Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

ரிஷப ராசி

ரிஷபம்

    கார்த்திகை நட்ஷத்திரம் 2,3,4 பாதங்களிலும் ரோகிணி நஷ்டத்திரம் மிருகசீரிட நட்சத்திரம் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களும், லக்னமான ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களும், சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப  ராசிக்கு உரிய நேயர்கள் ஆவார்கள்.

                                 இராசி மண்டலத்தின் கஜானா என்று சொல்லக்கூடிய பெருமை ரிஷபராசியைச் சேரும். இந்த ராசியின் அதிபதிக்கு சனிபகவான் நட்பு கிரகமாக இருக்கிறார். ரிஷபம் நிலத் தத்துவ ராசியாகும். அர்த்த திரிகோணத்தை சார்ந்தது தெற்குத்திசையைக் குறிக்கும்.

                                ஆச்சாரியார் என்ற பட்டம் பெற்றவர்கள் உங்கள் ராசிநாதன். சுக்ராசார்யாரின் அருளுக்கு பாத்திரமான ராசி ரிஷபராசி. திசையில் யோகமான திசை சுக்ரதிசை. 15 அல்லது 20 வயசுல இந்த திசை ஆரம்பமாச்சுனா ரிஷபராசிக்காரர்கள் தனக்கென பாதை ஒன்றை  அமைத்து இனிமையாக எல்லோரிடமும் பேசி, பிறரைக் கவரும் சாதுர்யம் கொண்டவராக  விளங்குவார்கள். கவலைப்படும் வேளையில் கூட காட்டிக் கொள்ளாமல் துவளாத மனத்தோடு தன் வேதனை மறந்து பிறர் துயர் துடைக்க முற்படுவர்.

                                 பொதுவாக ரிஷப ராசிநேயர்கள் பருத்த பலமான உடலையும் முகத்தில் மச்சம், மருவு போன்ற அடையாளம் உடையவாராவும், தீவிரமான உழைப்பாளியாகவும், சிவப்பாகவோ அல்லது மாநிறமாகவோ அழகிய எடுப்பான தோற்றத்துடனே  விளங்குவார்கள். தர்ம சிந்தனையும், எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும்  என்ற நல்ல மனமும், கடவுள் பக்தி நிறைந்தவராகவும் இணையற்ற செல்வம், உடையவராகவும் இருப்பார்கள். சகல சௌபாக்கியங்களும் உண்டு.

                                ஆன், பெண் சந்ததிகளோடு சுற்றம் புடைசூழ சிறப்பாக இருப்பீர்கள். வாழ்வின் முற்பகுதியில் கடின உழைப்பும் பிற்பகுதியில் சுகமான  வாழ்க்கையும் கிடைக்கப் பெறுவீர்கள். சகல வித்தைகளையும் அறிந்து கொண்டு நேர்மையாக  நடந்து கொள்ளும் தங்களோடு, உண்மையில்லாத பொய்யர்கள் பழகுவதும், நட்புக்  கொள்வதும் கஷ்டமான  ஒன்றாகும்.

                                இந்த ராசிக்காரர்களுக்கு தர்ம கர்மாதிபதியாகிய சனிபகவான் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அஷ்டமஸ்தானம் என்று  சொல்லப்படும் எட்டாமிடத்தில் அஷ்டமத்து சனியாக சஞ்சாரம் செய்ய உள்ளார். அஷ்டம ஸ்தானாதிபதியாகிய  குருபகவான் தற்போது 6ம் இடத்தில் அருள்புரிந்து வருகிறார். வருகின்ற ஆண்டுகளில் 7,8,9 ஆகிய 3 ஸ்தானகளில் சஞ்சாசரம் செய்ய உள்ளார். அதுபோல் தற்போது ராகுபகவான் 3ம் இடத்திலும், கேதுபகவான் 9ம் இடத்திலும் அருள் புரிந்து வருகிறார்கள்.

                                 பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி என்ற வாசகம் தங்களுக்கே உரியது. தொழில், வியாபாரம், உத்தியோகம் ஆகியவற்றில் ராஜயோகத்தோடு  லஷ்மி கடாக்ஷம் பெற்று வாழ்வீர்கள். சங்கீதம், நடனம், இயக்கும் ஆற்றல் பெறுவீர்கள். ஏறுபோன்று  நடை, உடை, பாவனை உடையவராகவும், குதர்க்கமாகப் பேசி எதிரிகளை அவமதிப்பதில் வல்லவராகவும், பிரகாசமானவராவும், சுபக்கிரகங்கள் சூரியனைப்போன்று உங்களை விளங்கச்  செய்யும்.

                                 கடந்த ஆண்டுகளில் 7ம் இடத்தில் சனிபகவான் ஏற்றத்தையும், இரக்கத்தையும் மாறி மாறி கொடுத்து இருப்பார்.பெரிய முன்னேற்றம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் பல காரியங்களை உங்கள் விசுவாசிகளை கொண்டு கட்சிதமாக முடித்து இருப்பீர்கள். நல்லவர்களுக்கு இன்முகத்தை காட்டி துரோகிகளிடம்  இருந்து தூர விலகி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்க்கையை ஒரே கோட்டில் நேர்மையான ரீதியில்  சத்தியத்தை கடைப்பிடித்து வாழ்க்கையை நகர்த்தி வந்திருப்பீர்கள். சிலர் தேவையில்லாத  வீண் பழிகள், வழக்குகளைக்கூட சந்தித்து பின்பு விடுபட்டு இருப்பார்கள்.

           சபைக்கு தகுந்தாற்போல் பேசி காரியத்தை வென்ற நீங்கள் தற்போது அஷ்டமத்துச்சனியின் பிடியில் இருக்கிறீர்கள். வேடத்தை மேடைக்கு ஏற்றார் போல் போட்டு திறமையை தாமதிக்காமல் வெளிப்படுத்தும் கெட்டிக்காரர்கள் நீங்கள் என்று  எல்லோருக்கும் தெரியும். இந்த அஷ்டமத்து சனியின் காலம் சவாலாகவே இருக்கும்.

          சுக்ரபகவான் எதையும் கிள்ளி கொடுக்க தெரியாது, அள்ளி அள்ளி  கொடுத்து ஆனந்தப்படுத்துவார். ஓகோ என்றுதான் இருக்கும். ஆனால் அஷ்டமச்சனியின் காலம், அதுமட்டுமல்ல குருபகவான் சத்ரு, ரோக, ருண ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதால் அச்சம் கொள்ள வேண்டாம். உங்கள் ராசி நாதனுக்கு சனி, குரு, புதன் ஆகிய முக்கிய கிரகங்கள் நட்பு கிரகமாக இருக்கிறார். மற்ற ராசிக்காரர்களை பார்க்கும்போது உங்கள் ராசியான ரிஷப ராசிக்கு கடுமையான பாதிப்பு இருக்காது. குறிப்பாக ரோகிணியின் பிறந்தவர்களுக்கு இருக்கவே இருக்காது. இருப்பினும் அவரின் ஸ்தானத்துக்கு சிறிய உபாதைகளை நாம்  எதிர்பார்க்கலாம். உங்கள் சிந்தனையில் மாற்றம் தென்படும். உழைப்பு, உழைப்பு என்று சுற்றி திரிந்த நீங்கள் மனதில் சலிப்பும், அலுப்பும் தொற்றிக்கொள்ளும். காளை  மாடுபோல் சுறுசுறுப்புடன் இருந்த நீங்கள் அமர்ந்து அசைபோட்டு ஆடுபோல் மாறக்கூடும். எப்பொழுதும் வேலையின் காரணமாக, பறந்து கொண்டு இருக்கும் விமானத்தைப்போல் உங்களை பிசியாக வைத்து இருந்த நீங்கள் தற்போது ஆலயத்தின் துவஜஸ்தம்பத்தின்  ரிஷப கொடியினை போல் பறக்க நேரும். இருப்பினும் போற்றி வணங்கி வழிபட கூடிய இடத்தில்  சிறிய அளவிலே பறந்து அருள் ஒளியை வீசுவீர்கள்.

வானமே எல்லை என்று பறந்த நீங்கள் எல்லைக்கோடு அமைத்து நீங்களே கட்டுப்பாட்டுடன் இருக்க நேரிடும். வீண் டென்சன் மனதில் கொண்டு சொல்ல படுவதால் எந்த பயனும் இல்லை. அனாவசியமான டென்சன் வாக்குவாதம் இவற்றை தவிர்க்க வேண்டும். தெரிந்த விஷயத்தை தர்மம் என்று உறக்கக்கூற முடியாது. கண் ஜாடையால் பிறருக்கு உணர்த்த முற்படுவீர்கள். கண்முன்னே நடக்கும் அநீதிகளை தடுக்க முற்படுவீர்கள். தவறை தடுக்க முடியாமல் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொள்ளும் நிலையம் வரலாம்.

      குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒருவரை ஒருவர் குறை சொல்வதையும், திட்டி கொள்வதையும் தவிர்க்க  வேண்டும். சிறிய சந்தேகம் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். சகோதர சகோதரிகளிடம் சொத்து பிரச்சனை ஏற்படும். பாகப்பிரிவினை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு அல்லது பெற்றோர்களுக்கு உடல் நலக்குறை ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு  செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கிய உறவினருக்கு அறுவைசிகிச்சை செய்யும் நிலை கூட வரலாம்.

       முன்பு சிகிச்சை எடுத்தவர்கள் சிலர், ஆங்கில வைத்தியத்தில் இருந்து சித்த வைத்தியத்திற்கு மாறுவார்கள். சிலருக்கு இதுநாள் வரையில் வராத நீரிழிவு நோய், கொதிப்பு, சளிதொந்தரவுகள் வரலாம். இரவு நேரத்தில் பிரயாணம் செய்வதையும், வாகனங்களில்செல்வதையும் தவிர்க்க வேண்டும். சிறு விபத்தால் கை, கால்,தலை, ஆகிய இடங்களில் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் முன்பைவிட தற்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திட்டமிட்ட உணவு, சரியான ஓய்வு, உறக்கம் முதலியவற்றை கடைபிடிக்க வேண்டும். குடும்பத்தில் பணவரவு சுமாராகவே இருக்கும். பணத்தை திட்டம் இட்டு செலவு செய்யவும். பணம் கொடுக்கும் தொழில் செய்பவர்கள் கூட உங்களுக்கு கடன் கொடுப்பதில் தாமதம் செய்வார்கள்.

         கூடுமானவரை ஆடம்பரச் செலவுகளை குறைத்து சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும். இன்னும் சிலருக்கு சில சில  உடல் அறுவை சிகிச்சையோ, மருத்துவ சிகிச்சைக்காகவோ மருத்துவமனைக்கு செல்ல நேரிடும். மருத்துவர் ஆலோசனைக்கு 3 நாட்கள் தங்கி சிகிச்சை பெறும் நிலை ஏற்படும். வெளியூர் செல்லும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். திருடர்கள் உங்கள் பணம், நகையைப் பறிக்கக்கூடும். வீண் அலைச்சலை  தவிர்க்க வேண்டும். யாரையும் நம்பி எதிலும் கையெழுத்து போட வேண்டாம்.

   வருகின்ற 29.10.2019 முதல் குருபகவான் 8ம் இடத்திற்கு பிரவேசிக்கிறார். இந்த காலகட்டத்தில்கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். பொதுவாக ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டால் நிச்சயம் நீங்கள் அஷ்டமத்து சனியில்  இருந்து தப்பிக்கலாம். ஒவ்வொரு சோமவாரமும் எதாவது ஒரு சிவாலயம் சென்று உங்கள் ராசியாகிய ரிஷபத்தை  வாகனமாக கொண்ட சிவபெருமானை நெய்த்தீபம் ஏற்றி தேவாரம் பாடி வலம் வந்து வணங்குங்கள். அவரின் அருளால் பிரச்சனைகள் மறைவதை உணருவீர்கள்.

      மேலும் இந்த அஷ்டமத்து சனியின் காலம் 3 ஆண்டுகள் 27.12.2020 அன்று பிரவேசிக்கிறார். எனவே அதுவரை எல்லாத்துறையை  சார்ந்தவர்களும் அமைதி காத்து கவனத்துடன் செயல்படுவது நன்மை பயக்கும். மேற்சொன்ன  தேதியில் இருந்து 9ம் இடமாகிய பாக்கிய ஸ்தானத்திற்கு பிரவேசிப்பது மிக மிக நல்ல காலமாக அமையப்போகிறது. பொங்கி வழியப்போகும் போர்க்களத்தை எதிர்நோக்கி இறைபக்தியுடன் இருங்கள், நன்மையாகவே  காலம் செல்லும்.

      பொதுவாக அனைத்து கிரக அமைப்புகளை ஆராய்ந்து பார்த்ததில் சுமார் 40% நன்மைகளை பலன்களும் 60% தீமையான பலன்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது.

பரிகாரம்

    குலதெய்வ வழிபாடு, இஷ்டதெய்வ வழிபாட்டுடன்,  தென்குடி திட்டை ஸ்ரீ வசிஸ்டேஸ்வரருக்கும் , ஸ்ரீ ராஜ குருபகவானுக்கும் அபிஷேகம் செய்து வணங்குங்கள்.

வாழ்க வளமுடன்

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter