Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

தாய்மாமன் உறவில் விரிசல் வராமல் இருக்க

Published On: 4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

தாயின் உறவு எப்படிச் சிறந்ததோ அதேபோல தாய்மாமன் உறவும் சிறந்தது. தாயார் உயிரோடு இருக்கும்போதும் சரி;  மறைந்துவிட்டாலும் சரி அவரது உடன்பிறந்தவர்கள் எப்போதும் பக்க பலமாக இருப்பார்கள்  என்பதற்காகவே தாய்மாமன் உறவு முக்கியப்படுத்தப்பட்டது.

  இன்றைய  காலத்தில் பெரும்பாலான குடும்பங்களில் தாய்மாமன்  நல்லவராக  இருந்தாலும் தாய்மாமனின்  மனைவி  கடுமையானவராக மாறி தாய்மாமன்  உறவுகளைத் துண்டித்து விடுகின்றனர்.

   சுமார்  50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தாய்மாமன் வீடு  உயர்ந்த நிலையில் இருந்தாலும் சகோதரி, வீடு உயர்ந்த  நிலையில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தங்கள் பிள்ளைகளுக்குள் சம்பந்தம் வைத்துக் கொண்டனர். உறவுகள் விரிசல் இல்லாமல் தழைத்தது இன்று பணம், நகை போன்றவையே கணக்கில்

எடுத்துக்கொள்ளப்பட்டு பாசம், மறைந்து உறவுகள் கெட்டுவிட்டன. எது எப்படி இருந்தாலும் சகோதரிகளுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் தாய்மாமன் எல்லா காலகட்டத்திலும் முக்கியமானவர் சகோதரி  காலமான  பின்பு புகுந்த வீட்டுத் துணியோடு செல்ல முடியாது.  பிறந்த  வீட்டுத் துணியோடுதான் இறுதி யாத்திரை துவங்கும். பிள்ளைகளும் தாய்மாமன் உறவுகளில் விரிசல் வராமல் இருக்க   கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்து  கொள்ள வேண்டும்.

                  பரிகாரம்-1

  பெண்கள் திருமணம் முடியும் வரை தங்கள் பிறந்த வீட்டில் தந்தையின் குலதெய்வத்தை வணங்கி வருவார்கள். திருமணமான பிறகு கணவரது குலதெய்வத்தை வணங்குவார்கள். தந்தையின் குலதெய்வத்தில் சிறு தெய்வங்களும் இருக்கும். இதில் ஒன்று பெண்கள் திருமணமான பிறகும் தந்தையின் குலதெய்வ இடத்தில் வணங்க வேண்டிய தெய்வமாக இருக்கும்.  இந்த தெய்வத்தை வந்து வணங்கிச் செல்லும் பெண்களுக்கு சகோதரர்களிடையே சண்டை வராமல் பார்த்துக்கொள்ளும், பிள்ளைகளுக்கு தாய்மாமன் உறவில் விரிசல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

      எடுத்துக்காட்டாக தந்தையின் குலதெய்வமான அங்காளபரமேஸ்வரியை வணங்கி வந்தவர்கள்,திருமணமான பிறகு அதே ஆலயத்தில்  வணங்கிட இருளாயி அம்மன் தெய்வம் உள்ளது. இதேபோல ஒவ்வொரு பெண்களுக்கும் தங்களது  தந்தையின் குலத்யெவத்தில் திருமணமான பிறகு வணங்கிட தெய்வம் உண்டு. அதனைத் தெரிந்து வணங்கி வாருங்கள்,  உறவுகள் நீடிக்கும்.

                பரிகாரம்-2

     நேரில் ஆலயம் சென்று வணங்க முடியாதவர்கள்,பத்து கிராம்  வெந்தயம் எடுத்து அரக்குத் துணியில் (பிரெளன்) முடிந்து பூஜையறையில் வைத்து வணங்கி வாருங்கள். தாய்மாமன்  உறவுகளில் விரிசல் வராது.

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter