Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

மீன ராசி 

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

 வஞ்சகப் புகழ்ச்சியைக் கூட நெஞ்சகத்தில் ஏற்றுக் கொள்ளும் அற்புதமனம் படைத்த மீனராசி பாக்கியவான்களுக்கு குருவருளும் திருவருளும் நிறைந்திட வாழ்த்துகள்.

    எல்லோரிடமும் நல்லவர் என்று பெயர் எடுப்பீர்கள். தோற்றத்தில் கம்பீரம் கொண்டவர் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் எளிதில் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர் நீங்கள். அன்பால் காரியம் சாதித்துக் கொள்பவர்கள் நீங்கள். அடுத்தவர் மனம் புண்படாமல் பேசுவீர்கள். பொன், பொருளுக்கு ஆசைப்பட மாட்டீர்கள். எதிரிகளின் மனதை எளிதில் மாற்றி விடுவீர்கள். ராசியில் கடைசி ராசியாக இருந்தாலும் வளர்ச்சியில் முதல் ராசியாகக் காட்சியளிப்பீர்கள்.

    ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் சரிசமமாகப் பழகும் சுபாவமும், வியாபாரமானாலும் உத்தியோகமானாலும் வெறும் லாப நோக்கு மட்டுமில்லாமல் தர்ம நியாயத்தைக் கடைபிடிப்பீர்கள்.

    கடகராசிக்கு அதிபதி சந்திரன், மீனராசிக்காரர்களுக்கு சந்திரன் தன் சொந்த வீட்டிற்கு 9ல் குருவின் இல்லத்தில் அமர்ந்திருக்கின்றார். மீனத்திற்கு கடகம் 5ஆவது ராசி திரிகோண சம்மந்தம் ஏற்படுகிறது 7ஆம் இடம் கேந்திரம். குருதன் வீட்டிற்கு 7ல் ஏறி, தன் வீட்டிற்கு 9ல் ஏறியுள்ள சந்திரனைப் பார்க்க, திருமணம் ஆகாதவர்க்கு, அற்புதமான வாழ்க்கைத் துணை அமையும். திருமணம் ஆனவர்களுக்கு மக்கட்பேற்றினைக் கொடுக்கும். கணவன், மனைவி உறவு மேம்படும். கருத்துக்கள் இசைந்து போக, குடும்பப் பொருளாதார மேம்பாட்டிற்கும், குழந்தைகளின் நலத்திற்கும் இருவரும் பாடுபடுவர். சொந்த பந்தங்களின் வருகையும் அவர்களுடன் இனிய உறவும் ஏற்படும். மனைவி எண்ணத்திற்கேற்ப புதிய வீடு கட்டும் யோகம் ஏற்படும். ஜாதகத்திலும் தசாபுத்திகள், கிரக நிலைகள் நன்றாக இருந்தால் பருத்தி புடவையாய் காய்ந்து போலாகும்.

பெண்களுக்கு   உடன்பிறப்புகளின் ஆதாரவோடு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் நேரம். விரும்பிய வரன் கிடைக்கும். வரனைத் தொட்டு மதிப்பு, மரியாதை உயரும். படிக்கும் பெண்கள் தேர்வில் எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண் பெறுவர். படிக்கும்போதே சிலருக்கு நல்ல பணி அமையும். நல்ல ஊதியம் கிடைக்கும். வெளியூர் குடியேற்றாத்திற்கும் வழியுண்டு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கையுண்டு. மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாக இந்தப் பெயர்ச்சி அமைகிறது.  

மாணவர்களுக்கு   எதிர்பார்த்ததை விட இரட்டிப்பு லாபம் கிட்டும் காலம். ராசிக்கு பதினோராமிடமாகிய லாபஸ்தானத்தைக் குரு பார்க்க, நஷ்டம் என்று கருதியதும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். அனைவரும் அன்புடனும், மரியாதையோடும் அணுகும் அற்புதமான காலம். தொடர் தொண்டு செய்வதன் மூலம் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளலாம். பாராட்டுகள் குவியும். புதிய வாய்ப்புகள் தேடிவரும்.  

பரிகாரம்

   குருபெயர்ச்சியால் ஏற்படும் குறைகளைத் தவிர்ப்பதற்கு செய்ய வேண்டியதே பரிகாரம். இந்த ராசிக்காரர்களுக்கு பரிகாரம் தேவையில்லை என்றாலும், தசாபுத்திகளால் ஏற்படும் சிற்சில கஷ்டநஷ்டங்கள் தீர்ந்து, ஆயுள், ஆரோக்கிய, ஐஸ்வர்ய, சந்தான பாக்யங்களுடன் சந்தோஷமாக வாழ, அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று வியாழன் தோறும் வியாழபகவானை முல்லை மலர் சாத்தி தரிசனம் செய்து வருவது உத்தமம்.

வாழ்க வளமுடன்  

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter