Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

கன்னி

குருப்பெயர்ச்சி பலன்கள்

உத்திர நட்ஷத்திரம் 2,3,4ம் பாதம், ஹஸ்தம், சித்திரை நட்சத்திரம் முதல் இரண்டு பாதங்களுக்கு பிறந்தவர்கள், புதனை உச்ச வீடாகக் கொண்ட கன்னிராசிக்கு உரியவர்கள்.

     இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வ புண்ணிய சத்ரு ஸ்தானாதிபதியாகிய சனிபகவான் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அர்த்தாஷ்டம சனி என்று சொல்லப்படும் 4ம் இடத்திற்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார். சதுர்த, சப்தம கேந்திராதிபதியாகிய குரு பகவான் தற்போது 2ம் இடத்தில் அதாவது தனஸ்தானம், குடும்பஸ்தானம் மற்றும் வாக்கு ஸ்தானத்தில் இருந்து அருள்  புரிகிறார்.வருகின்ற ஆண்டுகளில் 3 மற்றும் 4 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்க உள்ளார்.

      இலக்கை நோக்கிய பயணம், எப்படி தண்டவாளத்தில் புகைவண்டி செல்கிறதோ அதுபோல் உங்களுக்கு என்று டிராக்போட்டு அதில் பயணம் செய்யாதீர்கள். தண்டவாளத்தை விட்டு ட்ரைன் விலகாமல் இடத்திற்கு தக்கபடி விவேகத்துடன் கூடிய நேரத்திற்கு வந்து சாதனை படைத்து இருப்பீர்கள். இன்னும் சில பேர் மூலதனமே இல்லாமல் திறமை தன்னம்பிக்கை பேச்சாற்றல் இவற்றைக் கொண்டு முன்னேறி மேதைகள் என்று நிரூபித்து காட்டி இருப்பார்கள்.

       சங்கடங்களை சட்டென்று சமாளிப்பதில் கெட்டிக்காரர்கள். வீட்டு பிரச்சனைகளை பல வகையிலும் விரட்டி அனுப்பி இருப்பீர்கள். வெளிப்பிரச்சனைகள் பலவற்றை வெளிச்சத்துக்கு வராதபடி வேரறுத்து இருப்பீர்கள். வெளிப்பிரச்சனைகள்  கடந்து, பல விரயங்களை தவிர்த்து, பண்பாக நடந்து அன்பால் அனைவரையும் அரவணைத்து  ஆனந்தப்பட்டுள்ளீர்கள். 3ம் இடத்தில் சனிபகவான் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான நன்மைகளை செய்துள்ளார்  என்றே சொல்ல வேண்டும்.

      வீடு, மனை, வாகனம், செல்வம், பதவி, ஆபரணம் அனைத்தும்  வந்து சேரும். மருத்துவர்கள், இயந்திரத்தைக் கொண்டு சார்ந்தவர்கள், அரசு  ஊழியர்கள், சிற்பிகள், இரும்பு வியாபாரிகள், காவல், ராணுவத்துறையை சேர்ந்தவர்கள், அரசியல் மற்றும் கலைத்துறையைச்  சேர்ந்தவர்கள் மிக நல்ல பலன்கள் பெறுவீர்கள். இனிவரும் காலம் உயர்வும் வேண்டாம் தாழ்வும் வேண்டாம் நிலையான வாழ்வு போதும் என்று வேண்டுகோள் வைப்பீர்கள்.

    உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில் முதல் கிரகமாக சனீஸ்வர பகவான்  இருக்கிறார். அதாவது சனீஸ்வர பகவானுக்கு புத்தமித்ரன் என்று பெயர். அப்படியானால் உங்கள் ராசிநாதன்  புதபகவானும், சனிபகவானும் நண்பர்கள். எனவே கவலை பட தேவையில்லை. எனவே அர்த்தாஷ்டம சனியாக உங்கள் ராசியில்  அடியெடுத்து வைக்கும் சனீஸ்வர பகவானை நமஸ்காரம் செய்து வரவேற்று ஆசனம்  கொடுத்து அமரவைத்து ஆரத்தி எடுத்து தீபம் ஏற்றி வணங்கி வரவேற்று உபசரியுங்கள். அவர் உங்கள் உபசாரணையில் உள்ளம் குளிர்ந்து உச்சி முகர்ந்து நிச்சயம் அருள் புரிவார். இருந்தாலும் மற்ற ராசிகாரர்களைவிட நீங்கள் சில சலுகைகள் பெற முடியும். அவர் ஸ்தானம் 4ம் இடம் மேலும், அவர் பார்வை 10,1 மற்றும் 6 ஆகிய 3 ஸ்தானங்களில் பதிக்கின்றது. இவற்றையும் கணக்கில் பார்த்தால் நன்மையையும் தீமையும் கலந்த காலமாக வரப்போகிறது என்றே சொல்ல வேண்டும்.

      தற்போது அர்த்தாஷ்டம சனி சேர்ந்துள்ளதால் நீங்கள் எச்சரிக்கையுடன் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். எதிர்காலத்தை முன்கூட்டியே திட்டமிட்டு உங்களுக்கே உரித்தான பாணியில் கொஞ்சம் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய காலம். இந்த காலகட்டம் ஏற்றம் என்றும் சொல்ல முடியாது. ஏமாற்றம் என்றும்  சொல்ல முடியாது.

      உங்கள் வாழ்க்கைப் பாதையில் ஒரு மாறுதல் நிகழப்போகிறது. அது நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகக்கூட இருக்கலாம். எனவே இரன்டையும் சமமாக ஏற்றுக்கொள்ளுங்கள். மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள். மனோதைரியத்துடன் இறைவன் மீது நம்பிக்கை வைத்து, இறைவழிபாட்டில் மனதை செலுத்தி, தியானப் பயிற்சி செய்து, முன்கோபத்தைக் குறைத்து,  அமைதியுடன் இந்த அர்தாஷ்டமச் சனியின் காலத்தை கடத்துங்கள் இறைவன் துணை நிற்பான்.

     அஷ்டமத்தில் சனி நிற்கும்போது கிடைக்கும் கெடுப்பாளனில் பாதியை இந்த அர்த்தாஷ்டம காலத்தில்  கொடுப்பார் என்று கோட்சார  நூல்கள் கூறுகின்றன. 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் 7 1/2 சனி முடிந்தது. கடந்து போன 3 ஆண்டுகளில் தான் பல வருஷத்துக்கு பின்பு பணப்புழக்கமும் சந்தோஷமும் இருந்து வந்தது, தற்போது 4ம் இடம் பிரவேசம்வேறு சிரமம் என்று சொல்கிறார்களே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இருந்தாலும் உள்ளதை சொல்வதுதான் உயர்வை கொடுக்கும் என்பதால்  அறிவுரை முன் யோசனை வழங்கும் விதத்தில் இதனை மனதில் வைத்து செயல்படுங்கள்.

       அர்தாஷ்டமசனியின் காலத்தில் சிறு சிறு சோதனைகள் கொடுத்து உங்களின் மனோதிடத்தை சோதிப்பார். ஸ்திரமான சொத்து சேர்க்கையால் பணம் செலவாகும். அதனால் பணம் திரட்ட முடியாமல் கடன் வாங்க வேண்டிவரும். தொழிலில் இருப்பவர்கள் முன்பு இருந்த நிலை மாறி போட்டிகளின் மத்தியில் வியாபாரம் செய்ய நேரிடும். அது மட்டும் அல்ல ஒரு பொருளை விற்பதற்கு நீங்கள் வாடிக்கையாளர்களிடம் விரிவாக எடுத்துக்கூறி நம்பிக்கையை பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டிவரும். இதனால் கோபம் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். செலவுகள் அதிகமாகும்.

     வருகின்ற 4.10.2018 குருபகவான் 3ம் இடத்திற்கு பிரவேசிக்க உள்ளார். இந்த காலகட்டம் சுமாராகவே அமையும். பக்கத்து வீட்டுக்காரர்கள் தெருவாசிகள் ஆகியோருடன் நல்ல வார்த்தைகளைப் பேசி இன்முகத்துடன் பழக முடியாவிட்டாலும் பல இடங்களில் மௌனத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லதாக அமையும். முன்பின் தெரியாதவர்களின் பேச்சை எக்காரணம் கொண்டும் கேட்க வேண்டாம். ஆன்மிக சிந்தனையையும், இறைவழிப்பாட்டையும் அதிகப்படுத்தி ஜபம் மார்க்கமாக பகவானை நினைத்து இருப்பது மனதுக்கு, புத்துணர்ச்சியையும், ஆறுதலையும் அதிக அளவில் கொடுக்கும்.

     மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். அனாவசியமான சிந்தனைக்கு மனதை சிதற விடாமல் படிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளை அலட்ச்சியம் செய்யாமல் பின்பற்றினால் மட்டுமே மதிப்பெண் பெற முடியும். வீண் செலவுகள் செய்வதை குறைத்து சேமிக்க வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் நம் முன்னேற்றத்திற்காக செய்யும் காரியங்களை ஏளனமாக பேசுவதைத் தவிர்க்கவும்.

      கலைஞர்கள் தங்களை தேடிவரும் வாய்ப்பு சிறிய வாக்குவாதத்தில் சகுனத் தடையினால் கூட கை நழுவிவிட  வாய்ப்பு உள்ளது. பெண்கள் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படுத்தும். ரத்தத்தை கிருமிகள் தாக்கி சிகிச்சை  பெற வேண்டி வரும். மருத்துவமனையில் தங்கி பின்னர் வீடு திரும்பும் நிலை ஏற்படும். குழந்தைகளின்  தேக நலத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

     வருகின்ற 13.2.2019 முதல் யோககாரகனான ராகுபகவான் 10ம் இடத்திற்கும்  கேதுபகவான் 4ம் இடத்திற்கும் பிரவேசித்து அருளுகின்றார்.

        10ம் இடத்தில் இருக்கும் ராகுபகவான் தொழில் துறையில் உத்தியோகத்தில் சாதகமான மாற்றத்தையும் நல்ல சூழலையும் ஏற்படுத்தி கொடுப்பார். சிலர் வியாபாரத்தை நல்ல இடத்தை தேர்வு செய்து மாற்றி நல்ல வாடிக்கையாளர்களை பெற்று லாபம் பெறுவார்கள். வீட்டில் சில கூடுதல் வசதிகள் செய்து கொள்வார்கள். வெளிவட்டார நண்பர்கள், அரசு, வங்கி உதவிகளை பெற்று நூதன முறையில் வியாபாரத்தை விரிவுபடுத்தி கொள்வார்கள். பொருளாதாரரீதியில் பலவகையில் முன்னேற்றத்தை இந்த காலகட்டத்தில் பெறமுடியும்.

      4ம் இடம் கேது குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகும். தாயாரின் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை  பின் குணம் ஏற்படும். தாய்வழி உறவினர்களுக்கு கூட சிறு பாதிப்புகள் நேரும். இன்னும் சிலர் பழைய வாகனத்தை  தேர்வு செய்து பணம் கொடுத்து வாங்கி பழுது நீக்க அனாவசிய செலவு செய்வார்கள். வீட்டில் உள்ள  பொருட்கள் ஒன்றன்பின் ஒன்றாக செலவு வைத்துக் கொண்டே இருக்கும். கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்டு நல்ல முறையில் வளர்த்து சந்தோஷப்படுவீர்கள். மார்பு சளியினால் ஏற்பட்ட தொந்தரவுகள் நீங்கும். பொருட்கள் களவு போகாமல் தடுக்க கேமராவை வீட்டிலும் அலுவலகத்திலும் பொருத்தி பாதுகாப்பை அதிகரிப்பார்கள்.

     இருப்பினும் வருகின்ற 29.10.2019 முதல் குருபகவானும் 4ம் இடத்தில் சஞ்சரிப்பது பல வகையிலும் நன்மையை தரும். உங்களிடம் இருந்த சோம்பேறித்தனம் மாறும். பொருளாதார முன்னேற்றத்திற்கு இருந்த தடைகள் படிப்படியாக அகலும். புத்திரர் வழியில் செய்த செலவுகள் தற்போது பலன் கொடுக்கும். மகனின் உத்தியோகம், வியாபாரத்தின் வாயிலாகவும் பணம் வரத்தொடங்கும். மனதில் முன்பு இருந்த குழப்பங்கள் நீங்கி மன  அமைதி ஏற்படும். விநாயகப்பெருமானின் ராசியான கன்னி ராசிக்காரர்களுக்கு எப்பேர்ப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கும் ஆற்றலை சனிபகவானே  வழங்குவர். தன்னலம் பாராமல் தெரிந்த விஷயங்களை மறைக்காமல், பிறருக்கு கற்று கொடுத்து, தவறு செய்தாலும் திருத்தி அவர்கள் முன்னேற துணைநின்று வெற்றி பெறச் செய்து நீங்கள் சந்தோஷப்படுவீர்கள். எதிலும் நேர்வழியில் நியாயத்தையும், நீதியையும் மனதில் வைத்து பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி வாழ்க்கையை நடத்தும் உங்களுக்கு எப்பொழுதும் நன்மையே நடக்கும்.   

      வருகின்ற 27.12.2020 முதல் சனீஸ்வர பகவான் 5ம் இடத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பிரவேசிக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலைகள் மாற இறைவழிபாட்டினை அதிகப்படுத்துங்கள். சனீஸ்வர பகவானை பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுக்கு அனைத்து ஆனந்தங்களும் கிடைத்து வேண்டுதல் நிறைவேற நானும் வேண்டிக் கொள்கிறேன். அனைத்து கிரஹ அமைப்புக்களையும் பார்க்கும்போது சுமார் 48% நன்மையான பலன்களும் 52% தீமையான பலன்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பரிகாரம்

      குலதெய்வ வழிபாடு அவசியம். குருபகவானுக்கு ஆலங்குடியில் அர்ச்சனை செய்து வரவும்.

வாழ்க வளமுடன்

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter