Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

கலைத் துறையில் வெற்றி பெற......

     இன்று இளைய தலைமுறையினரிடம் சினிமாவில் நடிக்க வேண்டும், பாட வேண்டும், இயக்குநராக வர வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது.

     ஒருவர் ஜாதகத்தில் லக்னம்  மேஷமாகி, லக்னத்துக்கு இரண்டாம் அதிபதி சுக்கிரனாகி, அந்த சுக்கிரன் மகர வீட்டில் அதாவது பத்தாமிடத்தில் அமர்ந்து சுபகிரகப் பார்வை  பெற்றால் அவர் பட இயக்குநராகவும் புகழ்மிக்க நடிகராகவும் வரமுடியும்.  அதேபோல ஒருவரது ஜாதகத்தில் புதனும் சுக்கிரனும் ஆட்சி, நட்பு பெற்று லக்னத்துக்கு 7ஆம் இடத்தில் அமர்ந்தால், அவர் நடிப்பில்  புகழ் பெற்று திரைப்படத் துறையில் அதிக வாய்ப்புகளைப் பெறலாம்.

   ஒருவரது ஜாதகத்தில் சனியும் புதனும் இணைந்து ஆட்சி, உச்சம், நட்பு பெற்றால் அவர் கர்நாடக இசையில் புகழ் பெறுவார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று சனி நட்பு பெற்றால்  அவருக்கு நாட்டியம் நன்றாக வரும், புகழ் பெறுவார். சினிமாவில்  புகழ் பெற்ற நடிகர், இயக்குநராக வரவேண்டும் என்றால் 7ஆவது வீட்டில் புதன், சுக்கிரன், ஆகிய கிரகங்கள் தனித்தோ  இணைந்தோ இருக்க வேண்டும்.

    சினிமாவில் புகழ் பெற விரும்புபவர்கள் தங்கள் ஜாதகத்தை நல்ல ஜோதிடரிடம் ஆய்வு செய்து, கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களை இளம் வயதிலையே செய்தால், 18 வயது முதல் கடைசி வரை  நாட்டியம், நாடகம், சினிமா போன்ற கலைத் துறைகளில்  சிறந்தவர்களாக வரலாம்.

      பரிகாரம் - 1

  சினிமாவில் வாய்ப்பு பெற முயற்சிக்கும்  ஆண், பெண் இருபாலருக்கும், சினிமாவில் தற்போது நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மேன்மேலும் புகழ் பெற உதவி புரியும் ஒரே கடவுள்  கிருஷ்ண பகவாந்தான். கிருஷ்ண அவதாரம் எடுத்த பெருமாள் தான்.

    ஒவ்வொரு மாதமும் வருகின்ற வளர்பிறை ஏகாதசி திதியில் தங்களது குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைத்துவிட்டு, கிருஷ்ண பகவான் அல்லது பெருமாள் ஆலயத்துக்கு காலை நேரத்தில் சென்று 108 சுற்றுகள் சுற்றி, சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்து வர வேண்டும். இதேபோல தொடர்ந்து மூன்று மாதங்களில் வரும் வளர்பிறை ஏகாதசி திதியில் தவறாமல் 108 சுற்றுகள் சுற்றி சூடம் ஏற்றி  தரிசனம் செய்து வரவேண்டும்.

      ஆலயத்தில் தீப தரிசனம் காணும்போது கண்களை மூடாமல், தீப ஒளியை உங்கள் கண்களுக்குக் கொண்டு வரவேண்டும். இவ்வாறு வழிபட்டால் மூன்றாவது மாத முடிவில் சினிமாவில் வாய்ப்பு தடையின்றிக் கிடைக்கும். முயற்சி வீணாகாது.

     பரிகாரம் - 2

     சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களும் நடித்துவிட்டு வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களும், ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்ய முடியாதவர்களும்  கீழுள்ள துதிகளைச் சொல்லி புதன் பகவானையும் சுக்கிர பகவானையும் தினசரி காலையில் வணங்கி வந்தால் சினிமாவில்  வாய்ப்பு  கிடைக்கும். இயல், இசை, நாடகத்தில் புகழ் பெற விரும்புபவர்களும் வணங்கினால் நிச்சயம் உயர்வு உண்டு.

 

        புதன் துதி

‘ப்ரியங்கு கலிகா ஸ்யாமம்

ரூபேனாப்ரதிமம் புதம்/

ஸெளம்யம் ஸெளம்ய குணோ பேதம்

 தம் புதம் ப்ரணமாம் யஹம்//’

 

            சுக்கிரன் துதி

‘ஹிமகுந்த ம்ருணா லாபம்

தைத்யா நாம் பரமம் குரும்/

ஸ்ர்வ ஸாஸ்த்ர ப்ரவக்தாரம்

பார்கவம் ப்ரணமாம யஹம்//’

   மேற்கண்ட சுலோகங்களை தினசரி காலையில் ஒரே நேரத்தில்  ஒன்பது முறை சொல்ல வேண்டும்.

வாழ்க வளமுடன்

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter