Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

மனச் சோர்வு நீங்கி நிம்மதி பெற....

Published On: 4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

தைரியமான மனதையும், திடகாத்திரமான  உடம்பையும் மனித இனத்திற்கு இறைவன் கொடுத்திருக்கிறார். என்றாலும் உடல் சோர்வையும் மனச் சோர்வையும் நாம் அடைகிறோம். இதற்கெல்லாம் காரணம் நமது செயல்படுகளும் அதிகப் பற்றும் தான் தனது குழந்தைகள் மீது வைக்கும் அதிகப் பற்று அவர்கள், பெரியவர்களாகி நம்மைவிட்டு ஒதுங்கிச் செல்லும் வேளையில் மனச்சோர்வைத் தருகிறது. இதனையே மறைந்த கவியரசு கண்ணதாசன் அவர்கள், ‘மனித ஜாதியின் துன்பம் யாவுமே மனதினால் வந்த நோயடா’ என்று ஒரு திரைப்படப் பாடலில் எழுதியுள்ளார். ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் பாதிப்பு இருந்தால் மனச்சோர்வு வரும். சந்திரனுடன்  கேது இருந்தாலும் சந்திரனுடன் ராகு சேர்ந்தாலும், சந்திர பகவானுடன் சனி பகவான் சேர்ந்தாலும் மன நிம்மதி குறைந்துவிடும். இப்படிப்பட்ட ஜாதகம் அமைந்தவர்கள் மனச் சோர்வு வரும்  காலங்களில் கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்வதன் வாயிலாக இறுதிவரை மனச்சோர்வு இல்லாமல் வாழலாம்.

   பரிகாரம் 1

     வாசகர்கள் தங்கள் சுய ஜாதகத்தை நீங்களே பரிசீலித்து, சந்திரனுடன் ராகு அல்லது கேது சனி கிரகம் சேர்ந்திருந்தால், அந்த கிரகங்களுக்கு ஒன்பது சனிக்கிழமைகள் நெய்விளக்குப் போட்டு வந்தால் மனச்சோர்வு நீங்கி நிம்மதியான வாழ்வு பெறலாம்.

பரிகாரம் – 2

   சுய ஜாதகத்தை ஆராய்ந்து பரிசீலிக்க முடியாதவர்கள், கீழ்க்கண்ட மகாமந்திரத்தைச் சொல்வதன் மூலம் மனச்சோர்வு நீங்கி நிம்மதி பெற்றுக் காரியங்களைச் சாதிக்கலாம்.

                      நவகிரக மகா மந்திரம்

  ‘ஓம் ஹரீம் ஆதித்யாய  ச  சோமாய

   மங்களாய புதாயச குரு

  சுக்கிர  சனிப்யச்ச

  ராகவே கேதவே நமக.’

     மேற்கண்ட  மகாமந்திரத்தை தினசரி காலையில் ஒரே நேரத்தில் பதினாறு முறை சொல்லி வணங்கிவர, வாழ்வில் வறுமை, பிணி,பகை, மனச்சோர்வு நீங்கிப் பதினாரு செல்வங்களும் பெற்று வாழலாம்.

   பரிகாரம்:3

    மகா மந்திரத்தை வடமொழியில் சொல்ல முடியாதவர்கள் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.

    ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி,,ராகு-கேது நவகிரக சகாய நமக’ என்று தினசரி  காலையில் ஒரே நேரத்தில் சொல்லி வணங்கி வந்தால், பதினாறு செல்வங்களும் பெற்று கவலைகளற்று வாழலாம். 

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter