Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

கொடூர குணம் படைத்த கணவன் அமையாமல் இருக்க.....

Published On: 4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

எல்லாருக்கும் கொடூர குணம் படைத்த  கணவன் அமைந்து விடுவதில்லை. இன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்த சில நாட்களிலேயே கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு வந்துவிடுகிறது. இதற்கு ஜாதகத்தை சரியாக ஆய்வு செய்யாததே காரணம். பெண்கள் ஜாதகத்தில்சில கிரகங்கள்  காரணமாக, மோசமான கணவர் அமைந்துவிடுவார் என்பதை அறியலாம். ஒரு பெண்ணின் ஜனன ஜாதகமாக இருந்தாலும்  ருது ஜாதகமாக இருந்தாலும் கவனத்துடன்  நல்ல ஜோதிடரிடம் காட்டி ஆராய வேண்டும். அல்லது கீழ்கண்ட விவரங்களை நீங்களே உங்கள் பெண்ணின் ஜாதகத்தில் ஆய்வு செய்து, மோசமான கணவர் வரும் தோஷம் வராமல்  பார்த்து மணமகனைத் தேர்வு செய்யலாம்.

 பெண்ணின் ஜாதகத்தில்  சூரியனை சனி பகவான் பார்த்தாலும், சூரியனும் சனியும் இணைந்தாலும் சனி பகவான் சூரியனைப் பார்த்தாலும், அந்த பெண்ணுக்கு அனைத்து கெட்ட பழக்கங்களும் கொண்ட கணவன் அமையும் சூழ்நிலை உள்ளது என்பதை அறியலாம். மேலும் மனைவியை போதைப்  பொருளாக மட்டுமே கருதி, மனைவியை அடிமைபோல் நடத்துவார். எனவே உங்கள் பெண் பிள்ளைகளுக்கு மேற்சொன்னவாறு ஜாதகம் அமைந்திருந்தால், அப்படிப்பட்ட கணவன் வராமல் இருக்க கீழ்க்கண்ட பரிகாரங்களைத் திருமணத்திற்கு முன்பு செய்து கொண்டால், மோசமான கணவரிடம் மாட்டிக் கொள்ளும் தோஷத்திலிருந்து மீளலாம்.

                        பரிகாரம்:

   சூரியன், சனி இணைவு பார்வை உள்ள ஜாதகிகள் எப்போதும் வாழ்க்கையில் விழிப்புடனையே இருக்க வேண்டும். சேமிப்பு இருக்க வேண்டும். இதுபோன்ற ஜாதகம் உள்ளவர்கள் கல்வியை உயர்த்திக் கொள்ள வேண்டும். மேலும் பூப்பெய்திய காலம் தொட்டு திருமணம் முடியும் வரை வாரம் ஒருமுறையாவது ஆலயம் சென்று நவக்கிரகத்தில் உள்ள சூரிய பகவானுக்கும் சனி பகவானுக்கும் விளக்கேற்றி வர வேண்டும்.இப்பெடிச் செய்பவர்களுக்கு நல்ல கணவர் வருவார். மோசமான கணவர் வரமாட்டார்.

                        பரிகாரம்: 2

   ஆலயம் சென்று வணங்க முடியாதவர்கள், பூப்பெய்திய நாள் முதல் திருமணம் முடியும் வரை கீழ்க்கண்ட ஸ்ரீகாயத்ரி மந்திரத்தைச் சொல்லிவர நல்ல கணவர் வருவார்.

‘ஓம் அச்வத்வஜாய வித்மஹே

பாசஹஸ்தாய தீமஹி

தந்நஸ் ஸூர்ய ப்ரசோதயாத்.

 

ஓம் சனைஸ்வராய வித்மஹே

சூர்ய புத்ராய தீமஹி

தந்நோ மந்த ப்ரசோதயாத்’

மேற்கண்ட மந்திரங்களை  தினசரி காலையில் ஒரே நேரத்தில் மூன்று முறை  சொல்லி வணங்கிவர, நல்ல கணவர் வருவார். மோசமான கணவர் வரமாட்டார்.

                     பரிகாரம்:3

   சூரியன், சனி, இணைவு பார்வையுள்ள ஜாதகம் அமைந்த பெண்களுக்குத் திருமணம் ஆகிவிட்டிருந்தால், அவர்கள் சிரமத்தை அடைந்து கொடுமையான கணவரோடு வாழ்ந்து வருவார்கள்.  அப்படிப்பட்டவர்கள் பரிகாரம் 2-ல் சொல்லி உள்ள காயத்ரி மந்திரத்தை காலையில் ஒரே நேரத்தில் ஒன்பது முறை பராயணம் செய்து வந்தால் கணவரின் குணம் கண்டிப்பாக மாறும். நிம்மதியாக வாழலாம்.

    நம்மை ஆட்டுவிக்கின்ற இறைவன் ப்ரம்மம் என அறிகிறோம். அவருக்கும் செயல்கள் நடைபெற தூண்டுகோல் தேவை. அதற்கு காயத்ரி தேவை.உலக செயல்பாட்டை  மாயை, தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பிச் செயல்பட வைப்பது காயத்ரி. எனவே மோசமான கணவரை அடைந்தவர்கள் காயத்ரி மந்திரம் சொல்லி நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.

 

     

               

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter