Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

தொழில்,அரசியல் பகைமை நீங்க – உத்தமபாளையம்

Published On: 4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

தொழிலில் அரசியலில் இருப்பவர்களுக்கு பகைவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். சில மனக்கசப்புகளால் நண்பர்களே கூட பகைவர்களாக மாறக் கூடும். பகைவர்களே  இல்லாமல் இருப்பது எப்படி? பகைவர்களை இல்லாமற் செய்வது எவ்வாறு?  இப்படிப்பட்ட பகைமையைப் போக்கும் விதத்தில் அவதரித்த கிரகங்கள்  தான் இராகு-கேது .இவர்களை வணங்கினால் எதிரிகள்  பலமிழப்பார்கள். மேலும் பகவர்களால் தனக்கு ஆபத்து என்று பயப்படும் நிலை ஏற்படுமானால்  தேனி – கம்பம் மார்க்கத்தில் உள்ள உத்தம் பாளையம் சென்று வழிபடலாம். இங்குள்ள ஸ்ரீஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில் இராகு – கேது மூர்த்திகள் தங்களது துணைவியாருடன் தனிச்சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். அந்த ஆலயம் சென்று  ஞாயிறு, திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திர நாட்களில் கேதுவிற்கும் ஆராதனை செய்து வழிபடலாம். இராகு-கேதுவிற்கு ஹோமங்கள் ஆற்றுவதும் சிறப்பானது. இராகு மூர்த்திக்கு பாலாபிஷேகமும் கேதுவிற்கு மலைத்தேன். குங்குமப்பூ, பனங்கற்கண்டு கலந்த பசும்பால் அபிஷேகமும் செய்வது நல்லது. பகைமை தவிர திருமண தோஷங்கள் பாகபிரிவினை தோஷங்கள் நாக தோஷங்களும் விலகும். உத்தமபாளையம் சிவத்தலம் மிகவும் பிரமாண்டமானது. மன அமைதியைத் தரும் திருத்தலமாகும்.

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter