Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

 

    ஆண் - பெண் இருபாலருக்கும் மணம் முடித்து வைக்கும் முன் ஜாதகத்தை ஆராய்யும்போது செவ்வாய் தோஷம் உள்ளதால் அதிகமான ஆண் - பெண்களுக்குத் திருமணம் தடைப்படுகிறது, தாமதமாகிறது. இதனால் பெற்றோர்களும் கவலை கொள்கிறார்கள்.

  லக்னத்துக்கு 2,4,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் பகவான் என்று உடனே முடிவு செய்து விடுகின்றார்கள். இது ஒரு தவறான ஜோதிட ஆய்வாகும். ஒருசிலர் அரைகுறையாகத் திருமணத்தை நிறுத்தி விடுகின்றார்கள். சாதாரண பொது விதியை மட்டும் கருத்தில் கொண்டு ஜாதகங்களைப் பார்க்கக் கூடாது.

   ஆனால் தேவ கேரளம் முதலிய சாஸ்திர கிரகங்களில் செவ்வாய் தோஷப் பரிகாரமாக பல காரணங்கள் கூறப்பட்டு இருக்கிறது. அந்த பரிகார கிரகத்தோடு ஜாதகம் இல்லாவிட்டால்தான் அதனை செவ்வாய் தோஷ ஜாதகம் என்று ஒதுக்க வேண்டும்.

    எனவே பெற்றோர்கள், உங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தில் கீழ்க்கண்ட விவரப்படி செவ்வாய் அமர்ந்திருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என்பதை நீங்களே அறியலாம். 16  வகைகளில் செவ்வாயைக் காண வேண்டும். அதன் பின்பே செவ்வாய் தோஷம் உண்டா?

இல்லையா? என்ற முடிவுக்கு வர வேண்டும்.

  1.  கடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய இரண்டு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.
  2.  செவ்வாய்  அமர்ந்துள்ள இரண்டாம் வீடு மிதுனம், கன்னி வீடுகளாய் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.
  3.  செவ்வாய் அமர்ந்துள்ள 4ஆம் இடம் மேஷம், விருச்சிக ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.
  4.   செவ்வாய் இருக்கும் ஆகிய 7ஆம் இடம் ஆகிய கடகம் மகர ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.
  5.  செவ்வாய் இருக்கும் 12ஆம் இடம் ஆகிய ரிஷபம், துலா ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.
  6. சிம்மம் அல்லது கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
  7. செவ்வாய் புதனுடன் சேர்ந்தால் தோஷம் இல்லை. புதன் பார்த்தாலும் தோஷம் இல்லை.
  8.  செவ்வாய் சூரியனுடன் சேர்ந்தாலும் சூரியன் பார்த்தாலும் தோஷம் இல்லை.
  9.  செவ்வாய் இருக்கும் ராசியின் அதிபதி (கிரகம்) லக்னத்துக்கு 1,4,5,7,9,10  இவற்றை ஆகிய இடங்களில் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.
  10.  லக்னத்துக்கு 8,12-ல் செவ்வாய் உள்ள ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசியாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.
  11. செவ்வாய் தனது உச்ச வீடான மகரம், சொந்த வீடான மேஷம், விருச்சிகத்தில் இருந்தால் தோஷம் இல்லை.
  12.  சனி, ராகு, கேது இவர்களுடன் கூடியாவது இந்த கிரகங்களால் பார்க்கப்பட்டாவது செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
  13. செவ்வாய் தன் நண்பர்கள் வீடான சூரியன், சந்திரன், குரு இவர்கள் வீட்டில் அதாவது சிம்மம் கடகம், தனுசு, மீனம், ஆகிய ராசிகளில் செவ்வாய் எங்கிருந்தாலும்   தோஷம் இல்லை.

     மேற்கண்ட 16 வகைகளில் செவ்வாய் தோஷத்தை ஆராய்யும் போது, செவ்வாய் தோஷம் என்பது அதிகம் பேருக்கு வராது. எனவே பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தை மேற்கண்டவாறு நீங்களே ஆய்வுசெய்து செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதை அறியலாம். அதற்குத் தகுந்த வரன்  தேடலாம்.

 

   திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் அதற்கு சரியான தெளிவான வகையில் தரப்பட்டுள்ள மேற்கண்ட விவரங்களை வைத்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உண்டா? இல்லையா? என்பதை அறிந்து செவ்வாய் தோஷத்தை முடிவு செய்ய வேண்டும்.

  

     செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரம்

ஆண் - பெண் இருவருக்கும் வள்ளி - தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதியில் திருமணம் செய்ய வேண்டும். அல்லது திருமணம் ஆனவுடன் தம்பதியர் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று முருகப் பெருமானை தரிசித்து வணங்கி வரவேண்டும்.. செவ்வாய்  தோஷம் விலகும்.

 

வாழ்க வளமுடன்

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter