Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

பெண்களிடம் விளையாடும் பாம்புகள்

Published On: 4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

             புராணம்  கூறுவது போல ராகு கேது என்ற சாயா கிரகங்கள் மகா விஷ்ணுவின் மச்சவதார காலத்துக்கு பின் தான் ஜோதிடத்தில் இடம் பெறுகின்றன. புராணப் படி, ஸ்வர்பானு என்ற  அசுரன், பாற்கடலில் அமுதம்  கடைந்த காலத்தில் மோகினி அவதாரம் எடித்த மகா விஷ்ணுவால் அசுரகள் ஏமாற்றப்படுவதைக் கண்டு தேவவுருவெடுத்து தேவர்கள் வரிசையில் அமர்ந்து  அமிர்தம்  சாப்பிட  அதை சூரிய சந்திரர்கள் விஷ்ணுவிடம் காலட்டிக் கொடுக்க அந்த அசுரன்  விஷ்ணுவின் சக்ராயுதத்தால் தலைவேறு உடல் வேறானது அமுதம் உண்டாதால் உயிர் நீங்கவில்லை. பின்பு தவறுணர்ந்து இறைவனிடம் வண்ட, வடக்கில் தலையை வைத்து  படுத்திருந்த பாம்பை துண்டித்து பாம்பின் உடலை அசுரனின் தலையுடன் கூட வைத்தும் பாம்பின் தலையை அசுரனின் உடலுடன் கூட வைத்தும் அசுரனை இரண்டாக்கினார். அசுரன் தவம்  செய்ய, அசுரனின் தவத்திற்கு  இரங்கி அவர்களின் வேண்டுகோலுக்கு இணங்கி நவக்கிரக பரிபாலனம், செய்ய பிரம்ம வரம், தர காக்கும் கடவுளான விஷ்ணு ராவணனின் அசுர ஆட்சி நடைபெறும் காலம் ஒரு அசுரன் நவகிரக பரிபாலனம் நடத்துவது நல்லது அல்ல என்று இருவரையும் க்டக் மகர ஆழியின் வேதங்களை வைத்து காத்தும், கற்று வருமாறும் ராவண வதத்திற்கு பின் நவகிரகமாக் ஏற்றுக்  கொள்ளப்படுவார்கள். என்று வரம் தர ஸ்வர்ணபானு என்ற அரசன் ராகு கேதுவாக மாறி வேதங்களை கற்றும் காத்தும் வர ராவண வதத்திற்குப் பின் புனித நவகிரக பதவி ஏற்றதாக புராணம் கூறுகிறது. இந்த இருவித உடல் அமைப்பே நவகிரகங்களின் குணத்தைக் காட்டும். ராகுவான் அசுரன் அசுர உருவம், அசுர குணத்தையும் பிரதிபலிக்க அவன் தலையோ தன் உடலஒத் தேடி இன்னும் அலைகிறது. அதனால் தான் ராகுவை போக காரக கிரகம் வாழ்க்கையை அனுபவிப்பவன் என்று ராகுவிற்கு காரணம் கற்பிக்கின்றோம். கேதுவே பாம்பின் தலை விஷம் உடைய அசுர உடல் தன்னை வருத்தினால் விஷ்த்தால்  அழிப்பது பாம்பு ஆக கேது பொருள் பற்றையும் உடல் பற்றையும் அழிப்பவன். அதன் மூலம் மோட்சத்திற்கு அழைத்து செல்பவனாகிறார். அதனால் மோட்சக்காரர் என்று அழைக்கப்படுகிறார்.

 

                     விஞ்ஞானம்:

  சந்திரனின் சுற்று வட்டப்பாதை சூரியனின் சுற்று வட்டப்பாதையை வெட்டும் புள்ளியே ராகு கேது எனப்படும். இவைகளுக்கு உருவம் இல்லை. சந்திரன் பூமியின் சூழற்சியின் வேகத்தால்  ஏற்படும் இணையற்ற காந்தப்புயலே ராகு கேது ஆகும். இந்த காந்தப் புயலுன் சூழற்சியால் பூமியில்  உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இது விஞ்ஞானம்.

    இது இப்படி இருக்க ராகு கேது  மகளிரின் ஜாதகத்தில் சிறப்பான யோகங்களை ஏற்படுத்துமா?  என்று ஆராய்ந்தால் பல உண்மைகள்  புலப்படுகின்றன.  திருமண பொருத்த நேரத்தில் நாம் தான் ராகு கேதுதோஷம் கால சர்ப தோஷம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றோமே. இந்த கருத்தை வைத்து பல நூல்களை படித்த போது கிடைத்த சுவாராசியமான  செய்திகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

   ராகு கேது தரும்  பலன்கள்:

 1.  மேஷம் தவிர்த்து எந்த லக்கினமானலும் துலாபட்சத்தில் சனியும் சூரியன் – செவ்வாய் 7-ம் இடத்திலும் சந்திரன் ராகு 11ல் இருக்க அந்த பெண் வாழ்க்கை முழுவதும் அனைத்து வசதியையும் பெறுவாள். மேஷம்  லக்கினமாகி மற்ற கிரக அமைவுகள் மேலே உள்ளபடி இருக்க எதிர்மறையான பலனே கிடைக்கும். 
 2.    சந்திரன் ராகு 7- ம் இடத்தில் உள்ள பெண் அறிவாளியாக இருப்பார்.குருவும் 8ல் இருக்க  நிறைய குழந்தைகளைப் பெறுவாள்.
 3.    கேது, குரு, சுக்கிரன் 4-ம்  இடத்தில் நிற்க அப்பெண் உலகலாய சுகங்கள் அனைத்தையும் பெறுவாள். அவள் இறப்பின் போது உயிருள்ள உறவினர்கள்  யாரும் இருக்க மாட்டார்கள்.
 4.    கேது, செவ்வாய் சேர்க்கை சிறப்பான யோகமாக கருதப்படுகிறது. ஞான மோட்சக்காரன் கேது செவ்வாயின் கெட்ட குணங்களை நீக்குகின்றது.
 5.    சிம்மத்தில் ராகு உள்ள பெண் கவர்ச்சியான ரசிக்கக் கூடிய அழகான பெண்ணாகவும் வசதியான  இல்லற வாழ்க்கைகளை உடையவளாகவும் இருப்பாள்.
 6.     ராகு+புதன் – லக்கினம், 7 அல்லது 9 ல் இருந்தால் அந்த பெண்ணுக்கு வரும் கணவன் சிறந்த படிப்பாளியாக இருப்பான்.
 7.   ராகு லக்கினத்தில் அந்த  பெண் சிறந்த இல்லத்தரசி, ராகு, 2-ல் புத்திசாலியான மனைவி, ராகு, 7-ல் ஒரு பெண்ணிற்கு திருமணம் மறுக்கப்படுவதில்லை. தாமதம் ஆகலாம்.
 8.    ராகு 10-ஆம் வீட்டிலும் அல்லது 10-ம் ராசி மரமாக சுக்கிரன் மேஷ்த்திலும் இருக்க அப்பெண் 4- முறையாவது  திருமணம் புரிவாள்.
 9.   ராகு அல்லது கேது 7-ம்  வீட்டில் சூரியன் செவ்வாய் புதன் இருக்க அப்பெண் சட்டப்படியான மனைவியாக இருக்க மாட்டாள் அல்லது ஒருவனுக்கு மட்டும் மனைவியாக இருக்க மாட்டாள். 
 10.    ராகு கேதுவுடன் 4 அல்லது 7-ல் சூரியன் செவ்வாய் புதன் குரு நிற்க அப்பெண் விதவையாகவோ அல்லது விலைமாதராகவோ இருப்பாள்.
 11.   ராகு மேஷம்  விருச்சிகத்தில் 7-ம்   இடமாக இருக்க சுபபார்வை இன்றி இருக்க வைதவ்ய யோகம் ஏற்படும்.
 12.    ராகு 4ல் திருமண வாழ்க்கைக்கு நல்லது.ஆனால்  பாதிபடைந்த ராகு 4-ல் நிற்க அப்பெண்ணின் சொத்துக்கள்  நாசமடையும் அல்லது அம்மாதிரியான இடத்தில் மகிழ்ச்சியாக இருக்க மாட்டாள். 7-ம்  இடம்  7-ம் அதிபதி பலத்தை  பெறுத்து ராகு  அவள் மகிழ்ச்சிக்கு குறிக்கே வராது.
 13.   கேதுவோ அல்லது செவ்வாயோ, 8-ல் நிற்க வைதவ்ய யோகம் நிச்சயம். ஆனால் வலுவான சுபர்கள்  பார்வை பலனை மாற்றும் கேது 8-ல் நிற்பதே  தீய பலன்  எதுவும் இல்லை.
 14.   கேது+சூரியன் 1,2,3,4,5,8,9,11,12 நிற்க கணவன் மனைவியின் நடுவயதில் இறப்பான், 6,7,ல் சேர்க்கை தீய பலன்  எதுவும் இல்லை.
 15.   ராகு கேது 7-ல்  இருப்பது கணவனுடன் சந்தோஷமான உறவுக்கு உகந்த நிலை அல்ல. செவ்வாய் 7-ல் ராகு கேதுவுடன் நிற்பது விதவா யோகம்.
 16.   ராகு கேது சுபருடன் கூடி 7-ல் நிற்பது 2முறை திருமணம்  நடப்பதை குறிக்கும் ராகு கேது 9-க்கு உடைய சேர்க்கை 7-ல் நிற்க அப்பெண் ஒருவனுக்கு மட்டும் மனைவியாக இருக்க மாட்டாள்.
 17.   கேத்ய் 12-ல் நிற்பது பிரசவச் சிக்கலை  குறிக்கும். கேது 9-ல் தகப்பானாரின் அன்பு கிட்டாது. 4-ல் கேது அம்மாவுடன் சந்தோஷம் கிடையாது. சில ஜாதககாரர்களுக்கு மாற்றான் தாய் கொடுமைபடுத்தப்படலாம் என்ற நிலை உருவாகிறது.
 18.    ராகு+செவ்வாய் 5ல் நிற்பது மாதவிடாய் குறைகளாகும் அல்லது அதிகமான உதிரப்போக்கு ஏற்படும்.
 19.   ராகு 8-ல் நிற்பது பெரிய குடும்பம் ஆனால் வருமானம்  போதாத நிலை காட்டும். அப்பெண் இல்வாழ்க்கை சிக்கல்களை சந்திப்பாள்.
 20.   ராகு மகர லக்கினத்தில் நிற்க குரு 9-ல் அமர அப்பெண் 11 குழந்தை பேறு அடைவாள். 5 குழந்தைகள் மட்டும் உயிர் பிழைக்கும்.
 21.    ராகு – சந்திரன் – குரு இம்மூன்ற்ம், ஒன்றுகொன்று திரிகோணமாக அமைய அப்பெண்ணின்  பிரசவம் சிக்கலாகவும், கஷ்டமாகவும் அமையும். மேலும் அவளுக்கு அமையும் குழந்தைகளும் அதிர்ஷ்டம் அற்றவர்களாவர்கள்.
 22.   அராகு 5-ல் இருக்க நிறைய கரு சிதைவு ஏற்படும். ராகு+சனி 5-ல் உள்ள பெண்ணுக்கு கர்பப்பை  நோயும் அதனால் மகப்பேறு அமையாமலும் போகும். கரு சிதைவின் எண்ணிக்கையை ராகுவுடன் சேரும் கிரகங்களின் நிச்சயிக்கும். சுக்கிரன் 6, குரு 5, புதன் 4, செவ்வாய் 3, சந்திரன் 2, சூரியன் 1.
 23.    லக்கினம் துலாம்  ராகு மேஷம், சுக்கிரன், கடகம், செவ்வாய், துலாமோ மேஷமோ ஏற அப்பெண் முதல் கணவனை விட்டு விலகி மறுமணம் செய்து கொள்வாள். அவள் ஒழுக்கமற்றவள்.
 24.   1. ராகு மிதுனதத்திலும் 7-க்கு உடைய குரு சனிக்கு திரிகோணத்தில் 7ம் இடத்தில் இருப்பது பெண்ணுக்கு மகிழ்வான திருமண வாழ்க்கை.
 25.   2.  ராகு மிதுனத்திலும், திரிகோணத்தில்  சூரியனும்.

 

 1.   ராகு பூச நட்சத்திரத்தில் நிற்க அல்லது ராகு சிம்மத்திலும் அதற்கு ஏழில் சந்திரனும் நிற்க அதிபதி  செவ்வாய் சனிக்கு கேந்திரத்திலும் சந்திரனும் குருவும் மகரத்தில் சேர்ந்து நிற்க அப்பெண் இளம் வயதில் விதவையாவாள்.
 2.   கன்னி,ராகு, அதன் கேந்திரங்களில் சூரியன்,சனி 7-ம் அதிபதிக்கு கேந்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி

சேர்க்கை தாமதமான திருமணம். ஆனால் ஒழுக்கமான பெண்.

 

 1.   ராகு  மகரத்தில் 7-ம் அதிபதி குரு 6-ல் நீச்சம் இந்த அமைப்புள்ள பெண்ணுக்கு திருமணம் இல்லை. அந்த அமைப்பு ரிஷபம், துலாம் லக்கினத்திற்கு மட்டுமே பொருந்தும்.
 2.   ராகு மகரத்தில் சந்திரன் கடகத்தில் 7-ம் அதிபதி குரு 6-ல் வக்கிரம் அந்த அமைப்புள்ள பெண்ணுக்கு மாதவிலக்கு பிரச்சனையால் குழந்தை இல்லை.
 3.   தனுசு ராசியில் சந்திரன் செவ்வாய் சேர்க்கை ராகு மிதுனத்தில் உள்ள பெண் இளம் வயதில் திருமணம் செய்வாள். ஆனால் கணவனால் கைவிடப்படுவாள்.
 4.   ராகு 7-ம் இடமான மகரத்தில் நிற்க அதர்கு கேந்திரத்தில் சனி அமர அப்பெண் வாழ்வின் பிற்பகுதியில் திருமணம் செய்து கொள்வாள்.
 5.   ராகு தனுசு ராசியிலும் ராகுவுக்கு கேந்திரத்தில் சந்திரன் உடன் செவ்வாய் 7-க்கு உடையவர் கடக ராசியில் நிற்க பெண்ணுக்கு திருமண சுகம் மறுக்கப்படுகிறது. காரணம் உடல் ரீதியான குறைபாட்டால்.
 6.   ரிஷப லக்கினம்  அதில் சனி ராகு விரிச்சிகத்தில் சூரியன் சந்திரன், சிம்மத்தில் செவ்வாய் குடும்பத்தில் மகிழ்ச்சி அற்ற மணவாழ்க்கை நிரந்தரமான சச்சரவுகள் இவைகளால் பெண் வாழ்வில் தடம் புரண்டு விடுகிறாள்.
 7.   மகரம் லக்கினம் ராகு+செவ்வாய்+ரிஷபம்-கர்ப்பப்பை கோளாறு காரணமாக குழந்தை உண்டாகாது. குருபார்வை சேர்க்கை செய்ய குழந்தை கிடைக்கும். ஆனால் எல்லா குழந்தைகளும் இறந்து விடும். ராகுவிற்கு பதில் கேது  சம்பந்தம் குழந்தை பிறப்பு உண்டு. ஆனால் அந்த குழந்தைகளால் சந்தோஷம் இல்லை.
 8.   ராகு,செவ்வாய் 5-ல் செவ்வாய் நட்சத்திரம் உடைய பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும்.
 9.   இந்த கருத்துக்கள் பல நூல்களில் இருந்து திரட்டப்பட்டவை. கொடுக்கப்பட்டுள்ள குறிப்புக்கள் பலனை கொடுக்கலாம், அல்லது  தனி ஒரு ஜாதகத்தில் உள்ள சுப பார்வைகள் பலனை வேறுபடுத்தியும் காட்டலாம். அதையும் கணத்தில் எடுத்துக் கொண்டு இதர கிரகங்கள் தனக்குள் ஏற்படுத்தும் பார்வை சேர்க்கையினால் ஏற்படும் பலன் களையும் சேர்த்து  பலன் எடுக்க முழுமையான பலன் கிடைக்கும். இந்த கட்டுரையில் ராகு,கேது ஏற்படுத்தும் தாக்கம் வாழ்க  ஜோதிடம்.

 

 

 

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter