Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

தொழில்  மேன்மை,  லாபம் பெருக செய்ய வேண்டிய பரிகாரங்கள்

  

   ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஆம் வீட்டில்  அமர்ந்துள்ள கிரகம் அதற்கு தகுந்தாற்போல் லாபத்தை சுட்டித் தரும். முற்பிறவியில் நல்லசெயல்களைச் செய்தவர்கள் 11ம் இடத்தில் கிரகம் இருக்கப் பிறப்பார்கள்.

       11ல் சூரியன் இருக்கப் பெற்றவர்கள் தந்தைவழித் தொழில்கள் மூலம் லாபம் பெறுவார்கள். உயர் பதவியையும் வகிப்பார்கள்.

     11ல் சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள் வாகன  சுகபோக வாழ்வோடு வாழ்வார்கள். ஆண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு பெண்களால் சொத்துக்கள்  குவியும்.

  11ல் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்கள்  துணிச்சல் உள்ளவர்கள். பல வழிகளிலும் பொருள் கிடைக்கும். நினைத்த  மிகப் பெரிய எண்ணங்கள் கைகூடும். சொந்த நிலமும் வீடுகளும் அமையும்.

   11ல் புதன் இருக்கப் பிறந்தவர்களுக்கு மன வளமும் அறிவு வளமும் பெருகும். மாமேதையாக விளங்குவார்கள். பொறியியல் நிர்வாகம், ஆடிட்டர் துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

  11ல் குரு இருக்கப் பிறந்தவர்கள், ஆன்மிகத் துறையில் ஈடுபாடு கொள்வார்கள். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். செல்வச் சீமானாக விளங்குவார்கள்.

  11ல் சுக்கிரன் இருக்கப் பிறந்தவர்கள் பெரும்பகுதி ஊர் சுற்றி வியாபாரத்தைப் பெருக்குவார்கள். நாகரிக வஸ்துகள், வாசனைத் திரவியங்கள் விற்றுப் பொருளீட்டுவார்கள்.

    11ல் சனி இருக்கப் பிறந்தவர்கள் பல ஆட்களை வேலைக்கு அமர்த்தி தொழில் செய்வார்கள். கட்டடம், கான்ட்ராக்ட் தொழில்கள் கை கொடுக்கும்.

 11ல் ராகு இருக்கப் பிறந்தவர்கள் ராணுவத் துறைக்குச் சென்று பொருளீட்டுவார்கள். அயல்நாடு சென்று பொருட்களை வாங்கி விற்பனை செய்வதன் மூலம் லாபம் பெறுவார்கள்.

 11ல் கேது இருக்கப் பிறந்தவர்கள் திடீர் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். ஏழையாகப் பிறந்தவரும் திடீர் லாபத்தைப்  பெறுவார்கள்.  தர்மகாரியம் செய்வார்கள். அன்ன சத்திரம் துவங்குவார்கள்.

    மேற்கண்டவாறு 11ஆம் இடத்தில் கிரகங்கள்  இருக்கப் பிறக்காதவர்கள் லாபம் ஈட்ட முடியாது என்பதில்லை. நவகிரகங்களினால்தான் லாபம் பெற முடியும் என்பதை உணர்ந்து, வாழ்நாள் முழுவதும் தவறாமல் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து வந்தால்  பொருள் வளம் நாளுக்கு நாள் கூடும். வறுமை நீங்கும்.

                      பரிகாரம் - 1

  ‘ஓம்  ஹ்ரீம் ஆதித்யாயச

  சோமாய மங்களாய  புதாயச குரு

  சுக்கிர சனிப்பயச்ச ராகவே கேதவே நமஹ’

 என்னும் மந்திரத்தையோ அல்லது ‘ஞாயிறு ,திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு- கேது நவகிரக சகாய நமஹ’ என்றோ  தினசரி  காலையில் 16 முறை சொல்லி வணங்குபவர்களுக்கு  லாபம் பெருகும். வறுமை, பிணி, பகை நீங்கி மேன்மையடைவர்.

                            பரிகாரம் - 2

   நமசிவாய நமஹ’ என்னும் மந்திரத்தை தினசரி 108 முறை சொல்பவர்களுக்கும் அல்லது தினசரி 108 முறை எழுதுபவர்களுக்கும்  லாபம்  பெருகும். இன்று வாழ்வில் வசதி  இல்லாவிட்டாலும் மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்த 90 நாட்களிலிருந்து படிப்படியாக லாபம் பெருகும்.

 

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter