Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

மீனம்

    பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், உதய லக்கினமான மீன லக்கினத்தில் பிறந்தவர்களும் குருபகவானை அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்கு உரியவர்கள்.

     இந்த ராசிக்காரர்களுக்கு லாபவிரய ஸ்தானாதிபதியாகிய சனிபகவான் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தசமஜீவன ஸ்தானம் என்று சொல்லப்படும் 10ம் இடத்தில் பிரவேசித்து அருள உள்ளார். ஜீவன ஜென்மாதிபதியாகிய குருபகவான் தற்போது அஷ்டமஸ்தானம் என்று சொல்லபப்டும் 8ம் இடத்தில் இருந்து வருகிறார். வருகின்ற ஆண்டுகளில் 9 மற்றும் 10 இடங்களில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.

        வித்தியாசமான புத்தி கூர்மையையும், ஆளுமை ஆட்சி குணம், மெல்லிய குரலில் இனிமை கலந்த எளிமையான பேச்சுக்கு சொந்தக்காரர்களாக இந்த ராசிக்காரர்கள் இருப்பார்கள். பயந்த சுபாவம்போல் தோற்றமளித்தாலும் இடத்திற்கு தக்கபடி பேசுவார்கள். கழுவிகின்ற மீனில் நழுவுகின்ற மீனாக தப்பு செய்து விட்டு மாட்டிக்கொள்ளாமல் பேசி சமாளிப்பார்கள். எதிர்காலத்தை பற்றிய பெரிய சிந்தனை இல்லாவிட்டாலும் நம்பிக்கையோடு முன்னேறுவார்கள். பொறுமை, சந்தேகம், மறதிகுணம் இவர்களுக்கு உண்டு. பிறருக்கு ஓடி ஓடி  உதவி செய்தாலும், இவர்கள் அழைப்புக்கு மற்றவர்கள் செவி சாய்க்க மாட்டார்கள். இப்படி  பல பெருமைகளுக்கு  சொந்தக்காரரான மீன  ராசிக்காரர்களே கடந்த 2 1/2 ஆண்டுகள் பாக்கிய சனியினால் கொண்டாடி இருப்பீர்கள். அஷ்டம சனியின் காலத்திற்கு பிறகு 9ம் இட சனிபகவான் கேட்ட வரங்களை கொடுத்து சந்தோஷப்படுத்தி,  சுபநிகழ்ச்சிகளை நடத்திக்கொடுத்து, சந்தோஷ தருணங்களாவே கடந்த ஆண்டுகள் இருந்து இருக்கும். இன்னும் சிலர் வீடு விஸ்தரிப்பு செய்து வசதியாக மாற்றி இருப்பார்கள். புத்திரப்பாக்கியம், ஆபரணசேர்க்கை, புதிய வாகனம், ஆடம்பரபொருட்கள், உத்தியோக உயர்வு, சம்பள உயர்வு, வியாபார விஸ்தரிப்பு, தொழில் அபிவிருத்தி, தீர்த்த ஸ்தல யாத்திரை என பட்டியல் நிண்டு கொண்டே போகும்.

   நீங்கள் சிரித்த பூரித்த முகத்துடன் ஒத்துக் கொண்டு தான் ஆகா வேண்டும். இந்த முன்னேற்றம் அனைத்தையும்  சனிபகவான் அருளால் கிடைத்திருக்கும். இருப்பினும் இந்த சனிப்பெயர்ச்சியானது, முன்னால் இருந்த அளவுக்கு வேகமாக முன்னேற்றமும் கிடைக்காது. இந்த ஜீவனசனி சுமாராக இருக்கும்.

       மேலும் உங்கள் ராசிநாதன்  அஷ்டம குருவாக எட்டாமிடத்தில் இருந்து வருகிறார். குருவின் பார்வை கோடி விஷேசம். அப்படி பார்த்தால் 12,2 மற்றும் 4ம் இடத்தை பார்க்கிறார். 2ம் இட  பார்வையால் குடும்ப தேவைகள் நிச்சயம் ஓரளவுக்கு பூர்த்தியாகும் என்று சொல்லலாம். 12ம் இட  பார்வை மற்றும் 4ம் இட  பார்வை, உங்கள் வித்தை சமயத்தில்  கை  கொடுக்கும். இதுவரை பழைய வாகனத்தை வாங்கி திண்டாடியவர்கள் புதிய வாகனம் வாங்கும்  யோகம் ஏற்படும். வீடு விஸ்தரிப்பு செய்யும் வாய்ப்பும் உண்டு. உடல் உபாதைகள்  என்று பார்த்தால் அஜீரண  கோளாறு, கேஸ் பிராபலம் போன்றவைகள் வரலாம்.

       மேலும் தற்போது ராகுபகவான் 5ம் இடத்தில் கேதுபகவான், 11ம் இடத்தில் இருந்து அருள்புரிந்து வருகிறார். 5ம் இடத்தின் ராகு, பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் சொத்து தொடர்பான பிரச்சனைகள் விலகும். 11ம் இட  கேதுவினால் வெளிநாட்டு சகோதர, சகோதரிகளின் உதவி கிடைக்கும். வெளிநாட்டில் பணி  புரிவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஒரு முக்கிய அம்சமாக சனீஸ்வர பகவானின் பார்வை 4,7 மற்றும் 12 ஆகிய ஸ்தானங்களில் பாதிக்கின்றது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று விதிகளை நீங்களே அமைத்து நேர்வழியில் செல்லும் உங்களுக்கு இந்த அமைப்பு ஓரளவுக்கு மட்டுமே உதவியாக இருக்கும்.

       குடும்பத்தில் முன்பு இருந்த இணக்கம் குறையும். கணவன் சொல்வது தவறு என்று மனைவியும், மனைவி சொல்வது தவறு என்று  கணவனும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை சொல்வார்கள். வாக்குவாதம் வந்தாலும் இறுதி  வெற்றி உங்களுக்குத்தான். சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்று அனைவரையும் நீங்கள் அறிவுறுத்தினால் அனைவரின்  சொல்லுக்கு ஆளாக நேரிடும்.

    தொழிலில் இணைந்திருந்தவர், இனி பிரிந்து பகை உணர்வோடு செயல்புரிவார்கள். உங்கள் நிலை புரியாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பண உதவி கேட்பார்கள். இல்லையென்று சொன்னால் வீட்டிற்கே வரமாட்டார்கள். இதை எப்படி சமாளிப்பது என்று குழப்பம் அடைவீர்கள். வேலையில் உள்ளவர்கள் கடினமான உழைத்தாலும் நல்ல பெயரை வாங்க முடியாது. நீங்கள் செய்த காரியங்களுக்கு வேறு  நபர் பாராட்டுகளைப் பெறுவார்கள். உடல்நலம் நீங்கள் சொல்வதை கேட்காது.

      சிலருக்கு உடல் சோர்வு, மனசோர்வு மற்றும் எதிலும் ஆர்வம் இல்லாத சூழ்நிலை ஏற்படும். வாகனபழுதை ஏற்படுத்தும். சந்தோஷத்தையும் வெளிப்படுத்த முடியாது. துக்கத்தையும். பிறரிடம் சொல்லி ஆறுதல் அடைய முடியாது. அவ்வாறு சொன்னால் உங்கள் அறியாமை வெளிப்பட்டு விடும். எதை செய்வது, எதை விடுவது என்று ஆலோசனைகள் கேட்கவும், அறிவுரைகளை கேட்கவும் மனம் விரும்பாத நிலை ஏற்படும். ஜிவன சனி என்பது தொழில் ஸ்தானத்தை பாதிக்கும் என்பது பொது விதி. புதிய தொழில்கள் தொடங்க ஆசைப்படுவார்கள். புதிய வியாபாரம் செய்ய விரும்புவார்கள். அவற்றை சிறிது காலம் தள்ளி போடுவது நல்லது. பொருளாதார சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாமல்செலவு காத்து கொண்டு இருக்கும். கணவன், மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குடும்பத்தில் பெண்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கும். நெருங்கிய உறவினர்களின் வருகையும் வெறுப்பைக் கொடுக்கும். சில சமயங்களில் உறவினர்களின்  கருத்தை ஏற்பதில் விவாதமும், சண்டையும் போட வேண்டி வரும். மனம் சோர்வு அடையும்.

     வருகின்ற 4.10.2018 குருபகவான் பாக்கிய ஸ்தானம் என்று சொல்லப்படும் ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். குடும்ப சூழ்நிலைகள் மகிழ்ச்சியாக மாறும். திருமண தடை நீங்கி நல்ல வரன்கள் கிடைக்கப்பெறுவீர்கள். விரும்பியபடி நடைபெறும். தம்பதிகள் பிள்ளைச் செல்வத்தை பெறுவார்கள். ஜீவன சனியின் தாக்கமும் சற்று குறைந்து கூட்டாளிகளால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவி இடையே கருத்தொற்றுமை ஏற்படும்.

       உத்தியோகத்தில் இருந்த வேலை சுமை குறையும். தடைபட்ட பதவியும் வந்து சேரும். வியாபாரத்தில் இருந்து வந்த  போட்டி பூசல்கள் விலகும். சற்று விரிவுப்படுத்தி லாபத்தை பெறுவார்கள். பழைய கடன்கள் குறையும். அரசாங்க ரீதியாக இருந்த சிக்கல்கள், வழக்குகள் நீங்கும். பொருளாதாரம் மேம்பட்டு  வளர்ச்சியை நோக்கி பயணிக்கும். விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சல்கள் ஏற்றத்தை உண்டாக்கும். தாயின் உடல்நிலையில்  ஆரோக்கியம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் உண்டு. மாணவர்கள் நல்ல  மதிப்பெண்கள் பெற்று பாராட்டை பெறுவார்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளும், ரசிகர்களின் ஆதரவும் புகழை கூட்டும். அரசியல்வாதிகளுக்கு புதிய திருப்பங்கள் திருப்தியை கொடுக்கும். பதவியை குறிவைத்து உடனிருந்து குழிபறித்தவர்கள் விலகுவார்கள். வழக்கில் சாதகப் போக்கும், வெற்றியும் கிட்டும்.

      வருகின்ற 13.2.2019 முதல் ஆரோக்கிய காரகனான ராகுபகவான் 4ம் இடத்திலும், கேதுபகவான் 10ம் இடத்திலும் சஞ்சாரம்  செய்ய உள்ளார்கள். 4ம் இடத்தில் ராகு சஞ்சாரம் செய்வதால் புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்கள் எதிர்பார்த்தபடி மாற்றத்தை பெறுவார்கள். வியாபார முன்னேற்றத்திற்கும், புதிய  பொருட்களை வாங்கவும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்ய வேண்டும். அலைச்சலும், அலைக்கழிப்பும் இருந்தாலும் லாபம் இருக்கும். சில சமயம் பூச்சிக்கடி, தேள் கடி போன்றவற்றை பெற நேரும். அடைசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். திடீர் ஆடம்பர செலவுகள் செய்து பின்பு செலவை குறைத்து இருந்து இருக்கலாம் என்று யோசிப்பீர்கள். சிலருக்கு வெளிநாட்டில் புதிய உத்யோக வாய்ப்பு கிடைக்கும்.

      10ம் இடத்தில் கேதுவின் சஞ்சாரம் சில குழப்பங்களை உண்டு பண்ணும். கேதுவும், சனியும் இணைந்து இருப்பதால் தொழிலை விட்டு வேறு தொழில் தொடங்க மனம் விரும்பும், தகப்பனாருக்கு உடல் உபாதைகள், ஆரோக்கிய கேடும் வரலாம். கொடுக்கல், வாங்கலில் புதிய சிக்கல் ஏற்படும். பரிவர்த்தனைகள் அனைத்தும் எழுத்து மூலமாக இருப்பது நன்மையை தரும். தவறான நபர்களின் நட்பு அவப்பெயரை ஏற்படுத்தும். அரசு முறை அரசியல்வாதிகள் மனசாட்ச்சிக்கு விரோதமாக அதிகாரம் செய்ய நேரிடும். நண்பர்களும், உறவினர்களும் அன்பு குறைந்து போலித்தனமாக அந்நியோன்யம் இல்லாமல் பாராமுகமாக இருப்பார்கள். பிள்ளைகளின் தவறு கண்ணுக்கு தெரிந்தும் கண்டித்து திருத்தமுடியாது. இதனால் இனம் புரியாத சோகம் தோன்றும்.

      வருகின்ற 29.10.2019 முதல் சனி கேதுவோடு கூட உங்கள் ராசிநாதன் குருபகவானும் 10ம் இடத்தில் சங்கமிக்கிறார். இவ்வாறு ஒரே இடத்தில் சங்கமம் ஆவது சில சங்கடங்களையும் ஏற்படுத்தும். 10ம் இடத்தில் அந்தணர் வருகையால் உங்கள் கணிப்புகள் மாறுதலாக இருக்கும். உண்மையே சொன்னாலும் பொருட்படுத்தாமல்  உதாசீனம் செய்வார்கள். பல பிரச்சனைகள் வெளி உலகுக்கு தெரியாமல் பார்த்து கொண்டு வந்த  நீங்கள் இனி அந்த நிலையை தொடர முடியாது. வர வேண்டிய பணத்தை கூட வாங்க முடியாது. கொடுக்கல் வாங்கல்  விஷயத்தில் தகுந்த கணக்குகளை எழுதி வைப்பது நல்லது. சிக்கல்கள் மற்றும் குளறுபடிகள் நடக்கலாம். சிபாரிசு செய்வது, ஜாமீன் போடுவதை தவிர்ப்பது நல்லது.  கடந்த ஆண்டு திருமணம் முடிந்தவர்கள் சின்ன சின்ன  குடும்ப பிரச்சனைகள் பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும். குடும்ப அங்கத்தினர் பெற்றோர்கள், நண்பரிகளிடம் கோபமாக பேசாதீர்கள். இல்லையேல் வீண் சண்டை ஏற்படுவதோடு, சாபத்திற்கு ஆளாவீர்கள். வீட்டுக் கொடுத்து செல்லுங்கள் மகிழ்ச்சியோடு  இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே சிறு ஊடலும், பின் கூடலும் ஏற்படும். வெளி பிரச்சனைகள் வாசலிலேயே வீசி விட்டு வீட்டில் அடியெடுத்து வையுங்கள். இரவு பிரயாணத்தை தவிர்ப்பது நல்லது. சிறு சிறு விபத்துகள், சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.

     மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. அரசியல் துறையினர் அமைதியுடன் இருப்பது உங்கள் திறமையை மேம்படுத்தும். கலைத்துறையினர் கவனமாக படப்பிடிப்பில் ஈடுபட வேண்டும். தகுந்த பாதுகாப்பு உபகரணத்தை பயன்படுத்துவது நல்லது. விவசாயிகள் புதிய முறையை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் செய்ய வேண்டாம். பழைய முறையே தற்போது பலன் கொடுக்கும். மொத்தத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்  என்றே சொல்ல வேண்டும்.

        வருகின்ற 27.12.2020 முதல் சனிபகவான் தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். அதாவது உங்களுக்கு  பல வகையில் லாபத்தை தரப்போகும் 11ம் இடமாகும். அதில் இருந்து சுமார் 3 ஆண்டுகள் போர்க்களமாக அமையும். இந்த இக்கட்டான காலகட்டத்தை இறை வழிபாடு மூலமாக நிச்சயம் மாற்ற முடியும். சூது வாது தெரியாமல் அனைவரிடம் பழகி அன்பை பெற்ற உங்களுக்கு இந்த காலம் மிகப்பெரிய படிப்பினை ஆக அமையும். கவலை வேண்டாம். நல்ல காலத்தை வரவேற்க காத்திருங்கள். வேகமாக நாட்கள் ஓடி வரும். உங்களின் ராசிநாதனுக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள். பொதுவாக அனைத்து கிரஹ நிலைகளின் கோட்சார சஞ்சாரங்களை பார்க்கும்போது சுமார் 49% நன்மையான பலன்களும் 51% தீமையான பலன்களும் நடைபெறும்.

பரிகாரம்

   குலதெய்வ வழிபாடு அவசியம். திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.

வாழ்க வளமுடன்

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter