Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

அரச மரம் மற்றும் துளசியை ஏன் வணங்குகிறோம் ?

Published On: 12/27/2018  |  ஆன்மிக அர்த்தங்கள்

  

கரியமில  வாயுப்   பிரச்சினைக்குத்  தீர்வு?

                        மரம்  வளர்த்தால்    பருவமழை  வரும்.  ஆனால்,  மரம்  வளர்ப்பின்  மூலம் இன்று   காற்றில்  உள்ள  கரியமில  கரியமில  வாயுவின்  அதிக  அளவான  400 PPM   என்ற  உயரிய அளவில்  இருந்து  ஆரோக்கியமாக இருக்க வேண்டிய  350  PPM    என்ற சம நிலைக்கு  கொண்டு வர முடியாது.

ஏனென்றால் , மரம்  பகல்  பொழுதில் காலை  6 மணிக்கு  சூரியன்  உதயமானது முதல்  மாலை 6  மணிக்கு  சூரியன்  மறையும்  வரை  காற்றில்   உள்ள   கரியமில  வாயுவை எடுத்துக்  கொண்டு  ஆக்ஸிஜனை  வெளியிடுகிறது.   ஆனால்  அதே மரம் ம  மாலை   6 மணி முதல்  மறுநாள்  காலை   6 மணி வரை இரவிப்  பொழுதில் காற்றில்  உள்ள  ஆகஸி ஜனை  எடுத்துக்  கொண்டு  கரியமில  வாயுவை வெளியிடுகிறது.

ஆகையால்   இந்தபூமியில்   தற்பொழுது உள்ள  400  PPM   என்ற  உயரிய  கரியமில  வாயுவின்  நிலையில்  இருந்து 350  PPM க்கும்  குறைந்த  விகிதம்  என்ற  சமநிலைக்கு  கரியமில  வாயு  (CO)  வைக்க கொண்டு வர சாதராண  மரங்கள்  மற்றும்  செடிகளால்  இயலாது.

அப்படியானால்,  தினம் நமது மூச்சுக்   காற்றினால் அதிகரித்து வரும்  கரியமில  வாயுவைக்   குறைக்க  வழிதான் என்ன?  இந்த  பூமியில்  செயற்கையாக  ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியாது. இந்த  பூமியில் மரம், செடி, கொடிகள், மட்டும் தான் இயற்கையாக மனித குளம் தழைக்க  ஆக்சிஜனை  உற்பத்தி செய்ய முடியும் என்ற உண்மையை  மனிதன் ஒரு பொழுதும்   மறந்து விடக்கூடாது.

    ஒரு நாளில் 24 மணி நேரம் ஆக்ஸிஜனைக்   கொடுக்கும்  அதிசய  தாவரங்கள்.

     

  இந்த உலகில் 24 மணி   நேரமும் காற்று மண்டலத்தில்  உள்ள  கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை  மட்டுமே தரக்கூடிய மூன்று   அதிசயத்  தாவரங்கள்  இருக்கின்றன.  அவைகள் 

  1.  அரசமரம்   2.  மூங்கில்   3.  துளசி

    அர்த்தமுள்ள  அரசமரம் :    மரங்களின்  அரசன் என்று    நம் முன்னோர்களால்  கருதப்பட்ட  அரசமரம்  தமிழர்களின்  வாழ்வில்  பின்னிப் பிணைந்த மரமாகும்.

    தமிழகத்தில்  உள்ள  16,000 கிராமங்களில் ஒன்றும் குறைந்த பட்சம்  ஒரு அரச மரத்தையாவது நம்மால்  காண முடியும்.    நம்  முன்னோர்கள் அரச  மரத்தைச் சுற்றி வருவதை  ஒரு வெளிப்பாடாகவே மாற்றினார்கள்.  ஏன் ?

அரச மர வழிபாட்டின் மூலம்  தமிழக மக்கள் ஒரு நாளில், 24 மணி  நேரமும் நல்ல  ஆக்ஸிஜன்    உள்ள  காற்றைச் சுவாசித்து  ஆரோக்கியம்  காத்து  120ஆண்டுகள்  வரை  முழுமையாக வளமாக  வாழ வேண்டும் என்ற  உயரிய நேரத்தில்  நம்  முன்னோர்கள்  சிந்தித்தனர்.

   ஒரு அரசமரம்   ஒரு கிராமத்திற்கே ஆகிஸிஜன்   வளத்தைத் அள்ளிக்  கொடுக்கும்.   தொழிற்சாலையாக அமைந்துள்ளது.

தலைமுறைக்கு    ஆரோக்கியத்தை  தரும்  அரசமரம்.

      1.  அரச மரம்-  உலகில்  உள்ள   மரங்களின்  அரசன்.

       2.   ஒரு  நாளில்  24 மணி  நேரம் ஆக்ஸிஜனை   தரும்.  அற்புதமான  மரம்.

        3.   அரச மரம் - ஊருக்கே உடல் நலம் தர உருவாக்கப்பட்ட  ஆக்ஸிஜன்     தொழிற்சாலை .

அர்த்தமுள்ள  மூங்கில்:

                      அரச மரத்தைப்  போல மூங்கிலும்  ஒரு  அற்புதமான    தாவரம்.  மூங்கில் மரமும் ஒரு  நாளில்  24  மணி நேரமும் காற்றிலுள்ள   கரியமில  வாயுவை எடுத்துக்  கொண்டு,  ஆக்ஸிஜனை   வெளியிடும்   தன்மை கொண்டது.

தமிழகத்தில்  உள்ள  16,000  கிராமங்களிலும் கடந்த  நூற்ராண்டில்  பச்சை  மூங்கில்  பச்சைப் பசேல்  என்று நெடிது இருந்தது.  தொழிலனின்  பல்வேறு  தேவைகளை  மூங்கில்  மரம்  பூர்த்தி  செய்தது.    தமிழக  கிராமங்களின்  ஆக்சிஜன்  பாரலாறாகத்  திகழ்ந்தது.   நம்  முன்னோர்களின்  ஆரோக்கிய  வாழ்க்கைக்கு  அது  உறுதுணையாக  இருந்தது.

அர்த்தமுள்ள  துளசி :

       தமிழகத்தில்  பல  வீதிகளில்  துளசியை   மாதங்களில்    வைத்து  நம்  முன்னோர்கள்  தினம்  வழிபட்டு  வந்து உள்ளனர்.  என்?

   துளசி  24  மணி  நேரமும்  காற்றில்  உள்ள  கரியமில  வாயுவை  எடுத்துக்  கொண்டு  ஆக்ஸிஜன்  மற்றும்  ஓஸோனைத் தரும்  உயரிய  தாவரம்  ஆகும்.

மூலிகைத்  தண்ணீர் :

       ஆயிரம்  ஆண்டுகளாக   பெருமாள்  கோயில்களில்  துளசித்  தீர்த்தத்தை  கோவிலுக்கு வரும்  பக்தர்களுக்கு  வெள்ளிக்கு  கிண்ணத்தில்  வைத்துக்   கொடுப்பதை  வழிபாட்டு  முறையாக நம்  முன்னோர்கள்,  அமைத்தனர்.  ஏன்?   துளசி,  பச்சை  கற்பூரம்   மற்றும்  ஏலக்காய்  கலந்த   தண்ணீர்  உடல், ஆரோக்கியத்திற்கு  நல்லது என்று  மூலிகை  தண்ணீரை   கொடுத்தனர்.

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter