ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்
Phone : 9500326541
Email : info@yourastrology.co.in

  • Welcome Guest
2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் Cell No: 91-9500326541 Email : info@yourastrology.co.in
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014-2017

சனிப்பெயர்ச்சி பலன்கள்

வணக்கம் YOURASTROLOGY. CO.IN உங்களை அன்புடன் வரவேற்கிறது.
2014 முதல் 2017 வரையான சனிப்பெயர்ச்சியைப் பற்றி முழுமையாக பார்க்க போகிறோம். சனிபகவான் வாக்கிய பஞ்சாங்க முறைப்படி நிகழும் ஐயவருடம் மார்கழிமாதம் 1ஆம் நாள் (16-12-2014) செவ்வாய்கிழமை ( சென்னை நேர முறைப்படி ) பிற்பகல் 2.44 மணிக்கு சனிபெயர்ச்சியாகிறார்.

இதுவரையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக துலாராசியிலே உச்சம் பெற்று சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும் சனிபகவான், இனி விருச்சிகராசியில் பிரவேசித்து அங்கு தன்னுடைய சஞ்சாரத்தை தொடங்கப் போகிறார். (விசாக நட்சத்திரம் 3ம் பாதத்திலிருந்து 4ம் பாதத்துக்கு செல்கிறார்) 4ம் பாதம் விருச்சிகராசியில் உள்ளது. இனி 12ராசிகாரர்களுக்கும் இந்த சனிப்பெயர்ச்சி எப்படி உள்ளது என்பதை பார்போம்.

சனிப்பெயர்ச்சி

சனிபகவான் பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். கிரகங்களிலேயே சனிபகவானுக்கு தான் அதிகபயம் அனைவருக்கும் இருக்கும். இவர் எல்லாருக்கும் நல்லதையும், கெட்டதையும் வாரி வழங்குவதில் வல்லவர். இவர் ஒரு நீதிபதியான கிரகம் என்றும் சொல்லலாம்.பணக்காரர், ஏழை, அறிவாளி, முட்டாள், நல்லவர், கெட்டவர் என்று பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் நல்ல பலன்களையும், கெட்டபலன்களையும் சரியாக வழங்குவார். அதன் அடிப்படையில் சனிபகவான் உங்களுக்கு ராசி மாறுகிறார் என்பதை பார்க்கலாம்.

வான மண்டலத்தில் சனிகிரகம் துலாராசியிலிருந்து விலகி விருச்சிகராசியில் பிரவேசிக்கிறார். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சனியின் பெயர்ச்சி எவ்விதமாக அமைகிறது என்பதையும் பார்போம்.  

மேஷராசிக்காரர்களுக்கு

       சனி களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில் இருந்து பெயர்ந்து, கஷ்ட ஸ்தானமான 8ம் இடத்திற்கு வருகிறார்.
( இதனால் கண்டச் சனியின் காலம் முடிந்து அஷ்டமத்து சனியின் காலம் தொடங்குகிறது. )

ரிஷப ராசிக்காரர்களுக்கு

      சனி 6ம் இடத்துப் பயணத்தை முடித்துக் கொண்டு, 7ம் இடத்துக்குச் செல்கிறார். இதனால் கண்டச் சனியின் காலம் ஆரம்பமாகிறது.

மிதுன ராசிக்காரர்களுக்கு

       சனிபகவான் புத்தி ஸ்தானமான 5ம் இடத்து சஞ்சாரத்தை நிறைவு செய்து, தான் வலிமை பெறக்கூடிய ஸ்தானமான 6ம் இடத்துக்கு வருகை தருகிறார்.

கடக ராசிக்காரர்களுக்கு

       சனி சுக ஸ்தானமான 4ம் இடத்திலிருந்து நகர்ந்து, புத்தி ஸ்தானமான 5ம் இடத்திற்கு வருகிறார். ( இதனால் அல்லலான அர்த்தாஷ்டமச் சனியின் காலம் முடிவடைந்துவிடுகிறது ).

சிம்ம ராசிக்காரர்களுக்கு

        சனி தைரிய ஜெய ஸ்தானமான 3ம் இடத்திலிருந்து மாறி, சுக ஸ்தானமான 4ம் இடத்திற்கு வருகிறார். ( இதனால் அவதியான அர்த்தாஷ்டமச் சனியின் காலம் ஆரம்பமாகிறது ).

கன்னி ராசிக்காரர்களுக்கு

         சனி குடும்ப ஸ்தானமான 2ம் இடத்திலிருந்து விடுபட்டு தைரிய ஜெய ஸ்தானமான 3ம் இடத்துற்கு வருகிறார். ( இதனால் உங்களுக்கு 7 ½ வருடங்களாக நடை பெற்றுக்கொண்டிருந்த 7 ½ ச் சனியின் 3ம் பகுதியான பாதச் சனி பகுதியுடன் 7 ½ ச் சனியின் முழுக் காலமும் முற்றிலுமாக முடிவடைந்து விடுகிறது.  

துலா ராசிக்காரர்களுக்கு

        சனி உங்கள் ஜென்ம ராசியிலிருந்து விலகி, குடும்ப ஸ்தானமான 2ம் இடத்திற்கு வருகிறார். ( இதனால் 7 ½ சனியின் நடுப்பகுதியான ஜென்மச் சனியின் காலம் முடிவடைந்து, அடுத்து 7 ½ ச் சனியின் 3ம் பகுதியான பாதச்சனியின் காலம் தொடங்குகிறது. ஆகவே, 7 ½ ச் சனியில் இன்னும் 2 ½ ஆண்டுகாலங்கள் மீதமுள்ளது.)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு

         சனி விரய ஸ்தானமான 12ம் இடத்தைவிட்டு நீங்கி, உங்களுடைய ஜென்ம ராசியிலேயே குடியேறுகிறார்.  (இதனால் ஏற்கனவே ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் 7 1/2ச் சனியின் முதல் பகுதியான விரயச் சனியின் காலம் முடிந்து, நடுப்பகுதியான ஜென்மச் சனியின் காலம் ஆரம்பமாகின்றது. எனவே 7 ½ ச் சனியில் இன்னும் 5ஆண்டுகாலம் மீதம் இருக்கிறது. )

தனுசு ராசிக்காரர்களுக்கு

        சனி லாபஸ்தானமான 11ம் இடத்திலிருந்து அகன்று, விரயஸ்தானமான 12ம் இடத்திற்கு வருகிறார்.  (இதனால் உங்களுக்கு 7 ½ சனியின் காலம் ஆரம்பமாகிறது. அதில் முதல் பகுதியான விரயச் சனியின் காலக்கட்டமும் தொடங்குகிறது. ) 

மகர ராசிக்காரர்களுக்கு

       சனி காரிய ஸ்தானமான 10ம் இடத்தில் இருந்து விடுபட்டு லாப ஸ்தானமான 11ம் இடத்திற்கு வருகை தருகிறார்.

கும்ப ராசிக்காரர்களுக்கு

       சனி பாக்கிய ஸ்தானமான 9ம் இடத்தில் இருந்து நகர்ந்து, காரிய ஸ்தானமான 10ம் இடத்திற்கு வந்து சேருகிறார். 

மீன ராசிக்காரர்களுக்கு

         சனி கஷ்டஸ்தானமான 8ம் இடத்தில் இருந்து விடுதலையாகி பாக்கிய ஸ்தானமான 9ம் இடத்துக்கு வருகிறார். (இதனால் உங்களுக்குக் கடுமையான அஷ்டமத்துச் சனியின் காலம் அடியோடு முடிவடைந்து விடுகிறது.) அவரவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியினால் என்னென்ன பலன்கள் நடக்கும் என்று விரிவாக  பார்க்கலாம். 

2011-aries-sanipeyarchi 2011-taurus-sanipeyarchi 2011-gemini-sanipeyarchi 2011-cancer-sanipeyarchi 2011-leo-sanipeyarchi 2011-virgo-sanipeyarchi
2011-libra-sanipeyarchi 2011-scorpio-sanipeyarchi 2011-sagittarius-sanipeyarchi 2011-capricorn-sanipeyarchi 2011-aquarius-sanipeyarchi 2011-pisces-sanipeyarchi 
Name :
Email :

Phone :

+

Question:

If You Enter Tamil , visit TamilEditor.org

 
 
?>