Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

ரிஷபம்

 

   ராகு கேது பெயர்ச்சி  பலன்கள்  2019

       ரிஷபம்   ராசி  அன்பர்களுக்கு

   (கார்த்திகை  2-ம்  பாதம் முதல் ரோகிணி மிருக சீரிஷம் 2-ம்  பாதம் முடிய )

     ரிஷப ராசி  அன்பர்களே,  உங்கள்  ராசிக்கு  நட்பு   கிரகமான  குரு நன்மை தரும் முறையில்  இந்த ஆண்டு   மலர்கிறது. இந்த ஆண்டு தொடக்கமும் இறுதியும்   சிறப்பாக அமையும்.

  குருபகவான் தற்போது 7-ம்  இடத்தில்  இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கின்றனர். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில்  வளர்ச்சியை  தந்துக் கொண்டு இருக்கிறார்.  மேலும்  குருவின்  5-ம்  இடத்துப்  பார்வையும்   சிறப்பாக உள்ளது.  எனவே  குரு  குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை அதிகரித்து  தருவார்.   உத்தியோகஸ்தர்களுக்கு  உயர்வை தருவார்.   குரு மார்ச் 13-ன் தேதியில் இருந்து மே 19-ன்   தேதி வரை அதிசாரம் பெற்று  தனுசு ராசியில் இருக்கிறார்.  அப்போது அவரால் நன்மைதர இயலாது. இதனால்  குரு மன வேதனையும் நிலையற்ற   தன்மையையும், கொடுப்பார்.  பொருளாதார சரிவை ஏற்படுத்துவார்.  வீண்  விரோதத்தை உருவாக்குவார்.  ஆனால் அவரது 7-ம் இடத்து பார்வையால் எந்த பிரச்சியையும்,  முறியடிக்கும் வல்லமை கிடைக்கும்.  பகைவர்கள்  சரண் அடையும் நிலை ஏற்படும்.

சனி பகவான்  தற்போது 8-ம்  இடமான  தனுசு ராசியில் இருப்பது  அவ்வளவு  சிறப்பு அல்ல அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். அவரால் உறவினர்கள் வகையில்  மனகசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்படும்.  சிலர் ஊர்விட்டு உயிர்ச்செல்லும் நிலை உருவாகும். சனி 26-4-2019 முதல் 13-9-2019 வரை வக்ரத்தில் உள்ளார்.  இந்த  காலகட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும்.  அவரால் கெடுப்பலன்கள்   நடக்காது.

     இனி  விரிவான பலனை காணலாம் :

      தெய்வ  அனுகூலம் இருக்கும்.  பதவி  உயர்வு மேம்படும். பெரியோர்களின்   ஆதரவும்,  ஆலோசையும் கிடைக்கும்.  நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.  பொருள்  லாபம் அதிகரிக்கும்.  வசதிகள் பெருகும்.  எடுத்த காரியம்  வெற்றி  அடையும்.  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள்  நடைபெறலாம். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும்.  பிள்ளைகளால்  பெருமை கிடைக்கும்.  புத்தாடை,  அணிகலன்கள்,  வாங்கலாம். உறவினர்கள்   வருகையும்  அவர்களால்  நன்மையையும்  கிடைக்கும்.  மார்ச்  13-ந்  தேதிக்கு  பிறகு  வீட்டினுள் சிற்சில  பிரச்சினை வரலாம், கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் வீட்டுக் கொடுத்து போகவும்.  பொருள்  இழப்பு  ஏற்படலாம்.  உறவினர்கள் வகையில் மனக்கிலேசம் வரலாம்.  இருப்பினும் அவரது 7-ம் இடத்து பார்வையால் முன்னேற்றம் காணலாம்.  கணவன்- மனைவி  இடையே இருந்து  வந்த பிரச்சினைக்கு  தீர்வு  கிடைக்கும். 

உத்தியோகம்  பார்ப்பவர்கள். ஆண்டின் தொடக்கத்தில் குருவின் பலத்தால் நல்ல வளத்தை காணலாம். வேலையில் முன்னேற்றம் இருக்கும்.  பதவி உயர்வு கிடைக்க பெறுவீர்கள். மேல்  அதிகாரிகள்  அனுசரணையாக இருப்பர். சகா ஊழியர்களின்  ஆதரவு கிடைக்கும்.  சிலர்  வெளியூர் , வெளி நாடு செல்லும் வாய்ப்பு வரும். மேலும் குருபகவானின்  5-ம் இடத்து பார்வை  மூலம்  புதிய பதவி கிடைக்கும்.  ஆனால் மார்ச் 13-ந்   தேதியில் இருந்து மே 19-ந்  தேதி வரை வேலையில் பளு அதிகரிக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள்.  அதிக கவனத்துடன் இருக்கவும். அவர்களுக்கு  கடன் போன்ற கோரிக்கைகள்  நிறைவேற  தாமதம் ஆகும்.  அக்டோபர்   26-ந்   தேதிக்கு பிறகு நிலைமை ஓரளவு சீராகும்.

   வியாபாரிகள்  தற்போது சீரான நிலையில் இருப்பர். அதிகமான உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும்.  அதேநேரம்  உழைப்புக்கு  ஏற்ற வருமானத்தை காணலாம்.  மார்ச் 13-ந்   தேதியில் இருந்து மே 19-ந்  தேதி வரை ஒய்வு என்பதே இல்லாத நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.     எதிர்ப்பார்த்த  வருமானம் கிடைக்காமல்  போகலாம்.  யாரையும், எளிதில்  நம்பிவிட வேண்டாம்.  வரவு-செலவு  கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.  சிலர் தற்போதுள்ள இடத்தை  வேறு இடத்துக்கு மாற்றும்  நிலை ஏற்படலாம்.  புதிய  வியாபாரம்  தற்போது வேண்டாம்.

உங்கள்  நிலையில்  நல்ல மாற்றம் ஏற்படும்.  அதன்பின் நல்ல லாபம் கிடைக்கும்.  வேலையின்றி இருப்பவர்கள்  தொழில் ஆரம்பிக்கலாம். 

   கலைஞர்கள்  புதிய ஒப்பந்தம் கிடைக்க  பெறுவார்.  சிலருக்கு  அரசிடமிருந்து விருது,  பட்டம், கிடைக்கும்.  பொதுநல சேவகர்கள்  நல்ல வளத்தை  காண்பர். புதிய பதவி வரலாம்.  ஆனால்  மார்ச் 13-ந்  தேதியில் இருந்து மே 19-ந்  தேதி வரை அதிக சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தங்களை  பெற வேண்டியதிருக்கும்.  நவம்பரில்  இருந்து நல்ல பணப்புழக்கம் இருக்கும்.

     மாணவர்கள்   இந்த கல்வி  ஆண்டில் சிறப்பான பலனை பெறுவார்.  தேர்வில் தேர்ச்சியும், நல்ல மதிப்பெண்களும்  பெறலாம்.  ஆனால்  மார்ச் 13-ந்  தேதி முதல் மே  19-ந்  தேதி வரை  சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.  அதன்பின் ஆசிரியர்களின்  ஆதரவு  கிடைக்கும்.  விரும்பிய   பாடம் கிடைக்கும்.  விவசாயிகள்  ஆண்டின்  தொடக்கத்திலும்,  இறுதியிலும் நல்ல பலனை காணலாம்.  மார்ச் 13-ந்  தேதி வரை எள், கேழ்வரகு,  பழ   வகைகள்,   சோளம்  போன்றவற்றின்  மூலம் சிறப்பான  மகசூல்   கிடைக்கும்.  வழக்குகள்   உங்களுக்கு  சாதகமாக  அமையும்.  மார்ச் 13-ந்   தேதி முதல்  மே 19-ந்   தேதி  வரைகால்நடை   மூலம்  அவ்வளவாக  வருவாய்  கிட்டாது.  நவம்பருக்கு  பிறகு,  எள் உளுந்து, கொள்ளு,  பனை போன்றவற்றில்  நல்ல  வருவாய்,  கிடைக்கும்.  புதிய  சொத்து வாங்கலாம்.

பெண்கள்  உற்சாகத்துடன்  காணப்படுவீர்கள்.  சுப நிகழ்ச்சி களில் கலந்து கொள்ளும்   வாய்ப்பு  கிடைக்கும்.  கணவன்  மற்றும்  குழந்தைகளுடன்  புண்ணிய  ஸ்தலங்களுக்கு  சென்று வருவீர்கள்.   மார்ச் 13-ந்   தேதி முதல்  மே 19-ந்   தேதி வரை கணவர்   மற்றும்  குடும்பத்தாரிடம்  வீட்டுக்  கொடுத்து போகவும்  அக்கம்  பக்கத்தினர் வகையில்  வீண்  விரோதத்தை  உருவாக்குவார்.  வேலைக்கு  செல்லும்  பெண்கள் சிற்சில விஷயங்களில்  பொறுமையாக  விட்டுக்கொடுத்து  போகவும்.

  உடல்நலம் சிறப்பு  அடையும்.  கேதுவால்  சிற்சில  உபாதைகள்  வரலாம்.  ஆனால் பெரிய  பாதிப்பு ஏதும்  வராது. 

பரிகாரம்:   சனிபகவானுக்கு  நல்லெண்ணெய் தீபம்  ஏற்றி எள்  சோறும்  படைத்து வணங்கலாம். காக்கைக்கு  அன்னமிட்டு உண்ணுங்கள்.  துர்க்கைக்கு  எலுமிச்சை பழ  விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.  2019 மார்ச் 13-ந்  தேதியில்  இருந்து  மே 10-ந்   தேதி வரை   தட்சிணாமூர்த்தியை  வணங்கினால் உறவினர்கள்  வகையில் ஒற்றுமை ஏற்படும்.

 

 

      வாழ்க  வளமுடன் .

 

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter