Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

தொழில் தொடங்க – பாண்டிச்சேரி மணக்குள விநாயகர்.

Published On: 4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

                தொழில் தொடங்க – பாண்டிச்சேரி மணக்குள விநாயகர்.

    இந்தியாவிலேயே கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட ஒரே விநாயகர் கோயில், சித்தி, புத்தியை மனைவியாக கொண்ட விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும் ஒரே தலம். நடராஜரைப் போலவே நர்த்தனம் புரியும் விநாயகர். விநாயகர் தலங்களில் பள்ளியறை இருப்பது இங்கு மட்டுமே. பல்வேறு சிறப்புகள் கொண்டது பாண்டிச்சேரியில் உள்ள இந்த மணக்குள் விநாயகர் திருகோவில் கருவறையில் மூலநாயகராகிய மணக்குள விநாயகர் கிழக்கு நோக்கி 4 கைகளுடன் காட்சி அளிக்கிறார். இவரது வலது புறத்தில் சிறிய விநாயகர் உருவமும் தென்புறம் இரட்டை நாகத்த்திரு  மேனியும் அமைந்துள்ளன. பீடத்தின் முன்புறம் மணற்குளம் இருந்த சுவடாக வற்றாத நீர் சுரக்கும் குழீ உள்ளது. இங்கு வந்து வழிபடுவதன் மூலம் பக்தர்களீன் எல்லாவிதமான பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன. கல்யாண வரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இவரை வணங்கினால் நன்மை கிடைக்கின்றது. தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், கல்யாண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர் புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு அதிக அளவில் வருகின்றனர்.

  வழித்தடம்: புதுச்சேரி கடற்கரையோரம் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆரிரமம் அருகில் இக்கோவில் அமைந்துள்ளது.

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter