Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

You're currently on:

விதியை மாற்றும் பெருமாள் – திருப்பட்டூர்.

Published On: 4/24/2015  |  தோஷம் & பரிகாரம்

 

     பிரம்ம தேவர் ஐந்து  தலையுடன் இருந்ததால்  தான், தான் முதல்வன் என்ற அகம்பாவத்தினால் கர்வம்  கொண்டு  இருந்தார்.  இதனால் சிவபெருமான் கடும்  கோபம் கொண்டு   பிரம்ம தேவரின் ஒரு சிரசை கொய்தார். பிரம்ம தேவரின் தலையைக் கொய்த்தால் சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோசம் நீங்கவும், பிரம்மாவின் கபால ஓடு ஈஸ்வரனின் கையில் ஒட்டிக்கொண்டதால் உண்டான பசிப்பிணியைப் போக்கவும், கபால ஓடு தன் கையை விட்டு அகலவும் இத்தல புருசொத்தமரை (ஸ்ரீவரதராஜப்பெருமாள்) அணுகி வழிமுறையையும், விதிமுறையையும் கேட்டு அதனைப் பின்பற்றி தன் பசிப்பிணியை நீக்கி, கபால ஓடும் நீங்கப்  பெற்றதால் இத்தலப் பெருமான் விதியை மாற்றும் பெருமானாக வீற்றிருக்கிறார். இப்பெருமாளை தரிசித்தால் திருமண பாக்கியம்,  புத்திர பாக்கியம் இழந்த செல்வம், கல்விச் செல்வம், வாராக்கடன், கடன் நிவர்த்தி, தொழில் அபிவிருத்தி, சகல வியாதி நிவர்த்தியர்த்தம் வழங்குவதாக ஐதீகம் இத்தல பெருமாளுக்கு  நல்லெண்ணெய் காப்பு  சாற்றினால், உச்சி குளிர்ந்து அனுக்கிரகம் செய்வதுடன் சகல  தோசங்களையும் நிவர்த்தி செய்வதுடன் சகல செளபாக்கியமும் சகல ஐஸ்வர்யமும் வழங்குவது இத்தலத்தின் பெருமை.

    வழித்தடம்:  திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் வட்டம், இருங்களூர் வழி, திருப்பட்டூர் உள்ளது.

« Back
About Us

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter