Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

பஞ்சாமிர்தம் என்ற நைவேத்தியத்தின் தாத்பரியம் என்ன

Published On: 4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

பஞ்சாமிர்தம் ஐந்து அமிர்தம், அதில் இருக்கும் ஐந்து பொருட்களும்  அமுதத்துக்கு இணை, நமக்கு மரணம் வராமல் தடுப்பது அமுதம். அந்த ஐந்து பொருட்களும்  மருத்துவத் தன்மை வாய்ந்தவை.

 

  பஞ்சாமிர்தத்தை அபிஷேகத்துக்குப் பயன்படுத்தச் சொல்லியிருக்கிறார்கள். அது சாப்பிடச் சுவையாக இருப்பதால் அத  நைவேத்தியத்துக்கு நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

   அதில் இருக்கும் ஐந்து பொருட்கள் என்ன? பழம், வெல்லம், நெய், பால், தேன், ஆகியவற்றைச் சேர்க்கிறோம். இப்போது நீங்கள் பார்க்கும்  பஞ்சாமிர்தத்தில் உள்ள பொருட்களெல்லாம் பிற்பாடு தாமாக அவரவர்கள் வசதிக்குச் சேர்த்துக் கொண்டவை மேலே சொன்ன ஐந்து பொருட்கள்தான் பஞ்சாமிர்தத்தில் சேர்க்க வேண்டியவை.

  பால் முழு உணவு பாலை மட்டும் சாப்பிட்டே உயிர் வாழலாம். சர்க்கரை, கரும்பில் இருந்து வருகிறது. நம் உடலுக்கு வலிமை கொடுக்கிறது. இது சகல உயிர்களும், விரும்பக்கூடிய ஒன்று. பழம், உடலுக்கு இதம் தருவது. தேன், கபத்தை இல்லாமல் செய்துவிடும்.  நெய் ஆயுளைக் காப்பாற்றும் இவை அனைத்துமே  இனிப்பு ஒவ்வொரு விதமான இனிப்பு, இப்படி பூவிலிருந்தும் தண்டில் இருந்தும் இயற்கையாகக் கிடைக்கும் பரிசுத்தமான இனிப்புகளின் தொகுப்பே பஞ்சாமிர்தம். எனக்கு வாழ்க்கை பூராவும் இனிப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவர், இந்த ஐந்து அமிர்தத்தையும் சேர்த்து கடவுளுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது அறிவுரை.

 

 

 

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter