Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

நவகிரக தோசப் பரிகார ஸ்தலங்கள்

Published On: 4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

சூரிய தோசம் நீங்க:

          ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் நீச்சம் பெற்று இருந்தாலும் சூரியன் தசை, சூரிய புத்தி நடைபெற்றாலும்,சூரியனுக்குப் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் சூரியனுக்கு மூன்று கோயில்கள் உள்ளன. திருக்கண்டியூர் வீரட்டம் (தஞ்சைக்கு அருகிலும்), திருப்புறவார் பனங்காட்டூர் (விழுப்புரத்திற்கு அருகிலும்), சூரியனார் கோவில் ஆகியனவே அவை.

 

  சந்திரன் தோசம் நீங்க:   -  திருந்துதேவன்குடி

     குடந்தைக்கு அருகிலுள்ளது திருவிசநல்லூர். இவ்வூரிலுள்ள சிவாலயத்தின் பின்புறம் ஒரு கி.மீ தூரத்தில் இருக்கும் திருக்கோயில் திருந்துதேவங்குடி எனப்படும். பாடல் பெற்ற தலம். நண்டாங்கோயில் என்றும் சொல்வார்கள். கடக ராசியைச் சேர்ந்தவர்கள் வழிபட வேண்டிய திருகோயில். அவர்கள் வழிபட்டால் எல்லா வகையான தோசங்களும் நீங்கும். எல்லாக் கோயில்களிலும் சந்திரன் நின்ற நிலையில் இருப்பவர். இந்தக் கோயிலில் அமர்ந்நிலையில் இருக்கிறார். அதுவும் யோக நிலையில் இருக்கிறார்.  எனவே, எல்லா இராசிக்காரர்களும் இங்கு வந்து இறைவனையும், இறைவியையும், சந்திரனையும் வணங்கினால் சந்திரனால் விளையும் ஜாதக தோசங்கள் நீங்கும். சந்திராஷ்டம் தடை கூட தகர்ந்து போகும். இது உமாதேவி நண்டு வடிவில் சிவபெருமாணை வழிபட்ட தலம்.

 

    திருப்பதி:    

          சந்திரன் வந்து வழிபட்ட திருமலைக்கு வந்து ஸ்ரீநிவாசப் பெருமாளை வழிபடும் அன்பர்கள்,தங்கள்  ஜாதகத்தில் சந்திரனால்   ஏற்படும்  தோசங்கள்  மற்றும் அசுப பலங்களிலிருந்து விடுபட்டு, நற்பலன் பெறுவார்கள் என்பது உறுதி. சந்திர தோசத்தைப் போக்கிக் கொள்ள வேண்டி ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளைத் தரிசிக்க உகந்த கிழமை திங்கள் ஏற்ற நேரம் காலை மணி 6-7;பிற்பகல் 1-2 மற்றும் இரவு 8-9 மணி ஆகும்.

    செவ்வாய்  தோசம் போக்கும் சிவத்தலம் வைத்தீஸ்வரன் திருக்கோயில்:

      நவகிரக நாயகர்களில் செவ்வாய் மிகவும் வலிமை மிக்கவர்.  சகோதரர் பூமி யோகம்,  தேக நலம், ஆகிய பலங்களைத் தருபவராக இருக்கிறார். செவ்வாய் தோசத்தால் திருமணத் தடை உண்டாகும் என்பர். இதனைப் போக்கும் தலமாக  விளங்குகிறது வைத்தீஸ்வரன் கோயில். செவ்வாய் வழிபட்ட  சிவலிங்கம் இங்கு அமைந்துள்ளது. செவ்வாயின் அதிதேவதையான மிருகப்பெருமான் முத்துக்குமாரசுவாமி என்ற  பெயரில் இங்கு வீற்றிருக்கிறார். செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் தனக்குரிய ஆட்டு வாகனத்தில் கோயிலுக்குள்ளே உலா வருகிறார். இங்கு தன்வந்திரி சித்தர் ஜீவ சமாதி ஆகி இருப்பதால் நோய் தீர்க்கும் தலமாகப் போற்றப்படுகிறது. இத்தல இறைவனை வைத்தீஸ்வரரையும், அம்பிகை தையல் நாயகியையும் விரதம் இருந்து வழிபாடு செய்வோருக்கு திருமணத் தடை நீங்கி நல்ல வாழ்க்கை அமையும்.

 

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter