Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

தனுசு

குருப்பெயர்ச்சி பலன்கள்

(மூலம், புராடம், உத்திராடம் 1ம் பாதம்)  

  தனுசு ராசிக்கு அதிபதி குரு  1 , 4  ஆகிய   கேந்திர வீடுகளுக்கு அதிபதியாக விளங்கும் மிகப் பெரிய  சுபக்கிரகம் வியாழன்.  இதுவரை   உங்கள்  ராசிக்கு  11-ஆம்  இடமான துலாமில்

சஞ்சரித்து  கொண்டிருந்த குரு அக்டோபா 4- ஆம்  தேதியன்று  12-ஆம்  இடமாகிய விருச்சிகத்திற்குள் வருகிறது,.  12-ஆம் இடம்   என்பது  மறைவு  ஸ்தானம் ராசி  அதிபதியும் சுபக்கிரகமுமான  குரு அங்கு  மறைவது நல்லதல்ல  அடுத்த ஒரு  வருட  காலம்  உங்களுக்குத்   சோதனையான நேரம் என்பது   கசப்பான உண்மை. இந்த குருப் பெயா்ச்சி பலன்களில் சொல்லப்படும்  பலன்கள் எல்லாமே கோச்சார     அடிப்படையில்  அமைந்துள்ளது.    ஒரு  மனிதனுக்கு    வாழ்க்கையில் நடைபெறகின்ற  விஷயங்களில் 25 சதவிகிதம் கோச்சார   அடிப்படையிலும் மீதமுள்ள 75 சதவிகிதம் அவரவா் ஜெனன கால ஜாதகத்தின் அடிப்படையிலும் , நடைபெறும்.  25 சதவீதமான கோ்சசாரம் இப்போது தனுசிற்கு சரியாக இல்லை,      ஆனால் தனி நபா் ஜாதகப்படி நல்ல தசாபுத்திகள் நடைபெற்றுக்    கொண்டிருந்தால்  இந்த குருப்பெயா்ச்சி  பற்றி   நீங்கள் கவலைப்பட வேண்டாம்   எத்தனையோ போ் தொடர்ந்து 30ஆண்டுகள் ராஜாவை போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை  குருப்  பெயா்ச்சி   வந்தாலும்,  சனிப் பெயா்ச்சி வந்தாலும்   சிலருடைய   வாழ்க்கை தரம்     குறைவதே   இல்லை.

           நல்ல  ஜாதகத்திலே  கிரகங்கள் வலுவாக இருக்கின்றன.    நல்ல  தசாபுத்திகள் நடைபெறகின்றன.    எனவே குரு  12-க்கு  வருகிறதே,  என்ன   செய்யுமோ  என்று பயப்பட    வேண்டாம்.  விரய   ஸ்தானமான 12-ஆம் இடத்திற்கு   குரு வந்தால் தொட்டதெல்லாம்  நஷ்டமாகும்  என்பது பொதுவான பலன் எனவே தனுசு ராசி அன்பா்கள் பண விஷயத்திலே வழக்கத்தைவிட  பல மடங்கு உஷாராக இருக்க  வேண்டும்.  எந்த நேரத்தில் எப்படி நஷ்டம் வரும் என்றே   தெரியாது.  வீண்   செலவுகளை   கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும்.  ஒருபுறம் பணம் வந்துகொண்டிருக்கும் , மறுபுறம்  ஓட்டை பானையில் தண்ணீா் நிரப்பியதுபோல  அது போய்க்கொண்டே  இருக்கும்.   அந்த   ஓட்டையை அடைப்பது  எப்படி என்பதுதான்  நீங்கள் கவனிக்க  வேண்டியது.

 

          12- ஆம் இடத்திற்கு குரு  வந்தால் பணம் விரயமாகும் என்பது பொதுவான விஷயம்  ஒருசிலருக்கு  வழக்குகளிலே தோல்வி ஏற்படும்.    மலைபோல்   நம்பிக் கொண்டிருக்கும் சில  முக்கியமான விஷயங்கள் காலை  வாரி  விட்டுவிடும்.   நமக்கு    கிடைக்க வேண்டிய   அசையாச் சொத்து  கைக்கு வராமல் வேற ஒருவருக்கு  போய்விடும்.   அவ்வாறு   நடந்தால் அதுவும்  விரயம்தானே.  ஐம்பது வயதை தாண்டி இருக்கக்  கூடிய   தனுசு   ராசியினருக்கு  ஆரோக்கியத்திலே குறைபாடு   ஏற்படலாம்,    பணம் நஷ்டமானால்கூட   சம்பாதித்துவிடலாம்.  ஆரோக்கியத்தல்  இழப்பு  ஏற்பட்டால்  அதை  எப்படி சரிசெய்ய  முடியும்.                                 இப்போது 12-ஆம்  இடத்திற்கு  வரப்போகும் குரு ஏற்படுத்தும்,   ஆனால்  ஜனன கால ஜாதகம் நடைபெறுமானால் அத்தகைய இழப்புகள் எதுவும் வராது.

              குருவின்  விருச்சிக ராசி சஞ்சார காலத்தில் பிற  கிரகங்களும் சாதகமாக இல்லை.   8- ஆம்  இடத்தில்   ராகுவும் 2-ஆம்  இடத்தில்   கேதுவும் 13.02.2019   அன்று பெயா்ச்சியாகி  ராகு 7-ஆம் இடமான   மிதுனத்திற்கும்  கேது  தனுசுராசிக்கும்    வருகிறது.    இது  பெரிய  யோகத்தைக் கொடுக்கக் கூடிய கிரக அமைப்பு    அல்ல,    இன்னும்  ஒன்றரை வருட  காலத்திற்கு தனுசு  ராசியில்தான் சனி இருக்கிறது  என்பதையும்  மறந்துவிட வேண்டாம். ஜென்ம சனி ஒருபுறம்   சனியோடு  சேரப்போகும்   கேது  ஒருபுறம் ,   இவை போதாது  என குருவும்  போய் மறைவு ஸ்தானத்திலே  அமரப்  போகிறது.

 

            தனுசு ராசியினருக்கு ஒரு  முக்கியமான அறிவுரை   தயவு  செய்து ஒரு ருபாய்கூட சட்டவிரோதமான   விதத்திலே  சம்பாதிக்க  ஆசைப்படாதீா்கள். பணப்பரிவர்த்தனை  முலமாக  பிரச்சினைகள்  ஏற்பட வாய்ப்பு  இருக்கிறது. அதிலும்  20..05.2019  முதல் 26.10.2019  வரையிலான காலகட்டத்தில்    நீதிமன்ற விசாரணையைும் நீங்கள்  எதிர்கொள்ள நேரிடலாம்.    மடியில் கனமிருந்தால்   தானே    வழியில்   பயம்   நமக்கென்ன? 

             அரசுப் பணியில்  உள்ள்வர் மிகவும்  எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.  மேலதிகாரிகளிடம்  மிகவும் ஒத்துப்போகின்ற  மனப் பக்குவம் வர வேண்டும். ஒரு  சிலருக்கு எதிர்பார்த்த  பதவி உயர்வும்  இடமாற்றமும் வருவதில்  தாமதம் ஆகும்.  இப்போது நீங்கள்  கடைப்பிடிக்கும் பொறுமையால்  உங்களுக்கு  ஆண்டு முடிவில் நன்மைகள்  வந்து  சேரும். கையூட்டுப்  பெறுகின்ற   அரசு ஊழியர்கள்  தங்களைத் திருத்திக்  கொள்ள வேண்டும்.  காவல் துறை நடவடிக்கை வரலாம்.

      கொள்முதல்  செய்வதை குறைத்துச் செய்ய வேண்டும்.  வியாபாரம்  மிகவும்மந்தமான நிலையில்இருக்கும்.  புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.  புதிதாகக் கிளை துவங்க போட்ட திட்டம் இழுபறியாகும்.  வண்டி வாகனங்களில்  பழுது வந்து நீங்கும். எதையும்  யோசித்துச் செய்ய வேண்டும்.

  தொழிலதிபதிர்கள்  புதிய தொழில் துவங்கிட எதிர்பார்த்த வங்கிக்கடன்  கிடைக்கும்.  அரசாங்க  சலுகைகளும் கிடைக்கும்.  தொழிலாளர்களிடையே ஒற்றுமைக்  குறைவு  ஏற்படும். கதவடைப்பு போன்ற நிலைகள் உருவாகலாகம்.. நீங்கள்  அவர்களுக்கு கொடுக்க வேண்டிய  சலுகைகளைக்  கொடுத்து விட வேண்டும்.  அதனால் உற்பத்தி  பெருகும்.  தொழிலாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.   குடும்பத்திலும் பிரச்சனை என்ற நிலை ஏற்படலாம்.  எனவே  தொழிலாளர்கள்  வேலை செய்வதை மட்டும் குறிக்கோளாகக்  கொள்ள வேண்டும்.  அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடக்கூடாது.

    தொழிற்கல்வி  பயில்பவர்கள்  புதிய ஆராய்ச்சிகளை  செய்து  வெற்றி  பெறுவார்கள்.  அவர்களது  கண்டுபிடிப்புக்கு  மக்கள் மத்தியில் நல்ல  வரவேற்பு கிடைக்கும்.  மாணவர்கள்  கணக்குப்  பாடத்தை மிகவும் கவனமாக படிக்க வேண்டும்.  கணக்குப்  பாடம் ஒன்றுதான் உங்களுக்கு கஷ்டமாக இருக்கும்.  மற்ற பாடங்களில்  அதிகமான மதிப்பெண்களைப் பெறுவார்கள்.  மேற்படிப்புக்காக் எதிர்பார்த்த வங்கிக்கடன்  கிடைக்கும்.

 

      கலைஞர்ளை பொருத்தமட்டில் இது ஒரு பொற்காலம். புதிய படவாய்ப்புகள்  வந்துசேரும்.  சினிமாவில்  ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் படவாய்ப்புகள் கைகூடி வரும்.  இப்போது நீங்கள் கால்சீட் படி பணியைச் செய்தல் மிகவும் உயர்ந்த இடத்திற்கு வருவீர்கள்.  குறைந்த  செலவு பட்ஜெட்டில்  படம் எடுப்பவர்கள்  கூடுதல் லாபத்தைப்  பெறுவார்கள்.  முதல்படமே  வெற்றிப்  படமாக  அமையும்.  போட்டி பொறாமைகள் உண்டு.  ஆனால்  குலதெய்வ அருளால் அவை விலகிச் செல்லும்.

 

   பரிகாரம்

 உங்கள் ராசி அதிபதியான குருவிற்க்கு வியாழக்கிழமை தோறும் மஞ்சள் வஸ்த்திரம் சாற்றி மற்றும் சுண்டல் மாலை சாற்றி வழிபட நல்லது நடந்தே தீரும்.

பசுவிற்க்கு வியாழக்கிழமை தோறும் அகத்தி கீரை வாங்கி தரவேண்டும்.

திருசெந்தூர் சென்று வர வேண்டும். நினைத்து நடக்கும்.

 வாழ்க வளமுடன் 

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter