Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

மீனம்

குருப்பெயர்ச்சி பலன்கள்

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) 

             நீங்கள்  ஆவலோடு  எதிர்பார்த்துக்  கொண்டிருக்கும் குரு பெயா்ச்சி வந்துவிட்டது.  எங்களுக்கும் நல்ல நேரம் உண்டா? நாலு  பேரைப்  போல் நாங்களும் சிரித்துக்  கொண்டு  வாழ்வோமா?  படும்   துயா் அனைத்தும் நீங்குமா?  கசந்த காலம் போய்  வசந்த காலம் வருமா? என்று மீன  ராசி    ராசிக்காரா்கள் மனதிலே குமுறிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த பல வருடங்களாகவே   அஷ்டம   சனியும்அஷ்டம குருவும் அடுத்தடுத்து  வந்து  மீன  ராசி  அன்பா்களை சொல்லொன்னா துன்பத்திற்கு ஆளாக்கிவிட்டது.   அத்தகைய   கடுமையான  துயரங்களை எல்லாம் சகித்துக்கொண்டு  மிகுந்த பொறுமையுடன் வாழ்ந்து  கொண்டிருக்கும் மீன  ராசியினருக்கும் உண்மையிலே நல்ல நேரம் வந்துவிட்டது.     பல வருடங்களுக்கு  பிறகு நல்ல கிரக அனமப்பு ஏற்படுகிறது. 

                 கடந்த   ஏழு  எட்டு  ஆண்டுகளாக நடைபெறாத விஷயங்கள்  எல்லாம் இப்போது  நடக்கும்.   நீண்ட நாட்களாக  தடைபட்டிருந்த திருமணம் இப்போது  நடந்து முடிந்துவிடும்.    வியாபாரத்திலே  முடங்கிப் போன   விஷயங்கள் எல்லாம் இப்போது விறுவிறுப் பாக நடைபெறும்.   வியாபார ரீதியாக ஏற்பட்ட நஷ்டங்கள் எல்லாம் இப்போது  ஈடு செய்யப்படும்.  ஏதேனும் காரணங்களுக்காக அலுவலகத்தில்   இருந்து நீங்கள் சஸ்பெண்ட்   செய்யப்பட்டு   இப்போது  மீண்டும்  பணியமா்த்தப்படுவீா்கள்.   உங்கள் மீது    நடைபெற்றுக்   கொண்டிருக்கும்   வழக்குகளிலும்   திடீா்  திருப்பம் ஏற்படும்.    நீங்கள் குற்றமற்றவா் என அறிக்கை வெளியாகும்.  

       அதன்    அடிப்படையில்   உங்களது   இடைக்கால பணிநீக்கம்  செய்யப்பட்ட உத்தரவை    திரும்பப்பெற்று   மீண்டும் பணியில் அமா்த்துவார்கள்,    நீங்கள்    வேலை  பார்த்த   நிறுவனத்தில்  நடைபெற்ற ஒரு   ஊழல்  தொடா்பான   வழக்கு   நடைபெற்றால் உங்களுக்கும் அதற்கும்   தொடா்பில்லை என நீதிமன்றம்   கூறிவிடும்.    உங்கள் மீது   போலியாக உருவாக்கப்பட்ட  குற்றச்சாட்டுக்கள்   என்று  நிருபணமாகும்.   நீங்கள் வியாபாரம் செய்து  கொண்டிருக்கும் இடத்தின்   உரிமையிலேயே    சட்டச் சிக்கல்  எற்பட்டால்  அது  தொடா்பான    விசாசாரணையிலே உங்கள்   பக்கம்  நியாயம்    இருக்கிறது   என்பது      நிரூபணமாகும்.    கூட்டாளிகளுடன்   சோ்ந்து  தொழில் நடத்துபவா்களுக்கு  பாட்னர்கள் மத்தியில் மனஸ்தாபம்  ஏற்பட்டு அது   தொடா்பாக  சட்ட ரீதியான நடவடிக்கைகள்  ஏதேனும்  எடுக்கப்பட்டிருந்தால்     இப்பொழுது    அவை     சுமுகமான முறையிலே பேசி தீா்வு  காணப்படும்.

 

         வியாபாரிகள்    யோகம்   உள்ளவர்கள் அதிஷ்டக்  காற்று   உங்கள்   பக்கம்  உள்ளது.  வியாபாரத்துக்கு சரக்கு  கிடைக்கவில்லையே  என்று   தேடி  அலைவீர்கள்.    அந்த அளவுக்கு   வாடிக்கையாளர்  கூட்டம்   அலைமோதும்.  அதிக  லாபமும்  கிடைத்தும்   புதிய வீடு  இடம்  வாங்க போட்ட திட்டம்  நிறைவேறும்.  சேமிப்பு  உயரும்.   ஒரு சிலரின்   புதிதாகக்  கிளை  துவங்கும் எண்ணம்  நிறை வேறும். உங்களுக்கு  எதிராகச்  செயல் பட்ட  போட்டி வியாபாரிகள்  விலகிச்  செல்வார்கள்.  எவ்வளவு   தான்  பணம்  வந்தாலும் நேரத்துக்கு உணவு   உண்ண வேண்டும். இந்தகலாகட்டத்தில் ஒருசிலர்  வயிற்று வலி  அல்சர்  தொந்தரவுகளை  அனுபவிப்பார்கள்.

 

          தொழிலதிபர்கள்   தங்கள்  நிறுவனத்தில்  பணி புரியும்  தொழிலாளர்களுடன் சமூக உறவு  கொள்வார்கள்.  தொழிலாளிகளும்  கூடுதல்  நேரம்   பணி  செய்து உற்பத்தியப்  பெருக்கித்  தருவார்கள்.  தொழிலதிபர்களும் தொழிலாளர்களின்  கோரிக்கைகளை  ஏற்பார்கள். தொழிலதிபர்கள் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் போது  அவர்கள் நல்லவர்களா   என்று ஆராய்ந்து சேர்க்க வேண்டும்.  வெளியிடங்களில்  புதிதாகக்  கிளைகள்  ஆரம்பிக்க போட்ட திட்டப்படி  தொழிற்சாலைகளை  அமைப்பீர்கள்.  ஒப்பந்த அடிப்படையில்  உள்ள பணியாளர்களின்  பணி  நிரந்தரமாகும்.

 

       பெண்கள்  இப்போது  புத்துணர்வு  செயல்படுவார்கள்.  பிறந்த வீட்டை மறந்து புகுந்த வீட்டு நன்மைகளை  பற்றி  மட்டும்  சிந்திப்பார்கள்.   உடன் பிறந்த சகோதரர்ளால்  அதிக உதவிகள்  கிடைக்காது.  உபத்திரங்கள் தான்  அதிகம்.  எனவே  உங்கள்  சகோதரர்களை பற்றி கணவரிடம் பேசாதீர்கள்.   வீண் சண்டைகள்  வாராமல்  தவிர்க்கலாம்.  கணவன் மனைவி  ஒற்றுமை சிறப்பாக உள்ளது.  திருமணம் ஆகாத பெணகளுக்குத்   திருமணம் நடக்கும். நல்ல வரங்களாக அமையும்.  குழந்தைபாக்கியமும்  கிட்டும். உயர்கல்விக்காகவெளிநாடு  செல்ல போட்ட திட்டம்  நிறைவேறும்.  பிரிந்த தம்பதியர்  ஒன்று சேர்வார்கள்.  உங்களை   விட்டுசென்ற மகன் இப்போது  உங்களைக்காண வருவார்.  இந்த  ஆண்டு அதிக மருத்துவர்  செலவுகள் வராது.

 

        எந்த பயிரைப் பயிரிட்டாலும் விளைச்சல்  அதிகமாகவே  இருக்கும்.  பணப்பயிர்கள்  உங்களுக்கு இரண்டு  வருட  லாபத்தை  ஒரே வருடத்தில் அள்ளித்  தரும்.  பிள்ளைகளுக்கு   வேண்டியதை  வாங்கிக்  கொடுப்பார்கள்.  வண்டி வாகனம்  வாங்கும்  எண்ணம்   ஈடேறும்.  வீட்டில் சுபகாரியப்  பேச்சுகள்.  கைகூடும்.  உங்கள்  வேளாண்மை  முன்னேற்றத்திற்காக அரசாங்கம் விருதுகளை  வழங்கும்.  நல்ல வரன்   அமைத்து  பிள்ளைகள் சுகமான வாழ்வு வாழ்வார்கள்.  மாடு, கன்று பால், பாக்கிய விருத்திகள்  மேலோங்கும்.  ஒரு சிலர் விவசாய பண்ணைகள்  அமைத்து பலனை அடைவார்கள். புதிய விவசாயக்  கருவிகளை வாங்க போட்ட திட்டம்  நிறைவேறும். 

        காலம்  அறித்து கல்வியைப்  படிப்பவர்கள்  நீங்கள்.  இந்த ஆண்டு கல்வியில்  உயர்நிலையை  அடைவீர்கள்.   ஆசிரியராலும்  கல்வி நிறுவத்தாலும்  பாராட்டப்படுவீர்கள்.   உயர் கல்வி பயில்கின்றவர்கள்  அரியஸ்  இல்லாமல்   பாஸ்  செய்வார்கள். வெளிவட்டார நண்பர்கள் உங்களுக்கு  உதவியாக  இருப்பார்கள் என்ற எண்ணத்தை கைவிட  வேண்டும்.  காதல்தான் உங்கள்  படிப்புக்கு  எதிரியாக விளங்கும். படிப்பும்  பாழாகி  வாழ்க்கையின்  எதிர்காலமுக் பாழாகிப்  போய்விடும்.  எனவே கல்வியில்  மட்டும்  கருத்தைச் செலுத்தி களிப்பான வாழ்க்கை வாழ வேண்டும்.  இந்த ஆண்டு கல்விக்கு ஒரு பொற்காலம் அதனை பயன்படுத்திக்  கொள்ள வேண்டும்.

பரிகாரம் :

                   சனிக்கிழமைதோறும் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். லக்ஷ்மிநரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தன்று தரிசனம் செய்ய வேண்டும். வியாழன்தோறும்

வியாழன்தோறும்  சிவபெருமானுக்கு   வில்வ அர்ச்சனை செய்ய வேண்டும்.

வாழ்க வளமுடன்  

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter