Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

துலா ராசி நேயர்களுக்கு ( 2014 To 2017)

 

முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் உங்களிடம் மும்முரமாகவே இருக்கிறது. ஆனால், முட்டுகட்டைகளைப் போடுவதல்லாவா சனிபகவானுடைய சுபாவமாகத்  இருக்கிறது. சாதிக்க வேண்டும் என்கிற விருப்பம் ஏராளமாகவே இருக்கிறது. ஆனால் சங்கடங்களையே கொடுப்பதல்லவா சனிபகவானுடைய நீண்ட கால நடவடிக்கையாக இருகிறது.  ஆனானப்பட்டவர்களையும் அரசாளும் சக்கரவர்த்தியைப் போன்றவர்களையும் கூட ஆட்டிவைத்துவிடுகிற ஏழரை நாட்டுச் சனியின் வலுவான முரட்டுப் பிடியில், கடந்த 5வருடங்களாகவே மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள். முதலில் 2 ½ வருடங்கள் விரயச் சனியைத் தாண்டி, அதன்பின் ஜென்மச் சனியின் 2 ½ வருட காலத்தைக் கடந்து முடிக்க இருக்கிற இப்போதைய காலக்கட்டம் வரையில், அனுபவத்திருக்கிற அவதிப்பாடுகள் ஒன்றா? இரண்டா?

சனிபகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி 16-12-2014 ( ஐய வருடம், மார்கழி மாதம். 1ஆம் நாள்) செவ்வாய்க்கிழமை, பிற்பகலில் சனிப் பெயர்ச்சியாகும்.

இதனால் 7 ½ சனியின் காலம் முடிவடைந்து விடுமா? இல்லை. உங்கள் துலாராசிக்குப் 12ம் இடத்தில் சனி சஞ்சரித்து வரும் காலம்தாம் ஜென்மச்சனி. இனிமேல் 2ம் இடத்தில் சனி சஞ்சரிக்கப்போகிற காலம் பாதச்சனி என்கிற குடும்பச்சனி இந்த 3 காலகட்டங்களும் சேர்ந்து தான் 7 ½ சனி. இன்னும் 7 ½ சனி முடிய வில்லையா என்று கவலைபடதேவையில்லை.

7 ½ சனியில் விரயச்சனியும், ஜென்மசனியிலும் விழுந்தவன் பாதச்சனியில்தான் எழுவான். என்று ஆதிகால முனிவர்களே நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். இதுவரை 2 ½ வருடங்களாக உங்கள் ஜென்ம ராசியிலே சஞ்சரித்துவரும் சனியும் அவருடைய கெட்ட பார்வைகளும் விலகுவதால் கெடுதலான பலன்களும் நீங்கிப் போய்விடுகின்றன. மண்டைக்குள்ளே ஜென்மச் சனியால் குடிகொண்டிருந்த மறதியும் மந்தத்தனமும் சந்தேகமும் சஞ்சலமும் சோம்பலும் அலுப்பும் அவநம்பிக்கையும் வெளியேறிவிடும். இதுவரையில் களத்திர ஸ்தானமாகிய 7ஆம் இடத்தில் பதிந்துவந்த இடைஞ்சலான சனிபார்வையும் அங்கிருந்து நகர்ந்து போய்விடுகிறது. இதனால் தகுந்த வயதுக்கு வந்தும் இதுவரையில் கல்யாணம் ஆகாமலிருந்தால் இனிமேல் இழுபறியாகாமல் திருமண வைபவம் அருமையாகக் கைகூடும்.

சனி கெட்ட பலந்தரக்கூடிய இடங்களில் இரண்டாமிடத்தையும் சேர்த்துத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. தன- குடும்ப- வாக்கு ஸ்தானமாகிய இரண்டாமிடத்தில் வந்து சஞ்சரிக்கும் பாதச் சனிக்கு குடும்பச் சனி என்றும் பெயர் உண்டு. பணவரவுகளில் தடைதாமதம், பற்றாக்குறை பிரச்சனைகள், கொடுக்கல் வாங்களில் குளறுபடிகள், கடுமையான பேச்சு வார்த்தைகள், வீணான வாக்குவாதங்கள், குடும்பத்துக்குள்ளே குறைபாடுகள், கோபதாபங்கள் என்றெல்லாம் கொடுப்பதுதான், குடும்ப தன வாக்கு ஸ்தாத்துச் சனியின் குணமாகும்.

மேலும், 2ம் இடத்திற்கு வந்ததும் சனியின் பாதிப்பான பார்வையில் ஒரு பார்வை சுக சௌகரிய, மாத்ரு, பந்து, சொத்துபத்து ஸ்தானத்தின் மீது பதிகிறது. இதனால் உங்களுக்குச் சரிவர சுகசௌகரியங்களைக் கவனித்துச் செய்துகொள்ள அடிக்கடி முடியாமல் போகலாம். நேரா நேரத்துக்குக் காலம் தவறாமல் ருசி பசி மாறாமல் சாப்பிடுவதற்குக் கூட அவ்வப்போது முடியாமல் தாமதமாகலாம். அடிப்படையான சில வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வதிலும் முட்டுக்கட்டைகள் குறுக்கிடலாம்.

தாயாருக்கும் உடல்நலம் பாதிக்கப்படலாம் அல்லது அவர்களுடன் அபிப்பிராயபேதம் உண்டாகலாம். படிப்பு, வேலை வாய்ப்பு, தொழில், பயணம் என்றாவது அம்மாவைப் பிரிந்திருக்கும் படியாகலாம். அல்லது அவர்களுடைய தேவைகளைச் சரிவர நிறை வேற்றிவைக்க முடியாத மனக்குறை உறுத்தலாம். நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் சுலபமாகவரும். அடித்து மடக்கிப் பேசி வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருக்காமல், பெருதன்மையாக விட்டுக் கொடுத்துப் பழகினால்தான் இதம்- இங்கிதம்- சிநேகம்- சந்தோஷம்.  பால் போன்ற நிறம் கொண்ட சந்திரனுக்கு ஜனன காலத்தில் சந்திரன் நின்ற ராசியாகிய ஜென்ம ராசிக்கு இரண்டாமிடத்திலே சூரியனுடைய மகனான சனி வந்து சஞ்சரித்தால், சீரும்சிறப்புமேற்படும். மேன்மைகள் உண்டாகும். சுப சௌகரிங்கள் அமையும். விரும்புவது கைகூடும். பெண்களால் பொருள்கள் சேரும். செல்வம் பெருகும்.

மொத்ததில் 75 % நன்றாக இருக்கும் .

 

பரிகாரம்

வெள்ளிகிழமைகளில் லக்ஷ்மி நரசிம்மரை தரிசனம் செய்து வந்தால் நன்மை பயக்கும். கோபாதாவுக்கு பச்சரிசி மாவு மாற்று வெல்லம் கலந்து கொடுக்கவும். வெள்ளிக்கிழமைகளில்  பூஜை செய்து லலிதா அஷ்டோத்திரம்  சொல்லிவரவும்.

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter