Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

திருடு போன பொருட்கள் விரைவில் கிடைக்க

Published On: 4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

நமது உடைமைகளை மற்றவர்கள்  திருடிக் கொள்வது என்பது இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. பட்டப்பகலிலேயே நமது கண்  முன்னாலேயே நமது  பொருட்களைத் திருடர்கள்  திருடிச் செல்கிறார்கள். அப்படிப்பட்ட  திருடர்கள் பார்ப்பதற்கு பகட்டாகத் தெரிவார்கள். பட்டப்பகல் திருடர்களின் உட்கருத்தை பகட்டான ஆடைகள் மறைத்து விடுகின்றன.

    

      பொதுவாக எல்லாரது வாழ்விலும் பொருட்கள் திருடு போவதில்லை. ஜோதிடப்படி ஒரு சிலரது ஜாதகத்தில் 6 ஆம் வீட்டிற்குரியவர் லக்னத்துக்கு 8-ல் இருந்தால் அந்த ஜாதகரின்  பொருட்களை அந்த  தசா புக்தி, அந்தரம் வரும்போது  மற்றவர்கள் திருடிக் கொள்வார்கள். திருட்டு போனவுடன் காவல் துறையில் புகார் செய்கிறோம். சில நேரங்களில்  அவர்களால் கண்டுபிடித்துத் தர தாமதமாகும். திருட்டு சம்பந்தமாக புகார் கொடுக்கும் அதே நேரத்தில்,  மற்றவர்கள் பொருளை அபகரித்து வைத்துள்ளவர்களைக் கண்டித்து தண்டித்து, திருடிய பொருளைத் திரும்பக் கொடுக்கச் செய்யும்  தெய்வத்திடமும்  கோரிக்கை வைக்க வேண்டும். அப்படி வைத்தால் ஒன்பது வாரங்களுக்குள் திருடிய பொருளைக் கிடைக்கச்  செய்யும் வல்லமை எமதர்மராஜவுக்கு உள்ளது. அவர் நல்லவர்களுக்கு தர்மராஜா தீயவர்களுக்கு எமதர்மராஜா. நல்லதே செய்பவர்களை எமதர்மராஜா இவ்வுலகத்தை விட்டு விடுவித்து அழைத்துச் செல்லும்போது பூம்பல்லக்கிலும், தீயவர்களை கயிற்றைக் கட்டி இழுத்தும் செல்வார் என்று சொல்லப்பட்டுள்ளது. எமதர்ம ராஜாவை வணங்கியவர்களை அவர் கைவிட மாட்டார்.

                   பரிகாரம் -1

   பொருட்கள்  திருடு போனாலும் மற்றவர்கள் நமது அசையாச் சொத்துகளை மிரட்டி எடுத்து வைத்துக் கொண்டாலும் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாது என்று ஒருவர் சொன்னாலும் பங்காளிகள் சொத்தை மாற்றி வ்வரத்துடன் அனுபவித்துக் கொண்டு தனக்கே உரிமையாக்கிக்   கொண்டாலும் இவையெல்லாம் திருட்டுக் கணக்கில்  வந்துவிடும். எனவே கைவிட்டுப் போன பொருட்கள் கிடைத்திட உங்கள் பகுதியில் அமைந்துள்ள எமதர்ம ராஜாவுக்கு ஒன்பது சனிக்க் கிழமைகள் நெய் விளக்கு ஏற்றி கோரிக்கை வைத்து வந்தால், பொருட்களை எடுத்துக் கொண்டவரின் மந்தில் எமதர்மராஜா உறைத்து எடுத்தவருக்கு  சிரமத்தைக் கொடுப்பார், ஒன்பது வார முடிவுக்குள் கைவிட்டுப்போன பொருட்கள் வந்துசேரும். நம்பிக்கையோடு செய்து பலர் பயனடைந்த அனுபவப் பரிகாரம் இது.

 

                       பரிகாரம்-2

   எமதர்மராஜா ஆலயம் செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகே வெளியிடத்தில்   open Place    ஒரு சனிக்கிழமை ஒன்பது  சூடத்தை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து ஏற்றி, தெற்குப் பக்கமாக சூடத்தைப்  பார்த்து நின்று,  எமதர்மராஜாவை நினைத்து கோரிக்கையைச் சொல்ல  வேண்டும். இதேபோல ஒன்பது சனிக்க் கிழமைகள் செய்ய வேண்டும். ஒன்பது வார முடிவுக்குள் கைவிட்டுப்போன பொருட்கள் வந்துசேரும். எமதர்மராஜா இருப்பது தெற்கு திசையில் என்பதால் தெற்கு முகமாக நின்று வணங்க வேண்டும்.  

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter