Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

விருச்சிக ராசி நேயர்களுக்கு (2014 To 2017) 

கடந்த 21/2 வருடங்களாக 7 ½ சனியின் கடுமையான காலகட்டத்தில் அதிலேயும் முதலாம் பதியான விரயச் சனியின் வலுவான பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். பிரசித்தமான 7 ½ சனியைப் பற்றிப் புதிதாகத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. விரயச்சனி என்கிற பெயரே போதும், அது எப்படிப்பட்ட காலம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு, வருகிற வருமானத்தையெல்லாம் பணத்தையெல்லாம் வாரி வாரிச் செலவில்விட்டுக் கையிருப்பைக் கரைப்பதுதானே, விரயச்சனியின்வேலையாகவே இதுவரையில் இருந்து வந்திருக்கிறது.

சில மாதங்களுக்குமுன் பாக்கிய ஸ்தானத்திற்கு வந்து உச்ச பலத்துடன் சஞ்சரிக்கிற குருபகவானின் கடாட்சம், கணிசமான வருமானத்தைக் கொடுத்துக் குடும்ப சுபிட்சத்தை அதிகரித்துவருவது சந்தோஷகரமான திருப்பம்தான். அதற்கடுத்து நடைபெற்ற ராகு- கேது பெயர்ச்சியில் ராகுபகவான் விரயச் சனியின் மோசமான கூட்டுச் சேர்க்கையை விட்டு விலகி லாபஸ்தானத்திற்கு வந்து இயங்குவதும், ஆதாய அபிவிருத்திகளை அளிக்கக்கூடிய நல்ல மாறுதல்தான். இந்த நிலைமையில் இதுவரையில் இருந்த விரயஸ்தானத்தைவிட்டு சனிபகவான் பெயர்ச்சியடையப் போகிறார் என்பது. மிகவும் முக்கியமான விஷயமாகும்.

வாக்கியப் பஞ்சாங்கப்படி 16-12-2014 ( ஐய வருடம், மார்கழி மாதம், 1ஆம் நாள்) செவ்வாய்க்கிழமை, பிற்பகலில் சனிப்பெயர்ச்சியாகும்.

2வருடங்களுக்கும் மேலாக உங்கள் விருச்சிக ராசிக்குப் 12ம் இடமான துலாராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சனிபகவான், அங்கிருந்து விலகி உங்களுடைய ஜென்ம ராசியிலேயே விருச்சிக ராசியிலேயே குடியேறுகிறார்.

உங்களுக்கு 7 ½ சனியின் காலமும், அதில் விரயச் சனியின் பகுதியும் இதுவரை நடைமுறையில் இருப்பதாக முன்னால் பார்த்தோம். இந்த 2014 நவம்பர் 2முதல், 7 ½ சனியின் நடுப்பகுதியாகிய ஜென்மச் சனியின் காலம் ஆரம்பமாகிறது. ஆகவே, இந்த ஜென்மச் சனியின் 2 ½ வருடங்களும், இதற்கு அடுத்ததாக வரவிருக்கும் பாதச் சனியின் 2 ½ வருடங்களும் சேர்ந்து 7 ½ சனியில் இன்னும் 5வருசங்கள் மீதம் இருக்கின்றன.

இனிமேலேயும் ஜெம்னச் சனியால் செயல் சிரமங்கள் அதிகம்தான். ஆனால், விரயச் சனி விலகி விடுவதாலும், அவருடைய கெடுதலான பார்வைகள் சில முக்கிய இடங்களைவிட்டு நீங்கி விடுவதாலும், சில நன்மைகளும் உண்டு என்பதைத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு ஆறுதலாக இருக்குமே

விரய ஸ்தானத்தை விட்டு சனி விலகிவிடுவதால், வீண் விரயங்கள் இனிமேல் கடுமையாகப் பாதிக்காது. கஷ்டப்படுவது உண்டு என்றாலும், நஷ்டப்படுவது மாறிவிடும். 2014 நவம்பர் 2ஆம் தேதி சனிராசி மாறுவதோடு, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் 2 ½ வருடங்களாகப் பாதித்து கொண்டிருந்த சனியின் கெட்ட பார்வையும் அங்கிருந்து விலகிப் போய்விடுகிறது. இதனால், வருமானக் குறைவால் இருந்த வாட்டம் விலகும். பற்றாக்குறைப் பிரச்சனனைகள் உபரியான பணவரவால் ஈடுகட்டிச் சமாளித்துக் கொள்ள முடியும்.

குடும்பத்தில் தட்டுப்பாடு, பிக்கல், பிடுங்கல்கள் பற்றாகுறையாய் பாதிப்புகள், குடும்ப வசதிகளைப் பெருக்கியக் கொள்வதற்கு முட்டுகட்டைகள் என்றிருக்கும் நிலவரம் இனிமேல் நீடிக்காது குறையும். குத்தலும் குதர்க்கமுமாகவே இருக்கும் நிலைமையும் இனிமேல் தொடராது. குடும்ப சுபிட்சம் கூடுதலாகும்.

அநாவசியமான பேச்சுவார்த்தைகள், அதிகப்படியான வாக்குவாதங்கள், தாறுமாறான பேச்சுக்களால் தகராறுகள், தடம்பிரளுகிற வாக்குகளால் நாணயப் பாதிப்புகள் என்றெல்லாம் சொல்வாக்கும் செல்வாக்கும் பாதிக்கப்பட்டிருந்த நிலைமையிலும் ஓரளவு சீர்திருத்தங்கள் உண்டாகும்.

சனியோரு பாபகிரகம் என்பதையும், பாப கிரகங்களில் மிகவும் பிரபலமானவர் என்பதையும், இந்தப் புத்தகத்தின் தலையங்கக் கட்டுரையில் பார்த்திருப்பீர்கள். இப்படி அசுபகிரகமான சனி உங்களுடைய ஜென்ம ராசியான விருச்சிக ராசியிலேயே நடமாடுவதால், அவருடைய தாக்கம் உங்களுடைய உடம்பிலும் மனத்திலும் வெளிப்படையாவே தெரிய ஆரம்பிக்கும்.

அதாவது ஜென்மச் சனி உங்களுடைய உடம்பின் நிறத்தையே மங்கும்படி செய்வார். சாஸ்திரப்படி சனியின் நிறம் கறுப்பு. ஆகவே, ஜென்ம ராசியில் அவர் சஞ்சரிக்கிறபோது சிவப்பாக இருப்பவர்களும் கூட ஓரளவு நிறம் குறைந்து காணப்படுவது சகஜம். கடுமையான வேலை, அதிகப்படியான அலைகழிப்பு, வெயில் படுவதின் பாதிப்பு, குளிக்கிற தண்ணீர்ன் தன்மை, இப்படி எதையாவது காரணமாகக் கொண்டு சனிபகவான் உங்கள் மேனிநிறத்தைக் கொஞ்சமாவது மங்க வைத்து விடுவார்.

அடிக்கடி தலைவாரிக் கொள்ளத் தோன்றாது. தலைமுடி கலைந்து கிடக்கும். சனிவர எண்ணெய் வைக்காமல் விட்டுவிடுவது உண்டு. முடி வறண்டோ, செம்பட்டை படிந்தோ கணப்படலாம். முகத்தில் அடிக்கடி வேர்வை வழியும், பவுடர், பூசாமல் விடுவதாலும், பளபளப்பு குறைந்தாற்போலத் தெரியலாம். அழுக்கான உடைகளாய் உடனுக்குடன் மாற்றாமல் அலட்சியம் காட்டலாம் பொருத்தமில்லாத ஆடைகளும் உங்களுடைய தோற்றாத்தின் அழகைக் குறைக்கலாம். அலங்கார ஆடம்பர விஷயங்களில் அதிக ஆர்வமும் நாட்டமும் இருக்காது. அதிகமான வேலை நெருக்கடிகளினாலாவது ஆடை அலங்கார விஷயங்களில் அவ்வளவாக கவனம் செலுத்த முடியாமல் மசமசப்பாகத் தெரிவீர்கள். உங்களுக்கே கண்ணாடியில் தெரியும்.

கூடுமான அளவில் கவனம் தேவை . நிதானமாக எல்லா செயலும் செய்யவும் நல்லது நடக்கும் வாகனத்தில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்லவும். வாழ்க்கை வாழ்வதற்குதான். ஆதலால் மிகவும் கவலைபடாமல் கடவுளை வழிபட்டு கவலைகள் அனைத்தையும் அவரிடம் சொல்லிவிட்டு   சந்தோஷமாக மனநிலையை உண்டாக்குங்கள்.

நல்லதுக்கு தான் அனைத்தும் நடக்கும்.     

மொத்ததில் 60 % நன்றாக இருக்கும்.

 

பரிகாரம்

பிரதி ஞாயிறு அன்று சிவ பொருமானுக்கு ருத்திராபிஷோகம் செய்யவும். இதனால் நினைத்த காரியம் கை கூடும். சர்க்கரை பொங்கல்,வெண் பொங்கல், நைவேத்யம் செய்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யவும்.

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter