Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

மூல நட்சத்திரத்தில் பிறந்த தோஷம் நீங்க.....

Published On: 4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

 

     27 நட்சத்திரங்களில் மூல  நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் தோஷங்கள் அதிகம் என்று கூறுவார்கள். பொதுவாக, மூல நட்சத்திரம் உள்ளவர்கள் கிருஷ்ண பட்சம் (தெய்பிறை) திருதியை திதி மற்றும் தசமி திதியில் பிறந்தாலும், அல்லது சுக்கில  பட்சம் (வளர்பிறை) பஞ்சமி திதியில் பிறந்தாலும், பிறந்த  வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும்  அவ்வளவு  சிறப்பு ஏற்படாது. மேலும் மூல நட்சத்திரத்தில்  செவ்வாய், புதன், சனி ஆகிய  கிழமைகளில் பிறந்தவர்கள் எல்லா வகையிலும் அதிர்ஷ்ட வாய்ப்பை இழப்பார்கள். மூல நட்சத்திரல் பிறப்பவர்கள்   காலை வேளையில் பிறந்தால் அவர்களுடன் பழகுபவர்களுக்கு கஷ்டம்  வரலாம். மாலை வேளையில் பிறந்தால் அவரின் தாய்  பிறந்த வீட்டிற்குக் கஷ்டம் வரும். இதுபோன்ற தோஷங்கள் இருப்பதால் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களூக்குத் திருமணம் ஒரு தடையாக மாறி விடுகிறது. பரிகாரம் வாயிலாக  மேற்கண்ட தியோஷத்தைச் சீர் செய்யலாம் என்று அகத்தியர் உள்ளிட்ட சித்தர்கள் வழிகாட்டி உள்ளார்கள்.

    பரிகாரம்:

  1.    சிவன் கோவில் தல விருட்சத்தின் வேர்ப்பகுதியில் உள்ள மண் ஒரு கைப்பிடி.
  2. விநாயகப் பெருமானின் தலையாய் விளங்கும் யானை மிதிக்க இடத்து மண் ஒரு கைப்பிடி.
  3.  பால்  சுரந்து கொண்டிருக்கும் பசுவின் கால் பட்ட இடத்து மண் ஒரு கைப்பிடி.
  4.  பாம்புப் புற்று அல்லது ஏதேனும் புற்று மண் ஒரு கைப்பிடி.
  5. வயல்வெளி அல்லது கண்மாயில்  உள்ள நண்டு வளையின் புற்றுமண் ஒரு கைப்பிடி.
  6. கண்மாய் அல்லது ஊருணியில் உள்ள மண் ஒரு கைப்பிடி.
  7. ஆற்றுப்படுகை மண் ஒரு  கைப் பிடி அல்லது கடற்கரை மண் ஒரு கைப்பிடி (ஓடைகளில் உள்ள மண்ணைப் பயன் படுத்தக்கூடாது).

      மேற்கண்ட ஏழு வகையான மண்ணை ஒரு பாத்திரத்தில் சேகரித்து சிறிது தண்ணீர் கலந்து பிசைந்து  வைக்க வேண்டும். முழுக்கத் தடவி 45 நிமிடங்கள்  கழித்துக்  குளிக்க வேண்டும். இவ்வாறு செய்த 90 நாட்களுக்குள் திருமணம் நடக்கும். திருமணத்திற்குப் பிறகு நல்வாழ்க்கை வாழலாம்.

(மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண்-பெண் இருவருக்கும் இது பொருந்தும்.)

     மூல நட்சத்திரத்தில் பிறந்து, மேற்படி பரிகாரம் செய்யாமல் திருமணம் முடிந்து கஷ்டத்தில் தவிக்கும் ஆண்-பெண் இருவரும்  மேற்படி பரிகாரத்தைச் செய்து கொண்டால் வறுமை நீங்கி, நல்ல வாழ்க்கை வாழலாம்.

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter