Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

வாஸ்து குறைபாடு நீங்க – திருப்புகலூர்.

Published On: 4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

வாஸ்து குறைகள் நீங்க, ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான வழிமுறைகளைக் கையாளுகின்றனர். ஆனால்  எத்தகைய குறை இருந்தாலும் அவை அனைத்தையும் எளிய முறையில் நீக்கும் தலமாக திருப்புகலூர் திகழ்கின்றது. திருவாரூரில் தன் மனைவி பரவையுடன் வாழ்ந்து வந்த  சுந்தரரிடம் பரவையார் பொன் வேண்டும் என்று கேட்டார். உடனே சுந்தரருக்கு திருப்புகலூர் சென்ற சுந்தரர் சிவபெருமானைத் தரிசனம்  செய்து, அன்றிரவு கோவில் மண்டபத்தில் தங்க முடிவு செய்தார். அங்கே தலைக்கு தலையணையாக பொருளை தேடிய போது, சில செங்கற்கள் கிடந்தன. அவற்றில் சிலவற்றைக் கொண்டு வந்து அவற்றையே தனது தலையணையாக வைத்தபடி உறங்கினார். மறு நாள் காலை அவர் கண்ட காட்சி அவரை வியப்படையச் செய்தது. அவர் தலையணையாக வைத்துப் படுத்த செங்கற்கள் பொன்கற்களாக மாறியிருந்தன. அன்று முதல் இந்தக் கோவில் வீடு கட்டுவோர் கட்டிய வீட்டில் குறை உள்ளவர்கள், அலுவலகம் கட்டுவோர், புதிய தொழிற்கூடம் கட்டுவோர் எனப் பலரும் இங்கிருந்து ஒரு சில செங்கற்களை  வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதாவது இக்கோவிலில் செங்கலைக் கொடுத்து பூஜை செய்து அதை தங்கள் கட்டுமானத்தில் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதன் மூலம் எத்தகைய வாஸ்து கோளாறுகள் இருந்தாலும் அவை  அனைத்தும் நீங்கி விடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. ஏற்கனவே உள்ள கட்டிடங்களில் குறை இருக்கும் நிலையில் இங்கு பூஜை செய்த செங்கற்களைத் தங்கள்  பூஜை அறையில் வைப்பதன் மூலமும் வாஸ்து கோளாறுகள் நீங்கி விடும் என்றும் கூறுகிறார்கள்.

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter