Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

சிம்மம்

 

          சிம்ம   ராசி  அன்பர்களுக்கு 

         ராகு கேது பெயர்ச்சி  பலன்கள்  2019

    ( மகம், பூரம், உத்திரம்  1-ஆம்  பாதம் )

தற்போது  ராகு 12-ம்  இடமான  கடகத்தில் இருக்கிறார்.   இங்கு  அவர்  பொருள் விரயத்தையும்,   தூரதேச  பயணத்தையும் கொடுத்திருப்பார். 

13-2-2019 அன்று அவர் இடம் மாறி  11-ம்  இடமான மிதுனத்திற்கு செல்கிறார்.  இங்கு  அவரால்    பொன் , பொருள்  கிடைக்கும்.  மகிழ்ச்சியும்  ஆனந்தமும்  அதிகரிக்கும்.  பெண்கள்  மிக உறுதுணையாக  இருப்பர்.

    கேது  தற்போது  6-ம்  இடமான  மகரத்தில்  இருக்கிறார்.  இதன் மூலம்  பொன்னும்,  பொருளும்  தாராளமாக  கிடைத்திருக்கும்.  காரிய  அனுகூலம்  ஏற்பட்டிருக்கும்.  13-2-2019 அன்று 5-ம்  இடமான   தனுசு  ராசிக்கு   வருகிறார்.  இது சிறப்பான  உடம்  இல்லை.  இந்த இடத்தில்  அவர் அரசு வகையில்  சிற்சில பிரச்சினையை  தரலாம்.  மேலும்  திருட்டு  பயமும்  ஏற்படலாம்.

இந்த   காலத்தில்  குருபகவான் 5 -ம்  இடத்தில்  இருக்கிறார்.  அவர்  சிறப்பான   பலனையே  தருவார்.

  குடும்பத்தில்  குதூகலத்தை  கொடுப்பார்.  திருமணம்  போன்ற சுப  நிகழ்ச்சிகளை  நடத்தி வைப்பார்.  பொருளாதார  வளத்தை  அதிகரிக்க செய்வார். பெண்களால்  மேன்மை கிடைக்கும்.  குழந்தை  பாக்கியம்  கிடைக்கும்.

  ராகு  பொருளாதாரத்தில்  நல்ல வளத்தை  தருவார். பெண்களால் அனுகூலம்  கிடைக்கும்.  குடும்பத்தில்  வசதிகள்   அதிகரிக்கும்.  ஆடம்பர  பொருட்களை  வாங்கலாம்.    கணவன்-மனைவி இடையே,  அன்பு  பெருகும்.  உறவினர்கள்  வகைகளில்   அன்னியோனியம்    நிலவும்.   தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.  குழந்தை பாக்கியம்  கிடைக்கும்.  சிலர் புதிய வாகனம்  வாங்கலாம்

கணவன்-மனைவி  இடையே அன்பு பெருகும்.  உறவினர்கள்  வகைகளில்   அன்னியோனியம்  நிலவும்.  தடைபட்டு வந்த திருமணம்  நடக்க  வாய்ப்பு உண்டு.  குழந்தை  பாக்கியம்  கிடைக்கும்.  சிலர் புதிய வாகனம்  வாங்கலாம்.   உத்தியோகம்  மேல்  அதிகாரிகளின்  அனுசரணை கிடைக்கும்.  பெண்கள்  வகையில் இருந்த இடர்பாடுகள்  மறையும்.   அதே பெண்கள்  உங்களுக்கு  உதவிகரமாக இருப்பர். சிலர் இடமாற்றம்   காணப்பீர்கள்

  அதுவும்  விரும்பிய  இடமாக  அமையும்.  உங்கள்   திறமை  பளிச்சிடும்.  சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.  சிலருக்கு முக்கிய  பொறுப்பு  கிடைக்கும்.  ஏதோ   காரணத்தால்  வேலையை  இழந்தவர்கள்  மீண்டும் வேலை  கிடைக்க பெறுவர்.  வேலையோடு  பக்கத்து தொழில் செய்பவர்கள் நல்ல  வளத்தோடு இருப்பர்.  அரசு  ஊழியர்கள்  வேலையில்  கவனமாக  இருக்கவும். 

வியாபாரம்   சிறப்படையும் அதிக  வருமானத்தைக்   காணலாம்.  கடந்த  காலம்   நஷ்டம்  இருக்காது.   கூடுதல் வருமானத்தை  நிரந்தர  வைப்பு தொகையில்  போட்டு வைக்கவும்.   இரும்பு அச்சு  தொடர்பான  தொழில்களும்  தரகு,  பழைய  பொருட்களை  வாங்கி  விற்பது  போன்ற  தொழில்களும்  சிறந்து  விளங்கும்.  வயதால்    மூத்த பெண்கள்  உங்களுக்கு  தக்க  சமயத்தில்  உதவுவார்கள். அதன்  மூலம்  வளர்ச்சி அடையலாம்.  பெண்களை  பங்குதாரர்களாக  கொண்ட நிறுவனம்  நல்ல  முன்னேற்றம்  அடையும்  உன்னத  பலனை  எதிர்பார்க்கலாம்.  

தோழிகளிடையே  ஒற்றுமை ஏற்படும்.  ஆனால்  அரசிடம்  எதிர்பார்த்த சலுகைகள்   கிடைப்பது  அரிது..  அதோடு சிலர் அரசின்  மூலம்பிரச்சினைகளை  சந்திக்க  நேரிடலாம்.  எனவே,  உங்கள்  வரவு- செலவு  கணங்குகளை  சரியாக  வைத்துக்  கொள்ளவும்.

மாணவர்கள்  சிறப்பைக்  காணலாம்.  கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.  வெளிநாடு  சென்று படிக்க வாய்ப்பும் பெறலாம்.  குருவின்  வக்கிர    காலத்தில்  சிரத்தை எடுத்து  படிக்க  வேண்டியதிருக்கும்.  விவசாயிகள்  நல்ல  வளத்தை  காணலாம்.  பூமியில்  விளையும்  அனைத்து  பொருள்களும்  நல்ல   மகசூல்  கிடைக்கும்.  எள்,  பனை  பொருள் மற்றும்  மானாவாரி  பயிர்களில்  சிறப்பான மகசூல் கிடைக்கும்.  கால்நடை மூலம்  பணப்பழக்கம் இருக்கும் புதிய சொத்து வாங்கலாம். .  புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான  மகசூலை  பெறுவார்.  நவீன  இயந்திரங்கள்  வாங்க வாய்ப்பு உண்டு.  பக்கத்து நிலகாரர்கள்.  வகையில்  இருந்து வந்த தொல்லைகள்  மறையும்.  வழக்கு விவகாரங்கள்  சாதகமாக  இருக்கும்.

பெண்கள்  கணவரின்  அன்பு  கிடைக்கும்.  குடும்பத்தோடு  சுபநிகச்சிகளின்  கலந்து கொள்வீர்கள்.  வசதியுடன்   காணப்படுவர்.  கணவர் மற்றும்  குடும்பத்தாரிடம்  நன்மதிப்பு  பெறலாம்.  திருமணம் கைகூடும் பிள்ளைகளால்  பெருமை காணலாம்.  புத்தாடை  அணிகலன்கள்  வாங்கலாம், பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம்.   வேலைக்கு  செல்லும்  பெண்கள் சிறப்பான பலனை  பெறுவர். புதிய பதவி தேடி  வரும்.  சுய தொழில்  செய்து  வரும். பெண்களுக்கு  வங்கி கடன்  எளிதாக  கிடைக்கும்.  குருவின்  வக்கிர  காலத்தில்  சிற்சில   விஷயங்களில்  பொறுமையாகவும், விட்டுக்கொடுத்து போகவும் மன உளைச்சலையும்  உறவினர்  வகையில்   வீண் பகையையும் உருவாக்குவார்.   மேல்  அதிகாரிகளிடம் அனுசரித்தும்  போகவும் கோரிக்கைகளை  நிறைவேறுவதில்  தாமதம்  ஆகலாம்.  உங்கள்  பணியை  வேறு யாரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

பரிகாரம்:   விநாயகர்  வழிபாடு  முன்னேற்றத்தை தரும்.  துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.     ஆதரவற்ற  மூதாட்டிகளுக்கும்  சன்னியாசிகளுக்கும்  உதவி செய்யுங்கள்.  குருவின் வக்கிர காலத்தில்  தட்சிணா மூர்த்தியை வணங்கினால்  உறவினர்கள்  வகையில்  ஒற்றுமை  ஏற்படும்.

 

வாழ்க  வளமுடன் .

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter