பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன என்பதை வாசகர்கள் தெரிந்துகொள்வது வாழ்வை செம்மையாகக் கொண்டு செல்ல ஏதுவாகும்.
பிரம்மா உயிர்களைப் படைக்கின்றார். அப்படிப் படைக்கப்பட்ட உயிர்களில் மனித உயிர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இறைவனால் வழங்கப்பட்ட உயிரை இறைவன் நேரம் வரும்போது ‘நீ வாழ்ந்தது போதும், என்று மண்ணுலகிலிருந்து வுண்ணுலகிற்கு எடுத்துச் சென்று விடுவார். இந்த சம்பவம் நாம் அன்றாடம் பார்க்கும் சம்பவம்தான்.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், மண்ணுலகில் பிறந்த ஒவ்வொருவரையும் இறைவந்தான் எடுக்க வேண்டும் என்ற உண்மைக்கு மாறாக,போட்டி, பொறாமை காரணமாக ஆணவத்துக்கு இடம் கொடுத்து வாழ்ந்தவர்கள்- வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தனக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்கும் போக்கைத் தொடர்கின்றனர். அப்படி பழிவாங்கும் போது தனக்குப் பிடிக்க்காதவர் உயிரை எடுத்து வருகின்றனர். சொத்துக்காகவும் பெண்ணுக்காகவும் பொன்னுக்காகவும் இரக்கமின்றி ஒரு உயிரைக் கொலை செய்து விடுகின்றனர். இதுவே பிரம்மஹத்தி தோஷம் ஆகும். இது உண்மைதானா என்று சிலர் சந்தேகிக்கலாம். பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன என்பதை நாம் இராமாயணம் வாயிலாக அறியலாம்.
ஸ்ரீ ராமபிரானின் அவதாரம் இராவணனின் அட்டூழியத்தை அழிப்பதற்காகவே ஏற்பட்டது. இதிகாசத்தில் இராவணன் சிவபெருமானிடம் வரத்தைப் பெற்று இராவணேஸ்வரன் என்ற பெயரோடு இலங்கையை ஆண்டு வந்தான் சீதாபிராட்டியாரை சிறையெடுத்துச் சென்ற காரணத்திற்காக மட்டுமல்ல; இராவணனின் அட்டூழியத்தை முடித்து மக்களைக் காப்பாற்றவுமே இராவணனை வதம் செய்தார் ஸ்ரீ ராமர். ஸ்ரீராமபிரான் இராவணனை வதம் செய்த காரணத்திற்காக பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்தார்.
எனவே பிரம்மாவால் படைக்கப்பட்ட மனித உயிர்களைக் கொலை செய்பவர்கள் (கொலைக்கு எந்த காரணம் இருந்தாலும் பிரம்மஹத்தி தோஷத்தை அடைகிறார்கள்.
பிரம்மஹத்தி தியோஷத்தை அடைந்த ஸ்ரீராமபிரான் அந்த தோஷத்தைக் கழிக்க வேண்டும் என்று அதற்கான இடத்தைத் தேர்வு செய்தார். பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க கூடியவர்கள் நவகிரகங்களே என்பதை மனதிற்குள் தெளிவு செய்தார். அதன்படி ஒரு கடற்கரைப் பகுதியில் மண்ணால் நவகிரகங்களையும் நிர்மாணம் செய்தார். அந்த நவகிரகங்களுக்கும் பரிகார பூஜை செய்து பிரம்மஹத்தி தோஷத்தை விலக்கிக் கொண்டு விண்ணுலகம் சென்றார் என்பதை இராமாயணம் வாயிலாக நாம் அறிகின்றோம்.
ஸ்ரீராமபிரான்,பிரம்மஹத்தி தியோஷத்தை விலக்கிக் கொண்ட இடம்தான் இன்று தேவிப்பட்டிணம் என்ற பெயருடன் விளங்கி வருகிறது. இராமேஸ்வரத்திற்கு அருகில் இந்தத் தலம் உள்ளது.
ஒருவர் கொலை பாதகச் செயலை எந்தச் சூழ்நிலையில் செய்தாலும், அவரும் அவர் சந்ததியினரும் பிரம்மஹத்தி தோஷத்தை அடைவார்கள். நமது முன்னோர்கள் செயலால் நமக்கு பிரம்மஹத்தி தோஷம் உள்ளதா என்ற விவரத்தை நமது ஜாதகத்தை ஆய்வு செய்தாலே தெரிந்துகொள்ளலாம்.
ஒரு ஜாதகத்தில் சனி பகவான் குருவுடன் இணைந்தாலோ, குருபகவான் சனி பகவானுடன் இணைந்தாலோ, இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ, சமசப்தமப் பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்துள்ளார் என்பதி அறியலாம். இந்த விவரம் உங்கள் ஜாதகத்தில் உள்ளதா என்பதை நல்ல ஜோதிடரிடம் காட்டித் தெரிந்து கொள்ளவேண்டும்.
இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. காலதாமதத் திருமணம் காலதாமத புத்திர பாக்கியம், தீராத கடன் தொல்லை. கல்வித்தடை,சரியான வேலைவாய்ப்பின்மை அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தாலும் போதிய சம்பளம் கிடைக்காத நிலை கனவுத் தொல்லைகள் தாங்கள் நடத்தி வரும் தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்து வரும்.
இது போன்ற நிலையில் பிரம்மஹத்தி தோஷம் விலகப் பரிகாரம் செய்து வாழ்வை வளமாக்கலாம்.
பரிகாரம்:
ஏற்கெனவே சொல்லப்பட்டது போல் குரு பகவான் சனி பகவான் இணைவை அறிந்து, ஸ்ரீராமபிரான் பிரம்மஹத்திதோஷத்தை நிவர்த்தி செய்து கொண்ட தேவிப்பட்டிணம் சென்று நவகிரகங்களூக்கு பரிகாரம் செய்து நன்மையடையலாம். ஆனால் இதற்கு செலவு கூடுதலாகும். ஏழை, எளியவர்கள் செய்வது கடினம். வசதியுள்ளவர்கள் தெவிப்பட்டிணம் சென்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.
.