Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

தங்கம்,இரும்பு,பூ, வியாபாரம் செழித்து விளங்க – கஞ்சமலை.

Published On: 4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

இங்கு குடியிருக்கும் குமரன் இத்தகைய வியாபாரங்கள் செழிக்க அருள்கிறார். குழந்தை வடிவில் பாலமுருகன் என்ற பெயரில் திகழும் இவர் குழந்தைகளின் நோய் இங்கு குடியிருக்கும் தீர்ப்பவராகவும் உள்ளார்.  இந்தத் தலம்  சேலம் அருகில் உள்ளது. மாலாங்கன்,இந்திரன்,சேர்மன்,பிரம்மன்,ருத்திரன்,காளாங்கி,கஞ்சமலையானோட எழுவரும் என் வழியாமே, என்று திருமந்திரத்தில் பாடல் பெற்ற தலம் இது. மலயின் உயரத்தை அடிவாரத்தில் இருந்து பார்த்தால், இதில் ஏறிவிட முடியுமா என மலைப்பாகத் தோன்றும். ஆனால் 250 அடி உயரமே உள்ள இந்த மலையில் 101 படிக்கட்டுகளைக் கடந்தால் கோயிலை அடைந்து விடலாம். அது  மட்டுமல்ல! மலைக்கோயிலுக்கு  நேரடியாக கார்களிலும் சென்று விடலாம். கஞ்சம் என்ற சொல்லுக்கு தங்கம், இரும்பு, தாமரை என்ற மூன்று பொருள்கள் உள்ளன. இம்மூன்று பொருள்களும் இம்மலைக்கு பொருந்தும்.   இங்கு எழுந்தருளியுள்ள முருகனை சஷ்டி திதிகளில் விரதம் இருந்து வழிபட்டால் மனம் அமைதியாகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். தங்கம், இரும்பு, பூ வியாபாரிகளுக்கு வியாபாரம் விருத்தியடையும் என்ற  நம்பிக்கை  உள்ளது.

  இருப்பிடம்:  சேலம் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து இளம்பிள்ளை என்ற  கிராமத்துக்குச் செல்லும் ரோட்டில் 19 கி.மீ. சென்றால் கஞ்சமலை சித்தர் கோயிலை அடையலாம்.      

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter