Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

பித்ரு தோஷம் விலக........

Published On: 4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

தன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்- தந்தையர் காலமாகிவிட்டால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய  ஈமக்கிரியைகளை (இறுதிச் சடங்கு) பிள்ளைகள்  செய்தால் மட்டுமே அவர்கள் ஆன்மா சாந்தி அடையும். ஈமக்கிரியை செய்யத் தவறுபவர்களுக்கு பித்ரு தோஷம் உடனடியாக வந்து சேரும்.

      ஈமக்கிரியைகளைச் செய்ய தவறியவர்கள் என்று இறைவன் கணக்கில் எல்லாரும் வர மாட்டார்கள். கீழ்க்கண்ட வகையில் தவறுபவர்களை மட்டுமே இறைவன் இந்தக் கணக்கில் கொண்டு வருகிறார்.

  1. கூப்பிடும் தூரத்தில் அல்லது வந்து சேரும் அளவு தூரத்தில் வசிக்கும் பிள்ளைகள் (ஆண்-பெண் இருவரும்) வேண்டும் என்றே இறுதிச் சடங்கிற்கு வராமல் இருப்பது.
  2.  இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்தும் சொத்துச் சண்டை மற்றும் ஏதேனும் காரணங்களுக்காக ஈமகிரியைகளைச் செய்யாமல் உதாசீனப்படுத்துவது.
  3. (வெளிமாநிலம் வெளிநாட்டில் இருப்பவர்கள் பயணத்தடை காரணமாக தாமதமாக வந்து இறுதிச் சடங்கு செய்யத் தவறிவிடுவார்கள். இவர்களை பித்ரு தோஷம் பாதிக்காது)
  4. ஸ்ரீ ராமபிரான் தசரத சக்கரவர்த்தியின் கட்டளைப்படி காட்டிற்குச் செல்கிறார். அப்போது அவர் தந்தை இறந்த செய்தி அவருக்குக் கிடைக்கிறது. இறைவன் அவதாரமான ஸ்ரீராமபிரான், ஆஞ்சனேயரை வைத்து தர்ப்பணம் செய்து புண்ணியம் பெற்றதாகப் புராணக் கதைகள் வாயிலாகத் தெரிய வருகிறது.
  5.  ஒருவர் சென்ற பிறவியில் தாய்- தந்தையருக்கு ஈமக்கிரியைகளைச் செய்யவில்லை என்பதை இந்தப் பிறவியில் உங்கள் ஜாதகத்தைக் கொண்டு நீங்களே எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.
  6.       தை, மாசி, வைகாசி மாதங்களில் பிறந்த ஆண்-பெண் இருபலரும் முற்பிறவியில் தந்தைக்கு ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்கள். கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் முற்பிறவியில் பெற்ற தாய்க்கு ஈமக்கிரியை செய்யாததால்  பித்ரு தோஷம் பெற்றவர்கள்.
  7.     முற்பிறவியிலும், இந்தப் பிறவியிலும் ஈமக்கிரியைகளைச் செய்யத்  தவறியவர்கள் பித்ரு தோஷம்  நீங்க கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்யலாம்.

        பரிகாரம் – 1

     நூறு கிராம் சந்தனக்கட்டை வாங்கிக் கொண்டு சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு சந்தனத்தை உரசி எடுக்க வேண்டும். உரசி எடுத்த சந்தனத்தை அர்ச்சகரிடம் கொடுத்து சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும். (இந்த அபிஷேகம் அமாவாசை அன்று செய்ய வேண்டும்.) அந்த அபிஷேகத்தைப் பார்த்த நாள் முதல்   உங்கள் பித்ரு தோஷம் விலகும்.

    பரிகாரம் – 2

   சிவன் கோவில் சென்று அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் நூறு கிராம் பச்சரிசி, ஐந்து ரூபாய்க்கு அகத்திக்கீரை 50 கிராம் கருப்பு எள், 100கிராம் வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை தினத்தன்று பசுமாட்டிற்குக் கொடுக்க, பித்ரு  தோஷம் நீங்கும். தொடர்ந்து ஒன்பது அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும். இதனால் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.

 

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter