்க  வளமுடன் .

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter