Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

விருச்சிகம்

குருப்பெயர்ச்சி பலன்கள்

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

             இந்த  குரு பெயா்ச்சியால் அதிக நன்மைகள் அடையும் ராசிகளுள் விருச்சிகமும் ஒன்று.   விருச்சிக ராசிக்கு 2 , 5, ஆகிய இரண்டு முக்கியமான வீடுகளுக்கு அதிபதியாக  வரும்   கிரகம்  குரு   ஐந்துக்குடையவன் என்பதால் பூா்வபுண்ணிய  ஸ்தானாதிபதியாகவும்,    புத்திர ஸ்தானாதிபதியாகவும், பதவி   ஸ்தானாதி பதியாகவும் குரு விளங்குகிறது.  உங்கள் ராசிக்கு 2-ஆம்இடத்திற்கும் அதிபதியாக வரும் கிரகம் குரு என்பதால் தனம் , குடும்பம், வாக்கு, ஆகிய ஸ்தானங்களுக்கும் குரு பொறுப்பேற்கிறது,    அக்டோபா் 3 வரை 12-ஆம்   இடமான    விரயஸ் தானத்தில்  இருக்கும்  குரு அக்டோபா் 4-ந் தேதி ராசிக்குள்   பிரவேசிக்கிறது.   அடுத்த   ஒரு   வருட காலம்  மிகப்    பெரிய  அதிஷ்டமான  நேரம். இனி   வரவு   அதிகமாகும்   செலவு    குறையும்.     பொருளாதார  ரீதியாக மிகப்  பெரிய வளா்ச்சியை பார்க்கப்போகிறீா்கள்.    செல்வச் செழிப்பு மிகுதியாகும். 

     உங்கள்   செல்வச்   செழிப்பு உங்கள்   வாழ்நாளில்   இதுவரை   பார்த்திராத  அளவிற்கு   மிகப் பெரிய  செல்வம்  வந்து    சேரப்போகிறது.  அந்த   பெருஞ் செல்வத்தை   சரி  வர    பயன்படுத்தக்கூடிய   நல்ல    புத்திக் கூர்மையும்  குரு   கொடுக்கும்.   நிறைய பணம் சேரும்போது அதை அனுபவிபதற்கு ஏற்ற   உடல்   ஆரோக்கியம் வேண்டாமா? அதையும்   குரு   கொடுக்கும்   குடும்ப ஸ்தானாதிபதி   ராசிக்கும்   வருவதால் குடும்பவாழ்க்கை   மகிழ்ச்சியாக

இருக்கும்.   குடும்பத்தில் உள்ளவா்கள் அனைவரும்  ஒற்றுமையாக சோ்ந்து வாழக்கூடிய அற்புதமான நேரம்  அடுத்தடுத்து  சுப   நிகழ்ச்சிகள்   குடும்பத்தில்  நடக்கும் திருமணம்   ஆகாதவா்களுக்கு  இப்போது   திருமண தேதி  முடிவு செய்யப்படும். இல்வாழ்க்கையில்  அடியெடுத்து வைக்கப் போகிறீா்கள். உங்கள் மனதிற்கு  பிடித்தாற்போல் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.     ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் அமைதியான மகிழ்ச்சியான இல்வாழ்க்கை அமையும்.  திருமணம்  ஆ னவா்கள் நல்ல இணக்கத்துடனும், ஒருவரை ஒருவா் புரிந்து  கொண்டும் குடும்ப வாழ்க்கையை ரசித்து ருசித்து வாழக்கூடிய அற்புதமான நேரம்   ஆமரம்பமாகிறது.   5-ஆம் இடமான புத்திர ஸ்தானத்தைப் ஆண்  வாரிசைக்  உருவாகும்.    வம்சம்   தழைத்தோங்கும்      நேரம்   வந்துவிட்டது.   ஏற்கனவே  திருமணமாகி   பல ஆண்டுகளாகியும் இன்னும்  குழந்தை பாக்கியம் கிடைக்காத விருச்சிக  ராசியினருக்கெல்லாம் இப்போது நல்ல  சேதி  வந்து  சேரும்.

           நிரந்தரமாகாத பணியாளர்கள் நிரந்தரப்பணியை  அடைவார்கள்.  ஒரு சிலர் எதிர் பார்த்தபடி மாறுதல் பெறுவார்கள்.   இப்போது உங்கள்  உடன் பணிபுரியும் சக ஊழியர்கள் உங்களுக்கு மிகவும் ஆதாரவாக இருப்பார்கள்.  வர வேண்டிய நிலுவைத்  தொகை, பதவி உயர்வுகள் வந்து சேரும்.  தொல்லை கொடுத்து வந்த அதிகாரிகள்  மாறிச் செல்வார்கள்.  குரு உங்கள் ராசியில் உலா வருவதால்  கையூட்டுப் பெறுகின்ற ஒரு சில ஊழியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  தவறினால்  காவல் துறை நடவடிக்கைகள்  வர அதிகமான  வாய்ப்புகள்  உள்ளன.

      தொழிலாளர்கள்  வேலை செய்யும் இடத்தில்  நிதானமாகக்  செயல்பட வேண்டும்.  இப்போது நீங்கள்  அதிகமான வேலைப்பளுவை  சந்திக்கின்றீர்கள்.   தொழிற்சங்கத்தில்  ஏற்படும்  பிரச்சனைகள் சுமுகமாக  முடியாது.  எனவேதொழிலாளிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.  தொழிலாளி ஒற்றுமை விரிசலடையும். புதிய பங்குதாரர்களை நீங்கள் சேர்க்கும்போது யோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும்.  அதுவே  உங்களுக்கு  சிரமத்தைத்  கொடுக்கும்.  தொழில்  அதிபர்கள்  கவனமுடன்  செயல்படுவது நல்லது.

      குடும்பத்தில்  வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும்.  இருந்து வரும்  பிணி பீடைகள் கூடுதலாகாமல் பார்த்துக்  கொள்ள வேண்டும்.  ஒரு சிலருக்கு எந்த நோயும் இருக்காது.  ஆனால் அருகில் உள்ள தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.  மனபாரம் குறையும்.  கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். பொதுவாக  முரட்டுக்குணம் உள்ள பெண்கள் மென்மையான குணத்தோடு நடந்தால் மட்டுமே வாழ்க்கையை  வளமாக்க முடியும்.

     நீங்கள் பாடத்தை ஒன்றுக்கு மூன்று முறை படிக்க வேண்டும்.   கடுமையான முயற்சியால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற முடியும்.ஒரு சில மாணவர்களுக்கு  தண்ணீர் கண்டம் உள்ளது. உல்லாசப் பயணம் செல்லும்  நேரத்தில்  நீர் நிலைகளில்  விளையாடாமல்  இருப்பது நல்லது.  மற்றவர்கள்  சொல்லுவதைக் கேட்டு நடக்க வேண்டும்.  தாய்  தந்தையர் சொல்லுவதைக் கேட்டு நடக்க வேண்டும்.  

      விவசாயம் செய்வோர் நல்ல லாபத்தை பெறுவார்கள். நல்ல மகசூல் பெறவேண்டும் என்றால் உங்களின் நேரடி கவனம் வேண்டும். விவசாயத்தில் ஏற்றமான காலம் இது. மாடு கன்று பால் பாக்கிய விருத்தி ஏற்படும். ஒருசிலர் பால் பண்ணை வைத்து  நடத்தும் வாய்ப்பு கூடி வரும். வறுமை கோட்டிற்கு கீழ்வாழ்ந்தவர்களுக்கும் ஏற்றம் பெறும்  காலம்.

     கலைஞர்களைப்  பொருத்த அளவில் போட்டி அதிகரிக்கும்.  எனவே  புதிய பட வாய்ப்புகள்  பெறுவதற்கு முயற்சிப்பதைவிட உள்ள நிலைய மட்டும்  சீராக வைத்துக் கொள்வது நல்லது.  வரவைவிட செலவுகளே அதிகம் உள்ளது.  பொதுச் சேவையில் உள்ளவர்கள் மிகவும் கனிவானவர்களாக  மாறுவார்கள். அரசியல்  பிரமுகர்கள்  நினைத்தபடி தலைமையிலிருந்து நல்ல பதவி வந்து சேரும்.  பொது மக்கள் உங்கள் சேவைக்கு நல்ல பாராட்டு  உண்டு. 

பரிகாரம் :

பவுர்ணமிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

வியாழக்கிழமை தோறும் குரு விற்க்கு சுண்டல் மாலை சாற்றி வழிபடவேண்டும்.

மாதம் ஒருமுறை திருசெந்தூர்முருகனை தரிசனம் செய்ய நல்லது நடக்கும்.

 

வாழ்க வளமுடன்

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter