Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

You're currently on:

மீனம் 70%

    (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  அன்பான மீனராசி அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்எல்லோருக்கும் நன்மைசெய்யும் குணத்தால் நல்லவர் என்றுபெயர் பெற்ற உங்களுக்கு இந்த வருடம் தனவரவு கூடும். வெளிநாட்டுப் பயணங்களும் அமையலாம். குடும்பநலன் கூடும். சுபகாரிய யோகமும் உள்ளது. ஆன்மீகச்சுற்றுலா யாத்திரைகளும் அமையும்.

    கொஞ்சம் அலைச்சல், சின்னச்சின்ன ஏமாற்றாங்கள் வந்து போகும். சொந்த பந்தங்களால் அன்புத்தொல்லை அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள்.

     செய்தொழிலில் வெற்றி காணலாம். கொடுக்கல், வாங்கலில் குழப்பம் குறையும். இரும்பு, காகிதம் தொடர்பான தொழில் செய்வோர் கடன்சுமை குறையும். ஒருசிலருக்கு புதிய தொழில் மாற்றமும் அமையும். சகோதரவழியில் லாபம்கூடும். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் சுமாரான லாபம்தரும். அலுவலகப்பணிகள் விருத்தியாகும். குடும்பநலன் முன்னேற்றம் பொருளாதார மேன்மை பளிச்சிடும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். சுற்றத்தார், உறவினர் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். நீண்டநாட்களாக வாங்கவேண்டிய சொத்து ஒன்றுகைக்கு வந்துசேரும். பழைய கோர்ட்டு வழக்குகள் சாதகமாகும்.

    தடைகள் விலகும். சுபகாரியமுயற்சிகள் வெற்றிதரும். குழந்தைப்பேறும் கிடைக்கும். தாய்மாமன் வழியில் உதவிகள் அமையும். அலுவலகத்தில் உயர்பதவிகள் தானாக தேடிவரும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். மேல்நாட்டு படப்பிடிப்பு வாய்ப்புகளும் அமையும். விருந்து,விழா என தொடர்ந்து சென்று வருவீர்கள். கடன்சுமை குறையும். வாகனயோகம் கூடும்.

     பழைய கடன்கள் அடைபடும். யாரிடமும் கோபம் கொள்ளவேண்டாம். பேச்சில் பெரிதும் நிதானம் தேவை. விவசாயத்தில் இயற்கையும் தங்களுக்கு ஒத்துழைப்பு தரும். வாகன வசதிகள் பெருகும். பிள்ளைகள் வழியில் முன்னேற்றம் கூடும்.  

     தலைமை பொறுப்புகள் தானாக தேடிவரும். எதிரிகள் கூட உங்களைப்பார்த்து பாராட்டுவார்கள். குடும்ப நலன்கூடும். பிள்ளைகளுக்கு திருமண யோகமும் கைகூடும். சொல்வாக்கும் கூடும். வண்டி, வாகனங்களில் கவனமுடன் பயணம் செய்யவும். எல்லாவகையிலும் தேர்ச்சியும், வெற்றியும் காண்பீர்கள். பெற்றோர், பெரியோர் மற்றும் ஆசிரியர்கள் ஆதரவும், ஆசிகளும் கிடைக்கும். சகநண்பர்கள் வழியில் செல்போன் வழியில் கூடுதல்கவனம் தேவை. உடல்நலன் சீராகும்.

பரிகாரம்

    மாரியம்மன் கோவிலுக்கு பௌர்ணமி தோறும் சென்று வழிபட்டு வரவும்.

ஜீவசமாதி கோயில்களுக்கு அமாவாசை தோறும் சென்று வழிபட்டு வரவும்.

புதன்கிழமை தோறும் பசுமாட்டிற்கு  வாழைப்பழம் கொடுத்துவரவும்.

About Us

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter