Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

மிதுனம்  ராசி   நேயர்களே(2014 TO 2017)

கடந்த 2 வருடங்களாக பல பிரச்சனைகள், இடையூறுகள், அலைகழிப்புகள், அதிருப்திகரமான பிரச்சனைகளை சந்தித்து வந்த நீங்கள் கடந்த சில மாதங்களாகதான் ஆறுதலை சந்தித்து இருக்கிறீர்கள்.

உங்கள் புத்திஸ்தானத்தில் பாபகிரமான சனியும், அவருடன் 1 ½ வருடகாலமாக பாபகிரகமான ராகுவும் சேர்ந்து கொண்டு குறைகள், குழப்பங்கள், குதர்க்கங்கள் என்று கொடுத்து நிம்மதியை கெடுத்ததெல்லாம் கொஞ்சமா? நஞ்சமா? ஆனால் குருபகவான் தன குடும்ப ஸ்தானமான கடகராசிக்கு வந்து உச்சபலத்துடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பதைத்தான் ஆறுதலான மாறுதல் என்று சொன்னேன். சுபகாரியங்கள், சுகசௌகரிய அபிவிருத்திக்கும் குருபகவான் பெருமளவில் ஒத்துழைப்பார் என்பதையும் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் சனிபகவான் பெயர்ச்சியடைகிறார் என்பது மிகவும் முக்கியமான விஷயம். ஆக்கப்பூர்வமாக முன்னேற்றுவதிலும், அவதிபடுத்திப் பின்நடத்துவதிலும் அதிகபட்ச சக்தியை வெளிபடுத்தகூடிய சனிபகவான் உங்களுக்கு எப்படியெல்லாம் பலன் தருகிறார் என்பதையும் கவனிக்க வேண்டுமல்லாவா.

சனிபகவான் வாக்கியப்பஞ்சாங்கப்படி 16-12-2014  ( ஐய வருடம், மார்கழி மாதம், 1 ஆம் நாள் ) செவ்வாய்கிழமை பிற்பகலில் சனிப்பெயர்ச்சியாகும்.

இதுவரை 5ம் இடத்தில் இருந்து தொல்லைகள் கொடுத்து வந்த சனிபகவான் அதாவது புத்திலிருந்து மந்தத்தனம் மாறும். ஞாபகமறதி, கவனத்தடுமாற்றம் சலிப்பு மனப்பான்மை. சரியாக முடிவெடுக்க முடியாதபடி குழப்பம், சதா மனதை அரித்துக் கொண்டிருந்த சந்தேகம், சஞ்சனம் இவையெல்லாம் நீங்கிவிடும். பயம் போகும். தயக்கம் நீங்கும், தாழ்வுமனப்பான்மை ஓழியும் தன்னம்பிக்கைகள் தலை நிமிரும், புத்தியும், சக்தியும் அதிகரிக்கும். நல்லது கெட்டது புரியும். நடந்து போக எது உகந்த வழிஎன்று தெரியும். தறிகெட்டு மனம் தாறுமாறாக அலைமோதிய நிலைமை மாறி, குறிவைத்த லட்சியத்தை நோக்கி எண்ணங்கள் பந்தயக் குதிரை வேகத்தில் பறக்கும்.

5ம் இடம் புத்திஸ்தானம் மட்டுமல்லாமல், பிரபு ஸ்தானமும் ஆகும். புத்திர ஸ்தானமும் அதுதான் – பக்தி, பூர்வ புண்ணிய, தெய்வீக ஸ்தானமும் அதுவேதான். ஆகவே, அங்கேயிருந்து அசுப கிரகமான சனிவிலகுவதால், பெரிய மனிதர்கள், பிரமுகர்கள், பிரபலமானவர்கள், முக்கிய புள்ளிகள், மேலிடத்து மனிதர்கள், அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் இவர்களுடைய சந்திப்பு, தொடர்பு, பழக்க வழக்கம், நெருக்கம், ஆதரவு, தயவு, சலுகை, சகாயம், இவற்றிற்கெல்லாம் இருந்த முட்டுகட்டைகள் விலகும். இனிமேல் இவர்களால் கிடைக்கக்கூடிய நன்மைகளுக்கு தட்டுத் தடங்கல் குறுக்கிட்டுக் கொண்டிருக்காமல் நீங்கும்.

குழந்தைப் பேறு காலாகாலத்தில் கைகூடாமல் தாமதப்பட்டு தள்ளிப்போய்க் கொண்டிடிருந்தாலும், இனிமேல் தர்ம சங்கடமான கேள்விக்கோ, தலைகுனிவுக்கோ அவசியம் இல்லாமல், கூடிய சீக்கிரம் நல்ல சமாசாரத்தைச் சொல்லலாம்.

பூஜை புனஸ்காரங்கள், பக்தி பிரார்த்தனைகள் என்று முழு மனத்தோடு ஈடுபட முடியாமல், இருந்த விரக்தி மனப்பான்மையும் மாறும். முன்னைவிட பக்தியில் நாட்டம் கூடுதலாகும். பூஜை, விரதம், ஆலயப் பிரவேசம், சுவாமி தரிசனம் இவற்றிற்கெல்லாம் அதிக சந்தர்பங்கள் ஒத்துழைக்கும். தெய்வ பக்திக்குப் பலன் இல்லாமல் தடுத்துக் கொண்டிருந்த தோஷங்கள் கூட ஒதுங்கும். அதிர்ஷ்டம் சுத்தமாக கண்களை இறுக்கி மூடிக்கொண்டிருக்காமல், இனிமேல் கண் திறந்து உங்களைப் பார்க்கும். உங்களால் முடிகிற வரையில் உயர்த்துவதற்குப் பக்கபலமும் தூண்டுதல்களும் உண்டாகும்.    

சில முக்கியமான இடங்களிலிருந்து சனி தன்னுடைய கெட்ட பார்வைகளை விலக்கிக் கொள்வதாலும் பல கெடுதல்கள் நீங்கிப் போகும்படு செய்கிறார். சனிராசி மாறுவதோடு, அவருடைய தீய பார்வைகளில் ஒரு பார்வை, தன – குடும்ப – வாக்கு ஸ்தானத்திலிருந்து விலகிவிடுகிறது. இதனால் அடிப்படையாக இருந்த பல கெடுதல்களும் நீங்கி, அவசியமான அபிவிருத்திகளுக்கெல்லாம் வழிகள் திறக்கும். முக்கியமான பணக்கஷ்டத்திலிருந்து விடுபடுவதே ரொம்ப சந்தோஷமான சமாச்சாரம் இருக்கும். பணம் சரியா வர்றதிறதில்லேயே வர்ற வருமானம் பத்துவதில்லை. வேண்டிய சமயத்துக்குக் கிடைக்கறதில்லை. குடுத்ததைத் திருப்பி வாங்க முயவில்லை – வாங்கினதை திருப்பிப் தர்றதுக்கும் வழியில்லே, தட்டுப்பாடுகளுக்கும் தவிப்புக்கும் முடிவே இல்லே. என்கிற மாதிரியாய் இருந்த மோசமான காலக்கட்டம் விலகிவிடுவதே சந்தோஷம் தான்.

வருமானம் இனிமேல் அதிகரிக்கும், வரவேண்டிய பணம் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த குளறுபடிகள் தீரும். வளைந்து கிடந்த வாக்குநாணயம் நிமிரும். பேச்சு வார்த்தைகளில் இருந்த இக்கட்டுகள், இடைஞ்சல்கள், இனிமேல் கடுமையாகத் தொடர்ந்து கொண்டிருப்பது கிடையாது.

இதுவரை உங்களுக்குக் கல்யாணம் ஆகவில்லை என்றும், தகுந்த வயது வந்தும் சரிவர சம்பந்தம் கைகூடாமல் சுபகாரியம் தட்டியே போய்கொண்டிருகிறது என்றும், இதுவரையில் களத்திர ஸ்தானத்திலே பதிந்து கெடுத்துக் கொண்டிருந்த கடுமையான சனியின் பார்வை, இதோ, இந்த சனிப்பெயர்ச்சியிலிருந்து விலகிவிடுகிறது. இனிமேல் தோஷம் நீங்கிவிடும். தடைகள் அகன்றுவிடும். களத்திர ஸ்தானம் சுத்தமாகிவிடும். கல்யாண பேச்சு வார்த்தைகள் வலுக்கும். சுபகாரிய முயற்சிகள் தீவிரப்படும். திருமண சுபமுகூர்த்தத்துக்கும் உன்னதமான காலம் உதயமாகிவிடும்.

ஏற்கனவே திருமணமான தம்பதிகளுக்கும் சதாநோய் நொடி, அசதி, அலுப்பு, சலிப்பு, விரக்தி, வெறுப்பு என்று உப்பு சப்பில்லாமல் ஏனோதானோ என்றிருந்த நிலைமையில் இனிமேல் நல்ல மாறுதல்கள் உண்டு. கருத்து வேறுமாடுகளைத் தீவிரப்படவிடாமல், கூடுமானவரையில் அனுசரித்துச் சரிக்கட்டிக் கொண்டு போகமுடியும். விவகாரம் தலைதூக்காது. விகல்பமான பிரச்சனைகள் அல்லது வெளியூர் வேலை காரணமாகப் பிரிந்திருந்த கணவன் மனைவியரும் இனிமேல் ஒன்று சேர்ந்து கொள்ள சந்தர்ப்பம் ஒத்துழைக்கும். எப்படிப் பார்த்தாலும் தம்பதிகளுக்குள் இனிமேல் இணக்கமும் கலகலப்பும் கூடுதலா இருக்கும்.

முதலில் உங்களுடைய ஆரோக்கியமே அபிவிருத்தியடையும், ரோக காரகனான சனி 6ம் இடத்தில் சாதகமாகிவிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சின்ன சின்ன நோய் நோடிகள் வந்தாலும் உடனுக்குடனே குணமாகும். ஏற்கனவே இருக்கக்கூடிய பிணி பீடைகள் இனிமேலும் நீடித்துத் தொல்லை கொடுக்காமல் விலகியோடும். ஆகவே, இந்த சனிப்பெயர்ச்சிக்குப் பின் உங்கள் உடல்நலத்தில் அபிவிருத்தியான நல்ல மாறுதல்கள் ஏற்படும். ஊட்டமும் தெம்பும் அதிகரிக்கும். படிப்பது, பயிற்சி செய்வது, வேலை தேடுவது, வியாபாரத்தில் இறங்குவது, சுயதொழிலை மேற்கொள்வது ஆகிய முயற்சிகளில் மும்முரமாக இயங்கலாம். உழைப்புக் கிரமான சனி அனுகூலமாகிவிடுவதால், இனிமேல் உழைப்பு எதுவும் வீண்போகாது. வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் எதுவும் கிடைத்துவிடும். சொந்தமாக வியாபாரம், சுயதொழில் என்று ஈடுபடுவதற்கும் சந்தர்பங்கள் சரிவர ஒத்துழைக்கும். கலைத் துறையில் இனிமேல் கால் ஊன்றிக் கொள்ள முடியும்.

கடன் தொந்தரவுகளையும் சரிக்கட்டி சமாளித்துக் கொண்டு வரலாம். சௌகரியமான புதுக்கடனை வாங்கிக் சிரமம் கொடுக்கிற பழைய கடனைக் தீர்க்கலாம். வருமான அதிகரிப்பைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் கடனைத் திருப்பிக் கொடுத்து, பாரத்தைக் குறைத்துக் கொண்டு வரலாம். சுத்தமாகக் கடனை ஒழித்துக் கட்டுவதற்கும் சனிபகவானுடைய ஒத்துழைப்பு உண்டு. போட்டி, பொறாமை, மறைமுகமான எதிர்ப்பு, வம்பு, விவகாரம், வழக்கு ஆகியவற்றையெல்லாம் கூட சனி பகவானுடைய பக்கபலத்தால் முறியடித்து ஜெயிக்கலாம். வறுமைப் பிடியிலிருந்து விடுபடலாம். வளமையை அதிகப்படுத்தக்கூடிய வசதி வாய்ப்புகளையெல்லாம் விருத்தி செய்து கொள்ளலாம்.

மொத்ததில் 75 % நன்றாக இருக்கும் .

பரிகாரம்

ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் வடக்கிழக்கில் உள்ள காலபைரவருக்கு நல்லெண்ணெய் ஊற்றி அகள் விளக்கில் மிளகு சிறுமுட்டையாக கட்டி 27 சனிக்கிழமை தீபம் ஏற்றிட குடும்பத்தில் சுபீஷம் ஏற்படும். வெள்ளிக்கிழமை தோறும் மீனாட்சி அம்மனை வழிபடவும் நல்லது நடக்கும் .

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter