Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

You're currently on:

செய்வினை தோசம் விலக – சோளிங்கபுரம்.

Published On: 4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

ஒருவரது கஷ்ட சூழ்நிலைகள் மாறி வளமான வாழ்வு அமைவதென்பதே அவரது ஜாதகத்தில் உள்ள குறிப்பிட்ட தசாபுக்திகளின் போது நடக்கும். நல்ல மனைவி, நல்ல பிள்ளைகளோட மகிழ்ச்சியாக ஒருவர் வாழும்போது அவரைச் சார்ந்த சில உறவுகள், சிநேகித வட்டாரங்கள் பொறாமை அடைவார்கள். நன்றாக வாழ்ந்து வரும் அவருக்கு ஏதேனும் ஒரு வகையில் கெடுதல் செய்ய வேண்டும். தொழிலை முடக்க வேண்டும். குடும்பத்தைச் சீர்குலைக்க வேண்டும். என்று சில தவறான அணுகுமுறைகளை மேற்கொள்வார்கள். மாந்திரீகவாதிகளைப் பார்த்து கெடு பலனைத் தரும் வசிய மருந்துகள் மற்றும் தகருட்களைப் பெற்று நிம்மதியாக வாழ்பவர் வீட்டில், தொழில் கூட்த்தில் வியாபார இடத்தில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வைப்பார்கள். இந்த நேரத்தில் நல்ல நிலையில் வாழ்பவரின் ஜாதகப்படி நடக்கும் தசா புக்தி, அந்தரத்தில் பகை கிரகத்தின் காலம் நடந்து கொண்டிருக்கும். நிம்மதியாக வாழ்ந்த அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமலும் பிள்ளைகள் கல்வி மந்தமாகவும். வியாபாரத்தில் நஷ்டமும் ஏற்பட்டு விடும். இவற்றைப் பார்க்கும் அந்த ஜாதகர் மனம் ஒடிந்து  அவரும் மாந்திரீகம் என்ற பெயரில் பணம் சம்பாதிப்பவர்களை நாடிச் சென்று பரிகாரம் தேட முற்படுவர். செய்வினை மந்தம், கடன் தொல்லை போன்ற தொல்லைகளை அனுபவிப்பவர்கள் மாந்திரீகர்களை நாட வேண்டாம். கீழ்க் கண்ட எளிய பரிகாரங்களைச் செய்தால் நல்ல வாழ்க்கை  வாழலாம். திடீரென வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைக்குக் காரணம் அண்டை அயலார் வைத்த செய்வினைதான் என்று நினைக்க வேண்டாம். குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம். எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பெளர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால், ஒருவர் செய்த  செய்வினை உங்களைப் பாதிக்காமல் நல்ல பலனை அடையலாம்.

« Back
About Us

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter