Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

குடும்பத்தோடு கோவிலுக்குச் செல்வோர் பின்பற்ற வேண்டிய வழிகள், பரிகாரங்கள்

Published On: 4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

ஒரு சிலருக்கு குலதெய்வம்  தொலை தூரத்தில் இருக்கலாம். மேலும் திருப்பதி,  திருச்செந்தூர் காசி, இராமேஸ்வரம் பழனி, திருத்தணி, போன்ற தலங்களில் உள்ள தெய்வங்களுக்கு நம்  காரிய வெற்றிக்கும் பிள்ளைகள் உயர்வுக்கும், நமது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளவும் நேர்ந்து கொள்கிறோம். நமது வேண்டுதல் வெற்றி பெற்ற ஆனந்தத்தில் நேர்த்திக் கடன் செலுத்துச் செல்லும்போது சில வழிமுறைகளைச் கடைப்பிடிக்க மறந்து விடுகிறோம். நேர்த்திக் கடன் செலுத்தச் செல்லும்  போது நமது உடன் வருபவர்கள்  உறவுகளாக இருந்தாலும் அண்டை அயலாராக இருந்தாலும் நேர்த்திக் கடன் செலுத்தச் செல்லும் முன்புள்ள ஒரு வாரமும் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும், குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் குடும்ப சுத்தம் இருக்க வேண்டும். மதுப் பழக்கம் உள்ளவர்கள் குறைந்தது ஒரு வாரத்துக்கு மதுப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். பயணத்துக்கு முந்தைய  ஒரு வாரத்தில் ஏற்படும் துக்க வீடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்க  வேண்டும். நேர்த்திக் கடன் செலுத்தச் செல்லும்போது தொலைதூரம் செல்கிறோமே என்று வாகனத்தில்  பொழுதுபோக்குப் படங்கள், திரைப்ப்டப் பாடல்களைப் போடக்கூடாது. பக்திப் படம், பாடல்களைக் கடைப்பிட்டித்து பயணிப்போரின் வாகனம் விபத்துக்குள்ளாவதில்லை. கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காதவர்கள் உடன் பயணிக்கும்போது  விபத்துகளைச் சந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விடுகிறது.

      இந்த வகையான கட்டுப்பாடுகளை  நேர்த்திக் கடன் செலுத்தச் செல்லும் குடும்பத்தார் கடைப்பிடித்தத்தை மட்டும் நம்மால் அறிய முடியும். மற்றவர்கள் கடைப்பிடித்தார்களா என்பதை அறிய முடியாது. எனவே கீழ்க்கண்ட பரிகாரத்தையும் வீட்டில் செய்து கொண்டு பயணித்தால், ஆலய தரிசனம் தடை இன்றி சிறப்பாகக் கிடைக்கும். விபத்தும் ஏற்படாது.

                        பரிகாரம்-1

    எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், ஒருவரது வீட்டில் யாரையும் கேட்காமல் நுழைந்து விடமுடியாது. வீட்டில் உள்ளவர்கள் அனுமதி பெற்ற பின்னரே கடமையைச் செய்ய முடியும். அதுபோலதான் நமது குலதெய்வத்தின் அனுமதி பெறாமல் எந்த ஒரு பெரிய  தெய்வமும் நமக்கு அருள்பாலிக்காது.

   எனவே கோவிலுக்குப் புறப்பட்டுச் செல்ல உள்ளவர் முதலில் வீட்டில் குலதெய்வத்துக்கு காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். குலதெய்வம் நம்மை விபத்து இல்லாமல் அழைத்துச் சென்று வரும். ஆலய தரிசனம் முடிந்து வந்த  பின்பு எப்போதாவது குலதெய்வக் கோவிலுக்குச் செல்லும் போது, எடுத்த வைத்த காணிக்கையைத் தவறாமல் செலுத்தி விட வேண்டும்.

                     பரிகாரம்-2

    நாம் பயணிக்க உள்ள வாகனம் வீட்டு வாசலுக்கு வந்த பின்பு, பயணிக்கும் முன்பு வாகனத்தின் நான்கு சக்கரங்களிலும் எலுமிச்சைப் பழம் வைத்து நசுக்கிச் செல்லவேண்டும். அதற்கு முன்பாக கூடம் ஏற்றிய தேங்காயை வாகனத்தைச் சுற்றி ரோட்டில் சிதறுகாய் அடிக்க வேண்டும். போகும் வழியில் உள்ள விநாயகருக்கு ஒரு சிதறுகாய் அடிக்க வேண்டும். இதனால் பயணத்தில் விபத்தோ தடையோ வராது.    

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter