Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

குடும்ப தோஷம் நீங்க......

Published On: 4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

இன்று பெரும்பாலான குடும்பங்கள் வசதி வாய்ப்புகள் இருந்தும், ஓயாத சண்டை பிணக்குகள், மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கை என இருந்து வருகின்றன. இதற்குக் காரணம் திருமணப் பொருத்தத்தில் உள்ள வசியப்  பொருத்தம் இல்லாததே. திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, வசியப் பொருத்தமும் சேர்த்துப்  பார்க்க வேண்டும். வசியப் பொருத்தம் இல்லாத ஆண்-பெண் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அடிக்கடி ஏற்பட்டு குடும்ப  தோஷமாக மாறிவிடுகிறது. பிரிவினை வரை சென்று விடுகிறது. குடும்பத்தில்  காரணம் இல்லாத சண்டை மற்றும் கருத்து வேறுபாடுகள் வரும். தம்பதியர், தங்களுக்கு வசியப்  பொருத்தம் இல்லை என்பதை அறியலாம். கணவன்-மனைவி அன்னியோன்யம் அதிகரிக்கவும் சண்டை வராமல் இருக்கவும் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து கொள்ளலாம்.

பரிகாரம் – 1

    குடும்பத்தில் மகிழ்ச்சி, நன்மை மங்களம் ஆகியவற்றைத் தரக்கூடியவள் துர்க்கையம்மன்! எனவே குடும்ப  ஓற்றுமை இல்லாமல் உள்ள தம்பதியர், வெள்ளிக்கிழமையன்று ராகு காலத்தில் (காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் ) துர்க்கையம்மனை வழிபட்டு வந்தால், குடும்ப தோஷம் நீங்கி சந்தோஷம் கிடைக்கும். கருத்து வேறுபாடு இல்லாத வாழ்க்கை வாழலாம். தம்பதியரிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.

   பரிகாரம் – 2

    துர்கையம்மனை  நேரில்  சென்று வழிபட முடியாதவர்கள், தங்கள் வீட்டிலேயே எலுமிச்சை பழத்தில் நெய் போட்டு விளக்கேற்றி வழிபட வேண்டும். துர்க்கையம்மனை மனதில் தியானித்துக் கொள்ள வேண்டும். இதனை வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் மட்டுமே செய்ய வேண்டும். தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள்  வீட்டிலேயே வழிபட்டு வர குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter