Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

8ஆம் இட கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் அதற்கான பரிகாரமும்

Published On: 4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

       ஜன்ன ஜாதகத்தில் சிலருக்கு கிரகங்கள்  லக்னத்துக்கு 8ல் அமர்ந்துவிடும்.   ‘ஓடிப்போனவருக்கு 9ஆம் இடத்தில்  வியாழன் அகப்பட்டுக் கொண்டவருக்கு அட்டமத்தில் (8-ல்) சனி’  என்று  சொல்வார்கள். இது அனுபவத்தில் வந்த  கருத்துதான் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். லக்னத்துக்கு 8ல் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் சுக்கிரன், சனி, ராகு-கேது இவற்றில் எது அமர்ந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தப் பார்க்கும். அந்த தசை வரும்போது 8ல் சூரியன்  வந்தால் தந்தைக்கு சிரமம். சந்திரன்  வந்தால் சளித்தொல்லை வரும். செவ்வாய்  வந்தால் ரத்தக் கொதிப்பு ஏற்படும்.  புதன் வந்தால் தண்ணீரில் கண்டம் வரும். குரு  வந்தால் தொழில் கெடும். சுக்கிரன் வந்தால் கோழை மனது வரும்; தற்கொலைக்குத் தூண்டும். சனி வந்தால் பல தொழில்களைச் செய்ய முற்பட்டு கையிலிருக்கும் காசும் போய் சஞ்சல வாழ்க்கையை ஏற்படுத்தும். ராகு வந்தால் கருப்பாக உள்ளவர்களால் பொருள் இழப்பு வரும். கேது வந்தால் வியாபார நஷ்டம், மாங்கல்ய ஸ்தானத்தில் நெருக்கடியைக் கொடுக்கும்.

 பொதுவாக  ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 8ஆம் இடம் சுத்தமாக இருக்க  வேண்டும். 8ல் கிரகம் அமர்ந்தால் அந்த தசைகளில் மரணத்துக்கு ஒப்பான கண்டங்களை நஷ்டங்களை ஏற்படுத்தும், எனவே அதற்கான பரிகாரங்களைச் செய்து கொண்டால் அட்டமாதிபதியாக உள்ள  கிரகத்தால் தாக்கம் வராது.

                   பரிகாரம்-1                      

   நவகிரகங்களுமே அட்டமத்தில் வராது; ஒருசில கிரகங்களே வரும் 8ல் கிரகம் அமையப் பெற்றவர்கள் பயம் கொள்ளாமல், நவகிரக துதியை தினசரி காலையில் ஒரே நேரத்தில் 16 முறை  சொல்லி வர, கிரகங்களால் தீமை எதுவும் வராது. 8-ல் உள்ள கிரக தசையால் பாதிப்பு வராது.

 ஓம்  ஹ்ரீம் ஆதித்யாயா சோமாய

 மங்களாய புதாயச குரு சுக்கிர சனிப்யச்ச

 ராகவே கேதவே நமக’

என்று சொல்லி வணங்கிட 8ல் உள்ள கிரகத் தாக்கம் மாறும்.

                

                பரிகாரம்-2

   ஜாதகத்தில் 8-ல் உள்ள கிரக தசை வரும்போது அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்று, நவகிரகத்தில் உள்ள தசைக்குரிய கிரகத்திற்கு, தசை முடியும் வரை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறையாவது   நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால், 8ஆம் இடத்து தாக்கம்  குறையும்; நன்மை கிடைக்கும்.

             பரிகாரம்:-3

  மேற்கண்ட  இரண்டு பரிகாரங்களையும் செய்ய  முடியாதவர்கள் 8ஆம் இடத்தில் அமர்ந்துள்ள கிரகத்திற்குரிய தானியத்தை சிறிது எடுத்து துணியில் முடிந்து வணங்கி, தசை முடியும் வரை அதனை உங்களது பையில் வைத்துக் கொண்டால், 8ஆம் இடத்து கிரகத் தாக்கம் மாறும்; ஆயுளை பாதிக்காது.     

        

 

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter