Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

கணவரின் தீய குணம் மாற பரிகாரம்

Published On: 4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

மணமகனைத் தேர்வு  செய்யும் போது, தனது மகளின் உயரம், நிறம், பொருளாதாரம் ஆகியவற்றுக்குத் தகுதியானவராக இருக்கிறாரா என்று மட்டுமே பெரும்பாலான பெற்றோர்கள் பார்க்கிறார்கள்.

  இப்படி எல்லா தகுதிகளையும் ஆராய வேண்டும். ஜாதகம் பார்க்கும் பெற்றோர் முக்கிய பொருத்தமான தினம், கணம், யோனி ரஜ்ஜூ ராசி,ஆகியவற்றைப் பார்ப்பதோடு அந்த  ஜாதகரின் 12ஆம் இட்த்துப் பலன்களையும் ஆராய வேண்டும்.

  ஒரு ஜாதகரின் லக்னத்துக்கு 12ஆம் வீடு விரய ஸ்தானம். அவர் தன் ஈட்டும் பொருளாதாரத்தை எப்படி செலவு செய்வார் என்பதைக் கண்டறியக் கூடிய இடம். 12ஆம் வீட்டுக்குரிய கிரகம் லக்னத்துக்கு 6ல் வரக்கூடாது. 7லும்  வரக்கூடாது 6ல் வந்தால் அனாவசிய செலவுகளைச் செய்பவர். நோயோடு வாழ்பவர் 7ல் வந்தால் பெண்கள் வழியில் அதிக செலவுகளைச் செய்பவர். காம வேட்கையில் பொருளாதாரத்தை இழப்பவர் 12ஆம் வீட்டுக்குரிய கிரகம் 11ல் வந்தால்  உத்தம்ம். வருமானம் எப்போதும் இருக்கும். அதனை பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் தெய்வ தரிசனத்திற்கும் நல்ல வழியில்  செலவு செய்வார். ஆனால் அவருக்கு மூத்தவர்களால் விரயம் ஏற்படும். குறிப்பாக 12ஆம் வீட்டு கிரகம் 6,7ல் வந்தால் ஒதுக்க வேண்டும். இவ்வாறு பார்த்துச் செய்தால் உங்கள் மகள் சீரும் சிறப்போடும் காலமெல்லாம் வாழ்வார். இதுபோன்ற ஜாதகர்களை  மணம் முடித்தவர்கள் கீழ்க்கண்ட  எளிய பரிகாரத்தைச் செய்தால் வாழ்வை வளமாக்கலாம்.

                   பரிகாரம்-

     ஒழுக்கக்கேட்டிற்குக் காரணமான கிரகம் எதுவாக இருந்தாலும் லெளகீகத்துக்கு உரிய கிரகம் சுக்கிர பகவான்தான்  எனவே  கணவரிடமுள்ள தீய பழக்கம் மாற, வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் அல்லது கிருஷ்ணர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால், படிப்படியாக கணவரின்  தீய பழக்கங்கள் மாறும். மேலும் வாரம் ஒருமுறையேனும் உணவுடன்  மொச்சைப்பயறு சேர்த்து கணவருக்குக் கொடுத்து வந்தால் ஜாதகரின் தீய பழக்கம் மாறும்.

                    பரிகாரம்-2

    மேற்கண்ட  பரிகாரத்தைச் செய்ய முடியாதவர்கள் 27  மொச்சைப் பயறு எடுத்து வெள்ளைத் துணியில் முடிந்து, சாமி படத்துக்குக் கீழ் வைத்து, தினசரி காலையில் அந்த முடிச்சை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, ‘எனது கணவரின் தீய  பழக்கம் மாற வேண்டும்’ என்று வேண்டி வந்தால் வேண்டுதல் பலிதமாகும். ஆயுள் உள்ளவரை   இவ்வாறு   வேண்டுதல் செய்வது நல்லது.

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter