Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

கேட்டவுடன் கடன் கிடைக்க பரிகாரம்

Published On: 4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

     கடன் கிடைக்கவும் பரிகாரம்  தேவைதான் என்று வாசகர்கள்  நினைக்கக்  கூடும். ஒருசிலர் எவ்வளவுதான் திறமையாக வாழ்ந்தாலும் வாழ்க்கையில் ஒருவரிடம் கைமாற்றாக பத்து  ரூபாய்கூட பெற முடியாது. ஆனால் ஒருசிலர் எந்தத்  தகுதியும்  இல்லாவிட்டாலும் கேட்டவுடனேயே கடன் வாங்கி விடுவார்கள். எல்லாரது வாழ்க்கையிலும், அவரவர் நிலைக்கு ஏற்ப கடன் வாங்க கொடுக்க வேண்டிய நிலை வரும். ஒருசிலருக்கு கல்விக் கடன் வாங்க  கொடுக்க வேண்டிய நிலை வரும். ஒருசிலருக்கு  கல்விக் கடன் கேட்டவுடன் கிடைத்துவிடும். ஒருசிலருக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் கிடைக்காது. உல்லாசக் களியாட்டம் ஆட கடன்படுவது குற்றம். நல்வாழ்க்கை  அமைக்க கடன் பெற்று முதலைப் பெருக்கி பொருளாதார உயர்வு பெறுவதில் தவறில்லை.

  வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக கடன் பெறுபவர்களின் ஜாதக அமைப்பை லக்னத்துக்கு ஆறாம் அதிபதியையும் சூரியனையும் கொண்டு அறியலாம். ஒருவரது ஜாதகத்தில்; லக்னத்துக்கு ஆறாம் வீட்டு கிரகத்தை சூரியன் பார்ப்பாரேயானால் அவருக்கு அரசாங்கத்திடம் இருந்தும் வங்கிகளிலும் பெரும் செல்வந்தர்களிடமும் கேட்ட உடனேயே   கடன் கிடைத்துவிடும். அவர் எந்தக் காரணத்திற்காகக்   கடன்  பெற்றாரோ அதில் வெற்றியும் கண்டு, கடனையும், அடைத்து விடுவார். அவ்வாறு ஜாதகம் அமையப் பெற்றவர்கள் வங்கியிலும் அரசாங்கத்திலும் செல்வந்தரிடமும் கடன் பெற சில பரிகாரத்தையும்   மேற்கொண்டு பயனும் அடையலாம்.

                         பரிகாரம்

    வியாபாரம் செய்பவராக இருந்தாலும், விவசாயம் செய்பவராக இருந்தாலும் தொழிற்சாலை நடத்துபவராக   இருந்தாலும் உயர்கல்வி பயில்வதாக இருந்தாலும் கடன் வாங்கித்தான் முன்னேற வேண்டும். ரூபாய்க்கு அதிபதி  (வங்கிக்கு அதிபதி) புதன் பகவான் புதனை வணங்கிக் கடனைப் பெற வேண்டும். ஐந்து கிராம் வேந்தயத்தை எடுத்து ஒரு அரக்கு  நிறத் துணியில் முடிய வேண்டும். முடிச்சை ஒரு பாலிதீன் பையில  போட்டுப் பக்குவப்படுத்த வேண்டுன். அந்த பாலிதீன முடிச்சை (கடன்பெற புறப்படும்முன் வீட்டிலேயே உள்ளங்கையில் வைத்துக் கொண்டு , புதன், பகவானே! நியாயமான தேவைக்கு கடன் கிடைக்கச்  செய்ய வேண்டும்  என்று ஒன்பது முறை சொல்ல வேண்டும்.

 பின்பு அந்த முடிச்சை உங்கள் கைப்பையில் அல்லது சட்டைப்  பையில் வைத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரி வங்கி அதிகாரி செல்வந்தர்களைச் சந்தியுங்கள், கடன் கிடைப்பதற்கான அறிகுறிகள் வந்துவிடும். 30 நாட்களுக்குள் கடன் கிடைத்துவிடும்.

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter