Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

மன சோர்வை போக்க சில வழி முறைகள்

Published On: 4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

 மனமே வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிக்கும் காரணமாகும் மனம் மாசுபட்டால் மனக்கவலை ஏற்படும் என்பதை விட உடல் நலமும் பாதிக்கப்படும். வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும்  நிறைந்ததே. மாறி மாறி வரும், இயற்கையின் விதிக்குட்பட்டதே குடிசையில் வாழும் ஏழைப்பங்காளனுக்கும் கோடிக்கதிபதியான கோமானுக்கும் வாழக்கையில் என்றுமே ஒரே நிலையில் இருப்பதில்லை. கவலை இல்லாத மனிதர்களே இல்லை என்று இறைவனால் விதிக்கப்பட்டதே இதன் விதிவிலக்கு என்பதே இல்லை எனலாம்.

 

  துன்பங்கள் தொடர் கதையாக விடுமானால் ஒரு சிலர் மனதில் தாங்க இயலாத நிலையில் மனச் சோர்வடைந்து விடுகிறார்கள். அளவிற்கதிகமான  மனச்சோர்வு தற்கொலை எண்ணத்தைத் தந்துவிடுகிறது. வாழ்க்கையில்  தன் நம்பிக்கையற்ற  நிலையில் ஏற்ப்படுவதே நம்பிக்கையே மன நிம்மதி தரும் என்றார்கள் மனோ தத்துவ மேதைகள்.

 

  1.   கீதையின் பொன் மொழிகளை தினம் ஒரு தரம் காலையில் படித்து பாருங்கள் எது நடந்தாலும் அது நன்றாகவே நடந்தது. எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்  என்ற நம்பிக்கையுடன் அன்றைய பொழுதை  தொடங்கவும்.
  2.    என்றும் மனதிற் கேற்ப்ப மகிழ்ச்சியான காரியங்கள் நடைபெறுவதற்கு எது நடந்தாலும் அதை மனமுவந்து ஏற்றுக் கொள்ள தன்னை ஆட்படுத்திக் கொள்ளுங்கள்.இது நடைமுறையில் உடனே ஏற்ப்பட்டுவிடாது. நாளாகவே இதை பின்பற்ற இயலும். மனதில் உள்ளதை யாரிடமாவது சொல்லி விட்டால் மனமும் இதை போல் லேசாகி விடும். மனச் சோர்வும் பறந்தே சென்று விடும். மனதில் ஏற்ப்படும் கவலையை  மனதிற்குள்ளே அடக்கி வைத்தால் அது ஓர் நாள் பெரிதாக வெடித்தே விடும். அதனால் தனிமையிலே இறைவனின் முன்னால் அழுதுவிடுங்கள். மனதிலுள்ள கவலையும் இருந்த இடம் தெரியாமலே  மறைந்து விடும்.  உங்களுக்கு  விருப்பமானவர்கள் முன்னால் அழுது விடுங்கள். அதற்கு சந்தரப்பமில்லையெனில்  இறைவன்  முன்னால் நீங்கள் வணங்கும் தெய்வத்தின் உருவப்படங்கள் முன்னால் மனம்விட்டு அழுது விடுவதால் அவனருளால் அனைத்து  கவலையும் மறைந்து விடும்.
  3.   வாழ்கையில் எந்த ஒரு செயலும் உடனே வெற்றி பெற்று விடுவதில்லை. முயற்ச்சி செய்து கொண்டே இருங்கள் வெற்றிபெறும் வரை முயற்ச்சி  செய்து கொண்டே இருந்தால் ஓரளவாவது வெற்றி கிடைக்கும். அப்பொழுது மனதில் சோர்வும் ஏற்ப்படாது. மாம்பழமும் உடனே கிடைத்து விடுவதில்லை. அது பூத்து காயாகி, பின்தான் பழமாகி பலன் தருகிறது. காய்க்கும் அனைத்தும் பழமாக கிடைப்பதில்லை. அதில் சில வெம்பி பிஞ்சாக உதிர்ந்து விடுகின்றன. மாமரமும் எக்காலமும் பூப்பதில்லை. அதற்குரிய காலத்திலேதான் பூக்க ஆரம்பிக்கிறது அதனால் முயற்சி செய்து கொண்டே இருந்தால் காலம் கனியும் பொழுது வெற்றியும் பெறலாம்.
  4.  தியானம்: காலையில் இரவு படுக்கப்போகும் பொழுது பத்மாசனத்தில் அமர்ந்து விருப்பமான தெய்வத்தை மனதில் உளமார நினைத்து மனதை ஒருநிலைப்படுத்தி இறைவா,அனைத்தும் நீயே என்ற சரணாகதி முறையில் முறையிடுங்கள். பிராத்தனைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். இதுவும் உடன் பலன் தந்து விடாது சில  மாதங்களாக இப்பயிற்ச்சியை தியானத்தை செய்து வருவதால் மனம் ஒரு நிலைப்பட்டுவிடும். இன்பத்தியும், துன்பத்தியும் ஒன்றாகவே நினைக்கும் எண்ணமும் மனதில் தோன்றிவிடும். எதையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டால் துன்பமே,சோர்வுதான் இருக்குமா,  மனச் சோர்வு சில நேரங்களில் என்ன பயிற்சி  செய்தாலும் மனத்திற் கேற்ப்பில்லாத நிகழ்ச்சிகள் நடைபெறுமானால் ஏற்ப்பட்டு விடுவது இயற்க்கையின் நியதியே.அதனால் செய்யும் வேலையில்  இருந்து ஓய்வு கொண்டு மனதிற் கேற்ற இசையை கேட்கலாம் இசை மனதில் ஏற்ப்படும் சோர்வை போக்க உதவும் காலார நடந்து இயற்க்கை  சூழ்நிலையில் மனதை செலுத்தலாம். காலையிலும்,மாலையிலும் சில கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் பயிற்சியை மேற்க்கொண்டால் உடல் நலமும் பெறலாம். உள்ளத்திலும் புத்துணர்வும் பெறலாம், வீட்டின் முன்னால் மனதிற்கேற்ற மலர்களை வளர்க்கலாம். மலர்கள் பூத்துக் குலுங்குவது மனதிற்கு மகிழ்ச்சியை தௌர்ம். இயற்கை  சூழ்நிலையில் மனதை செலுத்துவதால் மனச் சோர்வும் நீங்கும்.

 

பொன்மொழி:

    நாம் ரூபத்துடன் கடவுளை வழிபடுவது பக்தி மார்க்கத்தின்  முதல்படி, பின் சிறிது சிறிதாக மேல் நிலைக்கு உயர்கிறோம். உருவமற்றதை உணர்ந்து வழிபடுகிறோம். முடிவில் உண்மையான இறைவன் உணர்கிறோம் அதுவே ஆத்ம தரிசனம்.

                           -பகவான் ஸ்ரீ சத்ய சாயி

 

            

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter